Tag: 274 devara sthalam

Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் கோயில் – திருவலம் இறைவன் -வில்வநாதீஸ்வரர், வில்வநாதர் இறைவி – தனுமந்யாம்பாள், வல்லாம்பிகை தலவிருச்சம் – வில்வம் தலதீர்த்தம் – கௌரி தீர்த்தம் பாடியவர்கள் – சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,அருணகிரிநாதர் சிவனின் தேவார பாடல் பெற்ற 276 சிவா தளங்களில் 242 வது தலமாகும் ,தொண்டை நாட்டு தேவார தலங்களில் 10 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன திருப்புகழில் இத்தல முருகரை பாடியுள்ளார் . இந்த ஊர் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் மற்றும் சாளுக்கிய ஆட்சி காலத்திற்குட்பட்ட வந்தப்புறம் அல்லது தீக்காலி வல்லம் என அழைக்கப்பட்டது . முன்மண்டபத்துடன் கூடிய 4 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அதை கடந்து உள்ளே சென்றால் இடது புறத்தில் மௌன சாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த அம்பிகேஸ்வரர் சன்னதி மற்றும் பெரிய நாகலிங்க மரம் உள்ளது . வலதுபுறத்தில் கௌரி தீர்த்தம் உள்ளது . பின்பு 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை உள்ளே சென்றால் உற்சவர் மண்டபம் . பக்கத்தில் காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார் . கொடிமரத்திற்கு முன் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது அவர் இத்தலத்து  இறைவனை பூஜித்துள்ளார். கொடிமரத்தின் பின்னால் மிகப்பெரிய வடிவிலான சுதையால் ஆன நந்தி சாமிக்கு எதிர்புற திசையை நோக்கி பார்க்கிறது .அதுபோல் மூலவர் சந்நிதியின் முன் உள்ள நந்தியும் சாமிக்கு எதிர்புற திசையை நோக்குகிறார் . சாமியை நோக்கியவாறு அதிகார நந்தி நின்றபடி உள்ளார். நந்தி இவ்வாறு பார்ப்பதற்கு ஒரு புராண காரணம் உள்ளது .இவ் நந்தியானது கஞ்சனகிரி என்ற மலையை நோக்கியவாறு இருக்கிறது .அது இபோது காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது . இம்மலையில் கஞ்சன் என்ற அரக்கன் இருந்து வந்தான் , இவ் மலையில் இருந்துதான் அப்போது திருவளத்தில் உள்ள ஈசனுக்கு தினமும் தீர்த்தம் வரும் ,ஒருநாள் இவ்வாறு வருகையில் அதை தடுப்பதிற்காக கஞ்சன் அங்கு வந்தான் .  உரியோர் செய்வதறியாது இறைவனை வேண்டினார் .இறைவன் நந்தி பெருமானை அனுப்பி வைத்தார் .அவரும் காஞ்சனோடு போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின் ,லலாடம் விழுந்த இடம் ‘லாலாபேட்டை ‘ என்றும் , சிரசு விழுந்த இடம் ‘சிகராஜபுரம் ‘,வலக்கால் அறுபட்டு விழுந்த இடம் ‘வடகால் ‘, இடது கால் அறுபட்டு விழுந்த இடம் ‘தென்கால் ‘, மணிக்கட்டு விழுந்த இடம் ‘மணியம்பட்டு ‘ என்றும் ,’குளகயநல்லூர்’ என்ற ஊர்  மார்பு பகுதி விழுந்த  இடம் என்று வழங்கப்பெற்றது . இவையெல்லாம் திருவலத்தை சுற்றி 3 km தொலைவில் உள்ளது . வாயிலை கடந்தவுடன் நேரே சிவலிங்க திருமேனியில் வில்வநாதீஸ்வரர் தரிசனம் தருகிறார் . வாயிலை கடந்தால் ,தட்சணாமூர்த்தி சீடரான சனக முனிவரின் ‘திருவோடு ‘ சாமிக்கு நேராக வெளியே பிரதிஷ்டை  செய்துள்ளார்கள் . கருவறை அகழி போன்ற அமைப்பில் உள்ளது .கருவறை மூலத்திருமேனியும் ,உற்சவ திருமேனியும் மேலும் கீழுமாக இருவரிசையில் வைக்கப்பட்டுள்ளது . மூலவர் கோபுரத்தில் எல்லா நட்சத்திரங்களின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . சங்கரநாராயணர் வலதுபுற மாடத்தில் உள்ளார் .இடது புறத்தில் ‘பாதாளஸ்வரர் ‘ சன்னதி உள்ளது . மூலவர் சுயம்புவாக சதுர பீடத்தில் வீற்றியுளார் .இங்குள்ள விநாயகர் கையில் மாங்கனி உள்ளது . ஊருக்குள் ‘நிவா ‘ நதி ஓடுகிறது . இந்த நதிக்கரையில்தான் இக்கோயில் அமைந்துள்ளது .இறைவன் தீர்த்தத்தை பொருட்டு ‘நீ வா ‘ என்றழைக்க இவ் நதி அருகில் ஓடி வந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது . தற்போது ‘பொன்னை ஆறு ‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 – 12 .00 , மாலை 4 .00 -8 .00 வரை Photos: https://alayamtrails.blogspot.com/2021/06/sri-vilvanatheswarar-temple-thiruvalam.html செல்லும் வழி: சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 130km  தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 15 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் அமைந்துள்ளது . அருகில் உள்ள கோயில்கள் : 1. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் – மேல்பாடி -10 km 2 . அரிஞ்சய  சோழன் பள்ளிப்படை – மேல்பாடி 3. வள்ளி தாயார் பிறந்த இடமும் ,முருக பெருமான் வள்ளியை காதலித்த இடமும் ஆன வள்ளிமலை – 16 km Location Map

