Sri Manimoortheeswaram uchishta Ganapathy Temple – Tirunelveli

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி  கோயில் – திருநெல்வேலி

Uchishta Ganapathy Temple - Tirunelveli

இறைவன் : மூர்த்தி விநாயகர் ( உச்சிஷ்ட கணபதி )

தல விருச்சம் : வன்னிமரம் , பனைமரம்

தல தீர்த்தம்  : ரிஷி தீர்த்தம் ,சூத்ரபாத தீர்த்தம்

ஊர் : திருநெல்வேலி

மாவட்டம் : திருநெல்வேலி , தமிழ்நாடு

உலகில் எந்த ஒரு ஆலயத்திற்கு நாம் சென்றாலும் முதலில் விநாயகரேயே வணங்குவோம் , அந்த விநாயகரை மூலவராக கொண்டு மிக பெரிய ராஜகோபுரத்துடன் கூடிய பழமையான  கோயில்கள் சில கோயில்களே உள்ளன . அந்த சில கோயில்களில் ஒன்றுதான் இந்த உச்சிஷ்ட கணபதி கோயில் .

நாம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கவேண்டுமா ? அப்போ நீங்கள் உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் . விநாயகரின் 32 திருஉருவங்களில் 8 வது திருவுருவம் உச்சிஷ்ட  கணபதி ஆவார் .

கோயில் அமைப்பு :

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைதியான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது .சிதைந்து போன பெரிய மதில்சுவர்கள் இக்கோயிலின் முந்தய பிரமாண்டத்தை நம் கண் முன் வந்து செல்வதை நம்மால் மறுக்க முடியாது . ஐந்து நிலை ராஜ கோபுரம் , மூன்று பிரகாரங்கள் , எட்டு மண்டபங்கள் என பிரமாண்டமாக இக்கோயில் காட்சி அளிக்கிறது . சுமார் 900 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படுகிறது .

ராஜ கோபுரத்தின் உள் நுழைந்தால் வெளி பகுதி விசாலமாக காட்சி அளிக்கிறது , அதன் பின் உள்ள நுழைவு வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் கொடிமரம் ,பலிபீடம் மற்றும் விநாயர் வாகனமான மூஷிகம் உள்ளார் , அவரை வணங்கிவிட்டு நாம் அடுத்து வரும் மண்டபத்திற்கு சென்றால் நேரே கருவறை உள்ளது .

உச்சிஷ்ட கணபதி :

கிழக்கு நோக்கிய கருவறை சன்னதி முன் மண்டபதோடு காணப்படுகிறது . கருவறையில் மூர்த்தி விநாயகர் என்ற பெயரோடு அவர் பக்தர்களுக்கு அருளை வாரி அருளுகிறார் .

கிழக்கு நோக்கிய கருவறையில் விநாயகப் பெருமான், நான்கு கரங்களுடன், தன் தேவியான நீலவேணி தாயாரை  மடியில் இருத்தி, அவரை அணைத்தபடியும், அவரது மடி மீது தனது துதிக்கையை வைத்த படி அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார்.

முன் மண்டபத்தில்  நெல்லையப்பர் தனி  சன்னதியில் உள்ளார் .

உள் சுற்று பிராகாரத்தை  வலம் வரும்போது விநாயகரின் 32 திருவடிவங்களில் முதல் 16 கணபதி ‘ஷோடச கணபதி’ வகைகள் என்றும், அடுத்த 16 கணபதி ‘ஏக விம்சதி’ வகை என பிரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் 16 ஷோடச கணபதி வடிவங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஒரே கோயிலில் எல்லா விநாயகரையும் தரிசிப்பது என்பது நாம் செய்த பாக்கியம் என்றே கூறலாம் . மற்றும் காந்திமதி அம்மையார் சன்னதி , பதஞ்சலி முனிவர் , வியாக்கிரபாதர் முனிவர் ஆகியோரின் ஜீவ சமாதியும் உள்ளது .

இங்கு சண்டிகேசுவரர் சன்னதியிலும் விநாயகரே சண்டிகேசுவரராக காட்சியளிக்கிறார்.இங்கு சித்திரை மாதம் முதல் நாள் அதிகாலை சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலவர் உச்சிஷ்ட கணபதி மீது விழுகிறது.

கோயிலின் வெளி  பிரகாரத்தை வலம் வந்தால் சூரியன் , சந்திரன் ,கன்னி கணபதி , வள்ளி தெய்வானை சமேத முருகர் ,ஸ்வர்ண ஆகாஷ பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம் .

திருவிழாக்கள் :

இங்கு தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாள் கணபதி ஹோமத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை இத் தல மூலவர் உச்சிஷ்ட கணபதியின் மீது சூரியனின் ஒளிக் கதிர்கள் விழும். சூரிய பகவான் அன்று விநாயகரை பூஜை செய்வதாக ஜதீகம்.இங்கு ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியை கொடியைற்றமாகி பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;

ஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;

கம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;

ஓம் நம: உச்சிஷ்ட கணேசாய

ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா

Temple Photos :

https://alayamtrails.blogspot.com/2022/12/sri-manimoortheeswaram-uchishta.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணி முதல் நன்பகல் 12 .00  மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை .

செல்லும் வழி :

திருநெல்வேலி ரயில்நிலைய சந்திப்பு மற்றும் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 km  தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . நடந்தும் செல்லலாம் அல்லது ஆட்டோவில் செல்லலாம் .

English:

This Uchishta Ganapathy temple is on the banks of the river Tamirabarani and at a distance of 2 kms from Tirunelveli Railway Station. Uchchista Ganapathy is the 8th form of the 32 forms in which Lord Vinayagar is worshipped.   He has Neelaveni in his lap. There are sannidhis for Lord Nilayappar , Kanthimathi amman, Kannimoolai Kanapathi,16shodasa ganapthis, valli devanai sametha Subramanyar and  Swarna Akarshana Bhairavar,  Pathanjali Munivar and Vyagrabathar are installed in linga roopam.    

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *