Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் (சுக்ரன் தலம்) – மாங்காடு

Sri Velleswarar Temple-Mangadu

இறைவன் : வெள்ளீஸ்வரர் ,பார்கவேஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீ காமாட்சி

தீர்த்தம் : சுக்ரதீர்த்தம்

தல விருச்சகம் : மாமரம் , வில்வம்

ஊர் : மாங்காடு

மாவட்டம் : காஞ்சிபுரம்

  • சுக்ராச்சாரியார் சிவ தரிசனம் பெற்ற இடம்.
  • இக்கோவிலில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட வள்ளி தெய்வயானை சமேத முருக பெருமான் உள்ளார்.
  • தட்சணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடது புறத்தில் திரும்பியிருப்பதும் , லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும் ,பிரயோக சக்கரத்தில் விஷ்ணுவும் வணங்கியபடி இருப்பது வேறு கோயில்களில் காணமுடியாத சிறப்பு .
  • விநாயகரின் கையில் மாம்பழம் உள்ளது. மாங்கனி விநாயகர் என்று பெயர் .
  • துர்க்கைகையின் கையில் பிரயோக சக்ரம் உள்ளது இத்தகைய கோலத்தில் துர்கையை பார்ப்பது அரிது
  • இறைவன் மிக பெரியதாக ஜொலிப்புடன் காட்சிதருகிறார்
  • கண் குறைபாடு உள்ளவர்கள் வணங்கவேண்டிய கோயில்
  • நந்தி தேவரின் முன் காமாட்சியம்மை நின்ற பாத சுவடுகள் உள்ள பீடமே இங்கு அம்பாள் சன்னதி. காஞ்சிக்கு செல்லும்முன் சிவபெருமான் சுக்கிரனுக்கு தரிசனம் கொடுப்பதை இங்கு நின்று கண்டு மகிழ்ந்தார்.
  • தல புராணம் :தாழங்குடை பிடித்து கமண்டலம் சுமந்து வாமனர் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி நிலம் தானமாக கேட்டார் அதற்க்கு மகாபலி ஒரு ஊரையே தானமாக தருவதாக கூறினார், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை இதனால் சுக்க்ராச்சாரியார்க்கு ஐயம் ஏற்பட்டது.சுக்ராச்சாரியார் மகாபலியை தனியாக அழைத்து இவன் குள்ளன் மட்டும் அல்ல கள்ளன். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று கூறினார், மகாபலி கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டான். சுக்கிறார் ஒரு சிறுவண்டாக உருமாறி மகாபலி மனைவியின் கையில் உள்ள கெண்டியின் துவாரத்தை அடைத்துக்கொண்டார் .மஹாபலி மந்திரம் கூறி நீர் வைக்கும் சமயம் நீர் வரவில்லை , உடனே வாமனர் கிழே இருந்த தர்ப்பையை எடுத்து துவாரத்தை குத்த தண்ணீரும் ,உதிரமும் சேர்ந்து வெளியே வந்தது . ஒரு கண் குருடாகி சுக்ரர் கிழே விழுந்தார் .தானத்தை தடுத்த பாபம் தீரவும் ,கண்ணொளி பெறவும் ஈசனை நோக்கி மாங்காட்டில் தவம் புரிந்தார் அதே வனத்தில் தாயாரும் தவம் புரிந்தார் .இவர்களுக்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அம்பாளை காஞ்சிபுரத்து சென்று தவம் இருக்க சொல்லி சுக்ராச்சாரியாருக்கு இங்கே காட்சி தந்தார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-velleeswarar-temple-mangaduchennai.html

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

காமாச்சி அம்மன் கோயிலின் பின் புறத்தில் சுமார் 1000 மீட்டர் தொலைவில் உள்ளது .
காலை : 6 .30 முதல் 1 .00 வரை
மாலை 4 .30 முதல் 9 .00 வரை

location:

Leave a Reply