Read More Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

Sri Panangatteswarar Temple – Panayapuram

Sri Panangatteswarar Temple – Panayapuram

ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர்  கோயில் – பனையபுரம் இறைவன் –   பனங்காட்டீஸ்வரர் இறைவி – மெய்யம்மை தலவிருச்சம் – பனைமரம் தல தீர்த்தம் – பத்மதீர்த்தம் ஊர் – பனையபுரம் மாவட்டம் – விழுப்புரம் பாடியவர்கள் – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 231 வது தலம். நடுநாட்டு தேவார தலங்களில் 20 வது தலம் . இக்கோயிலின் கருவறை சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழனின் காலத்தை சேர்ந்தது .சிங்கமுக தூண்கள் விஜயநகர காலத்தை சேர்ந்தது …

Read More Sri Panangatteswarar Temple – Panayapuram

Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர் இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தல விருச்சம் : வன்னி ,கொன்றை தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம் ஊர் : திருவாமத்தூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர், சுந்தரர் ,சம்பந்தர் ,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் இது 21 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் 232 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் …

Read More Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் – திரு காளஹஸ்தி இறைவன் : காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை தல விருச்சம் : மகிழம் தல தீர்த்தம் : சுவர்ணமுகி ஆறு ஊர் : காளஹஸ்தி மாவட்டம் : சித்தூர் , ஆந்திரா பிரதேசம் பாடியவர்கள் : அப்பர்,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 19 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இது 252 வது தலமாகும் …

Read More Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Nellaiappar Temple- Thirunelveli

Sri Nellaiappar Temple- Thirunelveli

ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி இறைவன் : நெல்லையப்பர் இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன் தல விருச்சம் :மூங்கில் தீர்த்தம் : பொற்றாமரை குளம் ஊர் : திருநெல்வேலி மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் தேவார பாடல் பெற்ற பாண்டிநாட்டு தளங்களில் இது 14 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 204 வது தலமாகும் .அம்மனின்  51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடமாகும் …

Read More Sri Nellaiappar Temple- Thirunelveli

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் – திருவிடைமருதூர் இறைவன் : மகாலிங்கேஸ்வரர் இறைவி :  பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி தல விருச்சம் : மருதமரம் தீர்த்தம் : அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம் ஊர் : திருவிடைமருதூர் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்கள் 276 இல் 93 வது தலமாகும் …

Read More Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …

Read More Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Thyagarajar Temple- Thiruvarur

ஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர் இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார் இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள் தல விருச்சம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம் ஊர் : திருவாரூர் மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் …

Read More Sri Thyagarajar Temple- Thiruvarur

Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் – திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் ) இறைவன் : பாடலீஸ்வரர் , கன்னிவன நாதர் ,கரையேற்றும் பிரான் இறைவி : பெரியநாயகி ,தோகையம்பிகை,ப்ரஹநாயகி தல விருச்சம் : பாதிரி தல தீர்த்தம் : சிவகர தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் , புராண பெயர் : பாடலிபுத்திரம் ,சதுர்வேதிமங்கலம் ,கன்னிவனம் ,வடபுலியூர் ,திருப்பாதிரிப்புலியூர் ஊர் : கடலூர் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் …

Read More Sri Padaleeswarar Temple- Thirupathiripuliyur

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur

ஸ்ரீ கச்சபேஸ்வரர் – மருந்தீஸ்வரர் கோயில் – திருக்கச்சூர் இறைவன் : கச்சபேஸ்வரர் ,மருந்தீஸ்வரர் ,விருந்திட்ட ஈஸ்வரர் , தியாகராஜர் இறைவி : அஞ்சனாட்சியம்பாள் ,இருள்நீக்கியமானால் ,அந்தக நிவாரணி அம்பாள் தலவிருச்சம் : கல்லால மரம்  ,ஆலமரம் ,மருந்துமலை தல தீர்த்தம் : கூர்ம தீர்த்தம் ஊர் : திருக்கச்சூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சுந்தரர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 26 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற …

Read More Sri Kachabeswarar & Maruntheeswarar Temple- Thirukachur