Sri Panchanatheeswarar Temple- Thiruvandarkoil

ஸ்ரீ பஞ்சநாதீஸ்வரர் கோயில் – திருவாண்டார்கோயில் (திருவடுகூர் )

Sri Panchanatheeswarar Temple- Thiruvandaarkoil

இறைவன் : பஞ்சநாதீஸ்வரர்,வடுகூர்நாதர் ,வடுகீஸ்வரர்

இறைவி : திரிபுரசுந்தரி ,வாடுவகிரக்கன்னி,

தலவிருச்சம் : வன்னி மரம்

தல தீர்த்தம் : வாம தேவ தீர்த்தம்

புராண பெயர் : வடுகூர்

ஊர் : திருவாண்டார்கோயில்

மாநிலம் : பாண்டிச்சேரி

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 16 வது தலமாகும் மற்றும் தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 227 வது தலமாகும் . அருணகிரிநாதர் இத்தல முருகனை தன திருப்புகழில் பாடியுள்ளார் .

அஷ்ட பைரவர்களில் ஒருவராகிய வடுக பைரவர் ,முண்டகன் என்ற அசுரனை கொன்ற பழிதீர வழிபட்ட தலமானதால் இத்தலம் ‘வடுகூர்’ என்று பெயர் பெற்றது .

இத்தல கல்வெட்டுகளில் இக்கோயில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது .மற்றும் முதலாம் ராஜசோழன் ,முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலதுங்க சோழனின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன .

Sri Panchanatheeswarar Temple- Thiruvandaarkoil

இக்கோயிலுக்கு ராஜா கோபுரம் கிடையாது ,சுற்றுசுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டுமே உள்ளது .தஞ்சை பெரிய கோயிலை போன்று கருவறை விமானம் அமைந்துள்ளது .இப்போது இக்கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

மூலவர் சுயம்பு லிங்கமாக இடது புறமாக சற்று சாய்ந்தநிலையில் காட்சிதருகிறார் .சிவனின் மீது வடுக்கள் உள்ளன ஆதலால் அவருக்கு தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்கின்றனர் .

பதினெட்டு கால் மண்டபத்தை கடந்தவுடன் தயார் சன்னதி உள்ளது .தாயார் நான்கு கைகளுடன் எழிலாக காட்சிதருகிறார் .

முருகப்பெருமான் 6 திருமுகங்களுடன் 12 திருக்கரங்களுடன் மயில் மீது  அமர்ந்தபடி  வள்ளி தெய்வானையுடன் காட்சிதருகிறார் .இவரை அருணகிரிநாதர் தன திருப்புகழில் பாடியுள்ளார் .

Sri Panchanatheeswarar Temple- Thiruvandaarkoil

கோஷ்டத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் போர் கோலத்தில் காட்சி தருகிறார் .துர்க்கையின் இடது புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் வலது புறத்தில் பிரதோஷநாயனார் ஆகியோர்கள் வீற்றியிருக்கிறார்கள் .மற்றும் கோஷ்டத்தில் வேறு எங்கும் காணமுடியாத ‘யோக நிலையில் ஈசன் ‘,பிச்சாண்டவர் சிலைகள் உள்ளன .

பைரவர் ,தாயார் ஆகியவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-panchanatheeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 முதல் 10 .00 வரை மாலை 6 .00 முதல் 8 .00 மணி வரை

தொடர்பு எண்: ரவி குருக்கள் – 9894995191

செல்லும் வழி:
விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் திருபுவனை ஊருக்கு அருகில் இவ்வூர் உள்ளது . எல்லா பேருந்துகளும் இவ் ஊரில் நின்று செல்லும் .மற்றும் பேருந்து நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் சாலையின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

I visited this temple with my Brother Mr.Ravi .

One of Devara hymns place. Arunagirinathar hymns about this temple God Murugan. this is the only place God shiva shirne in Yoga muthra position. this temple constructed by chola period.

Location

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *