Sri Kalabhairavar Temple – Adhiyaman kottai -Dharmapuri

ஸ்ரீ தக்ஷிணகாசி கால பைரவர் கோயில் – அத்தியமான்கோட்டை , தர்மபுரி

Sri Kalabhairavar Temple - Adhiyaman kottai -Dharmapuri

எல்லா சிவாலயங்களிலும் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்,ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். அதுபோல்  மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். இந்த உன்மந்திர பைரவர் இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தனி கோயிலாக  உள்ளார் ; காசியில் தனி காலபைரவர் கோயிலாகவும் , தர்மபுரியில் உள்ள அதியமான் கோட்டையில் கால பைரவர் தனி கோயிலாக உள்ளார் . இவரை தென் தக்ஷணகாசி கால பைரவர் என்று அழைக்கிறார்கள் .

கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை ,இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட தெற்கு நோக்கிய கோயிலாகும். முன் பகுதியில் பைரவரின் நாய் வாகனத்திற்கு தனி மண்டபம் உள்ளது , பின்பு முன்மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் நாம் மகமண்டபத்தை அடையலாம் அங்கிருந்து நாம் இக்கருவறையில் வீற்றியிருக்கும் காலபாரைவரை வணங்கி அவரின் பரிபூர்ண ஆசியை பெறுவோம் .

கால பைரவர் :

கோயிலின் உட்கூரையில் 9 நவகிரக சக்ரத்தை புதுப்பித்து கட்டியுள்ளார்கள். மேலும் மூலவரின் திருவுருவில்  12 ராசிகளும் , 9 நவகிரக கோயில்களும் அடங்கப்பெற்றுள்ளது . குறிஞ்சி பூ  முடித்து, தும்பை பூச்சூடி ,காதில் சங்கு வளையம் தொங்க, கழுத்தில் பளிங்கு மாலையும் ,நாகத்தை பூணலாகவும் ,வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரிசூலமும் , இடது மேல்கரத்தில் பாசுபத சாஸ்திரமும் ,கீழ் கரத்தில் கபாலமும் , தலைக்கு மேல் நெருப்பு பிழம்பும் கொண்டு விளங்குகிறார் .

  இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும்.

வரலாறு :

அப்போது சிறிய மன்னராக இருந்த அதியமான் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்தது , அவர்களை வெல்ல நினைத்து தனக்கு மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜகுருவையும் அமைச்சர்களையும்  கலந்து ஆலோசித்தார்.  தன் பகை மன்னர்களிடம் இருந்து பாதுகாக்க படைபலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவரை வணங்கினால் வெற்றி கிட்டும் என்று கூறினார்கள் .

கால பைரவரைப் பற்றி அறிந்துகொண்டதும், தன் அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, காலபைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன.

இக்கோயிலின் மகாமண்டபத்தின் வெளிசுவற்றில் போர்க்கள காட்சிகள் சிற்பமாக வடித்துள்ளார்கள்.

பரிகார வழிபாடு :

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பல் பூசணி  விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

கல்வெட்டு :

கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூரை ஆண்ட  அதியமான் நெடுமான் அஞ்சியின் மரபினரால் கட்டப்பட்ட கோயிலாகும் . இந்த தகடூரை தற்போது தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது . இங்குள்ள கல்வெட்டுகளில்  போசள மன்னனான வீர நரசிம்மனின் தானைத்தலைவனான மாதவ தண்ட நாயக்கனின் அமைச்சனான பரமெய் சகானி என்பவராலேயே இக்கோயில் கட்டப்பட்டது என கி.பி 1235 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிக்கிறது. அக்காலத்தில் இக்கோயில் பரமேசுவரமுடையார் கோயில் என அழைக்கப்பட்டுவந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

This Kalabhairavar temple is the most famous temple in Dharmapuri. This temple bairava is different from other bairava. bairava is a deterrent unmantira bairava. the special of the unmantira bairavar has 27 stars and 12 zodiac signs. people with Aries as their zodiac sign shall pray his head to clear their dosha .

More Photos:

https://alayamtrails.blogspot.com/2023/03/sri-kalabairavar-temple-adhiyaman.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் மதியம் 12 .00 மணி வரை , மாலை 4 .00  மணி முதல் இரவு 8 .00 மணி வரை

Contact Number: 04342-244123, 09443272066

செல்லும் வழி :

சேலம்- பெங்களூர் நெடுஞசாலையில் தர்மபுரியில் இருந்து சுமார் 5 km  தொலைவில் அதியமான் கோட்டை என்ற இடத்தில  சாலையின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *