Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

ஸ்ரீ கச்சபேஸ்வரர் – மருந்தீஸ்வரர் கோயில் – திருக்கச்சூர்

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

இறைவன் : கச்சபேஸ்வரர் ,மருந்தீஸ்வரர் ,விருந்திட்ட ஈஸ்வரர் , தியாகராஜர்

இறைவி : அஞ்சனாட்சியம்பாள் ,இருள்நீக்கியமானால் ,அந்தக நிவாரணி அம்பாள்

தலவிருச்சம் : கல்லால மரம்  ,ஆலமரம் ,மருந்துமலை

தல தீர்த்தம் : கூர்ம தீர்த்தம்

ஊர் : திருக்கச்சூர்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : சுந்தரர்

தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 26 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 274  சிவத்தலங்களில் 259 வது தேவார தலமாகும்.சென்னையில் உள்ள ‘உபய விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் ,திருவான்மியூர் ,திருக்கச்சூர் ஆகிய மூன்றில் ஒன்றாகும் .

 இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன ஆலக்கோயிலாக கச்சபேஸ்வரர் கோயிலும் மலைக்கோயிலாக மருந்தீஸ்வரர் கோயிலும் உள்ளது ,இரண்டும் சேர்ந்தே தேவார கோயிலாகும் . முதலில் ஆலக்கோயிலை தரிசித்துவிட்டு பின்புதான் மலைக்கோயிலை தரிசிக்கவேண்டும் .

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

கச்சபேஸ்வரர் கோயில் :

  இறைவன் கச்சபேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சிறிய பாணத்தோடு காட்சி தருகிறார் .அஞ்சனாட்சியம்பாள் தனி சன்னதியில் உள்ளார்.சுந்தரர் அமுதுண்ட 16 கால் மண்டபம் உள்ளது.மற்றும் அமுதத் தியாகேஸ்வரர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் விஷ்ணு கூர்ம அவதாரத்தில் இறைவனை வழிபாடு செய்யும் சிற்பம் உள்ளது  

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மத்தாக நின்ற மந்தரமலை சரியத் தொடங்கியது. ஆகையால் திருமால், ‘கச்சம்’ என்ற ஆமை உருவம் கொண்டு மலையைத் தாங்கினார். அந்த மலையைத் தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி திருமால் வழிபாடு செய்தார். அந்தத் திருத்தலமே திருக்கச்சூர் என்று அழைக்கப்படுகிறது.

இத்தல இறைவன் தியாகராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை ஏற்று, இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம். ஆகையால் இங்குள்ள இறைவனை அனைவரும் ‘அமுத தியாகர்’ என்று அழைக்கின்றனர்.

சுந்தரருக்கு விருந்திட்ட இறைவன் : சிவ தல யாத்திரை மேற்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு முறை திருக்கழுக் குன்றம் சென்று விட்டு, காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். நீண்ட தூர பயணக் களைப்போடு, பசியும் சேர்ந்து சுந்தரரை வாட்டியது. அவர் கோவில் வளாகத்தில் அடியாளர்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை அறிந்த இறைவன், முதியவர் வடிவம் கொண்டு சுந்தரரிடம் வந்தார்.பின்னர் அவரிடம், ‘நீ பசியால் மிகவும் வாடியிருக்கிறாய். கொஞ்ச நேரம் இங்கேயே இரு. நான் உணவு கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார் முதியவர் உருவில் வந்த இறைவன்.ஊருக்குள் சென்ற இறைவன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று, உணவு கொண்டு வந்தார். அதனை சுந்தரருக்குக் கொடுத்து பசியாற்றினார். சுந்தரருடன் இருந்த அடியார்களும் உணவை உண்டு பசியாறினர். பின்னர் முதியவராக இருந்த இறைவன் மறைந்தார். வந்தது இறைவன் என்பதை அறிந்த சுந்தரர், இறைவனின் அருளை எண்ணி வியந்தார். பின்னர் இறைவனை  பற்றி பதிகம் பாடினார்.சுந்தரருக்காக பிச்சை எடுத்த சிவபெருமான், ‘இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோவிலுக்கு சற்று தூரத்திலும், சுந்தரருக்கு விருந்து படைத்த சிவன், ‘விருந்திட்டீஸ்வரர்’ என்ற பெயரில் ஆலயப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

மருந்தீஸ்வரர் :

இக்கோயில் ஆலக்கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சிறிய மேடான பகுதியில் அமைந்துள்ளது .மேற்கு நோக்கி இறைவன் மருதீஸ்வரரும் அன்னை நான்கு கைகளுடன் இருள்நீக்கியாம்பாள் காட்சிதருகிறார் .இத்தலத்தில் நான்கு முகங்களை கொண்ட சண்டீகேஸ்வரரை தரிசிக்கலாம் .

ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. இதையடுத்து அவன், தன்னுடைய தேவ மருத்துவர்களான அசுபதி, பசுபதியை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவரப் பணித்தான். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர்.

ஆனால் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள்நீக்கி அம்மை’ என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீசர் எனப்பட்டார்.

இக்கோயிலில் படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய நடைபாதை கிணறு உள்ளது .

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

கோயில் திருவிழா :
ஆலக்கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தில் ஒன்பதாம் நாள் தக்ஷீணமூர்த்தியாக சனகாதி முனிவர்களுக்கு சின் முத்திரை உபதேச நிகழ்ச்சி நடைபெறும் மற்றும் மலைக்கோயிலில் மாசியில் ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது சுந்தரருக்கு இறைவன் இரந்து விரிந்திட்ட திருநாள் நிகழ்ச்சி நடைபெறும் .

இவ் இருக்கோயில்களும் அழகிய கிராமத்தின் மத்தியில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது ,இரண்டு கோயில்களுக்கும் கோபுரங்கள் இல்லாமல் மொட்டை கோபுரமாகவே காணப்படுகிறது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kachabeswarar-maruntheeswarar.html

கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .00 -11 .30 வரை மாலை 5 .30 மணி -8 .30 மணி வரை .
தொடர்பு எண்: 044 -27464325 ,9381186389  

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

செல்லும் வழி:
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோயில் இடத்தில இறங்கி அங்கிருந்து சுமார் 2 km தொலைவில் இவூருக்கு செல்லலாம் . சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஷேர் ஆட்டோ வில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்றால் அவர்கள் பெட்ரோல் பங்க் முன்னர் இறக்கி விடுவார்கள் அங்கிருந்து நடந்து செல்லலாம் ,அல்லது சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஆட்டோவில் செல்லலாம் . காரில் சென்றால் மறைமலர் நகரின் ford நிறுவனத்தின் எதிர்புறம் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.அருகில் சிங்கப்பெருமாள் நரசிம்மர் கோயில் மற்றும் ஹயக்ரீவர் கோயிலுக்கும் செல்லலாம் .

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

The temple was believed to have been constructed in the Chola period by the Chola King Kulothungan-I. This a typical Chola period temple with beautifully engraved pillars, sculptures and halls (mandapams). Lots of engraved reliefs depicting the history of the temple can also be seen on the pillars. 

This is a twin temple – Sri Kachabeswarar temple is at the foothill and in the midst of the village and the other one is Sri Maruntheeswar temple, which at the top of a small hill at a distance of about one kilometre. 

This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 26th Shiva Sthalam in Thondai Nadu.   

Location

ஓம் நமசிவாய 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *