Sri  Poornathrayeesa temple – Tripunithura

ஸ்ரீ பூர்ணாத்ரயீச கோயில்  – திரிபுனித்துரா

Sri  Poornathrayeesa temple – Tripunithura

எர்ணாகுளத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த திருப்புனித்துராவில் உள்ள பூர்ணத்ரீசா கோயில் . இக்கோயிலானது கேரளாவில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றாகும் . அதுமட்டும் அல்லாமல் இந்த பூர்ணத்ரீச ஆலயம் பழைய கொச்சி வம்சத்தின் எட்டு அரச கோயில்களில் ஒன்று என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. சந்தானகிரிஷ்ணராக இங்கு விஷ்ணு பகவான் காட்சிகொடுப்பதால் இவர் குழந்தை பாதுகாவலராக விளங்குகிறார்.

கொச்சியில் உள்ள மிக பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் , கேரளா கட்டடக்கலையில் மிக அழகாக ராஜகோபுரம் உள்ளது . அவ் ராஜகோபுரத்தில் வர்ணங்கள் பூசப்பட்ட அழகிய சிற்பங்கள் உள்ளது . கோயிலின் உள் நுழைந்தால் விளக்கு கம்பம், கொடி கம்பம்  மற்றும் பலி பீடம் உள்ளது . கோயில் மிக பிரமாண்டமாக உள்ளது , கோயில் சன்னதியின் சுற்றுசுவரில் தீபங்கள் ஏற்றுவதற்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது , கோயிலை சுற்றி வரும் வழி முழுவதும் மணல் கொட்டியுளார்கள் .

 பூர்ணத்ரயீசா  என்ற பெயர் பூர்ணம், திரா , ஈசன் ஆகிய மூன்று வார்த்தைகளால் உருவானது. பூர்ணா என்றால் முழுமையான , திரா என்றால் மூன்று ,ஈசா என்றால் ஈஸ்வரன் .

புராணம் :

ஒரு பிராமணனின் இறந்த  பத்து குழந்தைகளுக்கு மறுபிறவி கொடுக்க  அர்ஜுனன் இறைவனின் உதவியை நாடியபோது , விஷ்ணு பகவான் அர்ஜுனனுக்கு பூர்ணதீஸ்வரர் சிலையை அளித்ததாக புராணம் கூறுகிறது .பத்து குழந்தையும் ,புனிதமான அந்த சிலையையும் அர்ஜுனன் தன் தேரில் ஏற்றிச்சென்றான் , குழந்தைகளை பிராமணனிடம் ஒப்படைத்தார் , இந்த நிகழ்வின் நினைவாகவே இக்கோயிலானது தேர் வடிவ கருவரையுடன் இக்கோயில் கட்டப்பட்டது.விஷ்ணுவை பிரதிஷ்டை செய்வதற்காக அர்ஜுனன் கணேச கடவுளை  வேண்டி கேட்டுக்கொண்டார்.அதுவரை பிரதான கோயிலின் மேற்கில் அமைந்துள்ள அரண்மனையில் சிலை வைக்கப்பட்டது , தற்போது பூனித்துரா கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது .

இவூரின்  புனிதத்தை கண்டு விநாயகர் அந்த இடத்தை தனக்காக ஆக்ரிமிக்க முயன்றார்  ,  இருப்பினும் அர்ஜுனன் அவரை கருவறையின் தெற்கு பக்கம் தள்ளி அங்கேயே அவரது சிலையை நிறுவினார் , இதனால்  வழக்கத்துக்கு மாறாக விநாயகர் உள் பிரகாரத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளார். இக்கோயிலில் விநாயகர் பெருமானை தவிர வேறு எந்த உபதேவதைகளும் வழிபடுவதில்லை .

ஸ்ரீ பூர்ணத்ரயீஸ்வரர் :

இறைவன் இங்கு அனந்தனின் ஐந்து தலையின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சிதருகிறார் , மற்றும் பாம்பின் மீது சாய்ந்த தோரணையில் உள்ளார் , பாம்பின் மடித்த உடலே இறைவனுக்கு இருக்கையாக உள்ளது , இறைவனின் இரண்டு மேல் கைகளில் சங்கு மற்றும் சுதர்சன சக்கரம் உள்ளது , மற்றும் கேழ் வலது கையில் பத்மம் உள்ளது ,கீழ்  இடது கை பாம்பின் மீது உள்ளது .

1920 ஆம் ஆண்டு , இக்கோயிலின் பெரு பகுதி தீ விபத்தில் சிதலமடைந்தது. ஆனால் சிலைகள் பாதுகாப்பாக எடுத்து வைத்து ,1921  ஆண்டு சிறந்த கட்டிட கலை நிபுணரான ஸ்ரீ ஈச்சர வாரியரால் மீண்டும் புனரமைக்கப்பட்டது . இந்த கோயிலில் இரண்டு மாடி கட்டிடம் உள்ளது . கோபுரத்தின் முதல் தலத்தில் ஒரு மண்டபமும் அதில் அழகான எட்டு மாற தூண்களும் உள்ளது .

கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள கோபுரம் 11 நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும் . கோயிலுக்கு முன் உள்ள கெடா விளக்கு இங்குள்ள ஒரு சிறப்பு பெற்ற விளக்காகும் , அர்ஜுனன் இந்த விளக்கை தான் முதலில் ஏற்றினான் என்று நம்பப்படுகிறது .

திருவிழாக்கள் :

இங்கு விருச்சிக்கோல்சவம் (நவம்பர்- டிசம்பர்  மாதத்தில்) கொண்டாடப்படுகிறது ,இந்த விருச்சிகோற்சவம் விழாவானது உலகின் மிகப் பெரிய கோயில் திருவிழாவாகும் விருச்சிகோத்சவ விழாவில் 40 க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்கின்றன. பூர்ணசந்திர ஈசர் யானைகளை விரும்புபவராக கருதப்படுவதால், யானைகளின் உரிமையாளர்கள் பலர் பணத்தை எதிர்பார்க்காமல் யானைகளை உறசவத்திற்கு அனுப்புகின்றனர்,உத்தரம் விளக்கு (பிப்ரவரி-மார்ச் ) மாதத்தில் கொண்டாடப்படுகிறது .

மிகவும் அழகான பிரமாண்டமான தனித்துவமான ஆலயம் , மிகவும் அமைதியான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளதால் நம் மனதுக்கு ஒரு அமைதியை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/04/sri-poornathrayeesa-temple-tripunithura.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 4 .00 மணி முதல் 11 .15  வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு

 8 .15 வரை .

செல்லும் வழி :

எர்ணாகுளம் ரயில்வே ஜங்ஷன் லிருந்து சுமார் 10 km  தொலைவில் இக்கோயில் உள்ளது. இங்கிருந்து கொச்சின் மெட்ரோ ரயில் உள்ளது . திரிபனித்துரா இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் இவ் தலத்திற்கு செல்லலாம் .

Tripunithura is a temple town which is 10 km from Ernakulam. The palace of the erstwhile king of Cochin is situated in this town. Poornathrayeesa (lord Vishnu) is the family deity of the Cochin kings. This temple is famous for the yearly festival Vrishchikoltsawam, which is conducted every year in the month of November / December. The other cultural festival includes the Athachamayam which is held during the harvest festival of Onam. It is believed that the Poorna Veda Puri, mentioned in many Sanskrit texts is Tripunithura. The river that flows in between Tripunithura and Poonithura is believed to be the Poorni River which has a mention in Hindu epic Ramayana.

Location:

ஓம் நமோ நாராயணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *