Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

ஸ்ரீ லவபுரிஸ்வரர் கோயில் – கோயம்பேடு இன்றைக்கு நாம் தரிசிக்க போகும் கோயில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில், தென் இந்தியாவில் இருந்து தினமும் மக்கள் வந்து போகும் இடத்தில் யாரும் அறிந்திடாத சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட்  மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தின் மிக அருகில் வீற்றியிருக்கும் லவபுரீஸ்வரர் கோயிலை பற்றித்தான்இந்த பகுதியில் பார்க்கபோகிறோம் . வால்மீகி முனிவர் கூறுவது போன்று, மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண  கதையும் நிலைத்திருக்கும். தீமையை ஒழித்து …

Read More Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

Kottai Mariyamman Temple – Salem

Kottai Mariyamman Temple – Salem

கோட்டை மாரியம்மன் கோயில் – சேலம்  500 வருட பாரம்பரியம் கொண்ட இந்தத் திருத்தலம், திருமணி முத்தாறு நதிக்கரையில் உருவானது.  சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த தலம் , தங்கள் வீரர்களைத் தங்க வைக்க எழுப்பப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அந்த வீரர்கள் இந்த அம்மனை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளாவட்டத்தில் கோட்டை  மாறி குடியிருப்புகளான  போது, இந்த அம்மன் கோட்டை மாரியம்மன் என்று பெயர் பெற்றாள் . சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், …

Read More Kottai Mariyamman Temple – Salem

Sri Rajaganapathy Temple – Salem

Sri Rajaganapathy Temple – Salem

ஸ்ரீ இராஜகணபதி கோயில் – சேலம்  சேலத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு கோயில் இந்த இராஜகணபதி கோயிலும் ஒன்றாகும் . சுமார் 400 வருடங்கள் பழமையான கோயிலாகும் . கோயில் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது . சேலம் வருவார்கள் இந்த தலத்து விநாயகரை தரிசிக்காமல் திரும்புவதில்லை , அவ்வளவு பெருமைக்குரிய கோயில் . இறைவன் விநாயகர் தினமும் இராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் இவருக்கு “இராஜகணபதி ” என்ற பெயர் ஏற்பட்டது . காலை …

Read More Sri Rajaganapathy Temple – Salem

Sri Sugavaneshwarar Temple – Salem

Sri Sugavaneshwarar Temple – Salem

ஸ்ரீ சுவர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் கோயில் –  சேலம் இறைவன் : சுகவனேஸ்வரர் , கிளிவண்ணமுடையார் இறைவி : சுவர்ணாம்பிகை , மரகதவல்லி தல விருச்சம் : பாதிரி மரம் ஊர் : சேலம் மாவட்டம் : சேலம் . தமிழ்நாடு சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். ஈசன் இங்கு ஒரு பக்கம் சாய்வாக காணப்படுகிறார் , மற்றும் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு …

Read More Sri Sugavaneshwarar Temple – Salem

Aippasi Annabishekam For Lord Shiva

Aippasi Annabishekam For Lord Shiva

ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் . இதையே பட்டினத்தார் தன் பாட்டில் “ அன்னையோடு அறுசுவை உண்டிபோம்  ” என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் . இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் . “அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் “ என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் . இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது . ஐப்பசி மாதம் சிறப்பு : இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும்  பூமியை நோக்கி வீசுகிறதாம் . வானவியலில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி அதனால் நம் ரிஷிகள் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கூறினார்கள் . ஒவ்வொரு அன்னமும் சிவரூபம் …

Read More Aippasi Annabishekam For Lord Shiva

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salaem

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salaem

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஊரில் புராதான சிறப்புகளோடு இந்த கோதண்டராமர் கோயில் அமைந்திருக்கிறது . முகநூலில் வந்த இந்த கோயிலின் சிறப்பை பார்த்து நான் பிரமித்துபோய் எனக்கு எவ்வளவு விரைவாக பார்க்க முடியுமோ பார்த்திவிடவேண்டும் என்ற ஒரு அவா இருந்தது , அது இவ்வளவு விரைவாக எனக்கு கிட்டும் என்று எண்ணவில்லை  எல்லாம் அந்த இறைவன் செயல். வடக்கில் உள்ள அயோத்தி சென்று ராமரை வணங்குவதால் கிடைக்கும் …

Read More Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salaem

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் – வில்லிவாக்கம் – சென்னை மூலவர் : தாமோதரப் பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல தீர்த்தம்  : அமிர்த புஷ்கரணி ஊர் : வில்லிவாக்கம் , சென்னை வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக அவதரித்து, கோகுலத்தில் யசோதை தாயிடம்  வளர்ந்தார். அவர் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . இவரை அடக்க முடியாமல் திணறிய தயார் அவருடைய இடுப்பில் கயிறை கட்டினார். யசோதை தாயால் …

Read More Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

கபிலர் குன்று – திருக்கோயிலூர் திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள “கபிலர் குன்று” என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கபிலர் குன்றுக்கு பின் ஒரு நட்புக்கு இலக்கணமான இரு நண்பர்களின் கதையும் , அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான கதையும் சுமந்து இருக்கிறது . இந்த கற்பாறையில் ஒளிந்திருக்கும் அந்த கதை நமக்கு தெரிந்தால் நம் இதயம் சிறிது கனத்து போவது உறுதி . நாம் பாரி மகளிர் …

Read More Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

Sri Subramanya Swamy Temple – Tiruchendur

Sri Subramanya Swamy Temple – Tiruchendur

திருச்செந்தூர் பாலசுப்ரமணியசாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலமுருகனை பற்றி பாடியுள்ளார் .  சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.  முருகப்பெருமான் சூரனை வெற்றி கொண்ட பிறகு  தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூசை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது …

Read More Sri Subramanya Swamy Temple – Tiruchendur

Sri Chenna Malleeswarar Temple – Chennai

ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில் – பூக்கடை , சென்னை சென்னையின் பரபரப்பான வியாபாரம் நடைபெறும் பூக்கடை மற்றும் மின்ட் பகுதியில்   கட்டடங்களோடு கட்டடமாக இக்கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது . உயர்நீதி மன்றத்தை பார்த்தாற்போல் கோயிலின் நுழைவாயில் அமைந்துள்ளது .சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் அமைப்பு : வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார்.இதற்கு பக்கத்தில் …

Read More Sri Chenna Malleeswarar Temple – Chennai