Eri Katha Ramar Temple- Mathuranthagam

ஏரி காத்த ராமர் (எ) கோதண்டமார் திருக்கோயில் – மதுராந்தகம்

Eri Katha Ramar Temple, Mathuranthagam
Raja Gopuram 

மூலவர் : திருக்கல்யாண கோலத்தில் சீதாலட்சுமி சமேத ஸ்ரீ கோதண்டராமர் , ஏரி காத்த ராமர்

தாயார் : ஸ்ரீ ஜனக வல்லி

உற்சவர் : கருணாகரப் பெருமாள்

ஊர் : மதுராந்தகம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

 • ராமருக்கு சிறப்பான கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ராமர் சீதையை கை பற்றியவாறு காட்சி தருகிறார் .
 • உடையவருக்கு ராமானுஜம் என்ற திருநாமம் சூட்டப்பட்ட திவ்ய தலம்.
  இங்குதான் இவர் தீட்சை பெற்று துறவறம் மேற்கொண்டார் . இங்குதான் ராமானுஜர் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டுக்கும் வெண்ணிற வஸ்திரம் சாத்தப்படுகிறது ஏனனில் தீட்சை பெறும்முன் கிரகஸ்த கோலத்தில் இங்கு வந்ததால் இங்கு இவரை குடும்பஸ்தர் கோலத்தில் காணலாம் . இக்கோலம் வேறு எங்கும் காண முடியாத தரிசனம் .
 • ராமர் கோயிலுக்கு பின் உள்ள ஏரி அடிக்கடி மழை காலங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்து பெரும் நாசத்தை விளைவித்தது . லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலக்டெர் எவ்வளவு முயற்சி செய்தும் ஏரி உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. அப்போது கோயில் அர்ச்சகர் அவரிடம் அம்பாள் சன்னதியை கட்டிக்கொடுக்குமாறு கேட்டு கொண்டார் ,அதெற்கு அவர் உன்னுடைய ஸ்வாமிக்கு சக்தி இருப்பின் இந்த ஏரி பிரச்னையை தீர்த்து வைக்கட்டும் பின்பு அதைப்பற்றி சிந்திக்கலாம் என்று கூறிவிட்டார் . மழை காலம் வந்தது ஏரி உடையும் தருவாயில் கலெக்டர் அந்த இடத்தை பார்வையிட சென்றார் அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் கையில் வில்லுடன் இருந்தனர் அவர்கள் கையில் உள்ள அன்பில் இருந்து ஒரு மின்னல் போல் ஒளி ஏற்பட்டு அந்த ஏரி உடையாமல் தடுத்தன . அப்போதுதான் அவருக்கு புரிந்தது அவர்கள் ராமர் மற்றும் லக்ஷ்மணர் என்று . உடனே அந்த அம்பாள் சன்னதியை அவர் கட்டிக்கொடுத்தார். இதன் விவரங்கள் அம்பாள் கோயிலின் சன்னதியில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன .
 • இக்கோயிலிருந்து ஏரி கரைக்கு சுரங்க பாதை ஒன்று உள்ளது
 • கம்பர் ராமாயணத்தை எழுதும் முன் ராமர் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொண்டார் அப்போது இத்தலத்தில் வந்தபோது சிங்கம் உரும்பும் சத்தம் கேட்டது . அவர் பயந்து அந்த இடத்தை பார்க்கும் போது நரசிம்மர் லட்சுமி தேவியுடன் காட்சி தந்தார் . பிற்காலத்தில் சிங்கமுகம் இல்லாமல் மனிதமுகத்துடன் பிரகலாத வரதன் சிலை வடிவமைக்கப்பட்டு நிறுவபட்டது .
 • ராமர் கோயில் என்றாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும் கருணாகர பெருமாளே முதன்மையாக கருதப்படுகிறது . ராமர் பூஜித்தவர் இந்த பெருமாள் . ஆணி மாத பிரமோற்சவத்தில் இங்கு இரண்டு தேர்கள் வீதி உலா வருவது சிறப்பு .
 • ராமானுஜருக்கு தீட்சை தந்த பெரியநம்பி இக்கோயிலில் காட்சி தருகிறார் . ராமானுஜர் தீட்சை பெறுவதெற்காக வணங்கிய நிலையுடனும் , பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடி குரு சிஷியர் இருவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம் . பெரியநம்பி ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு ,சக்கர முத்திரைகள் இங்கு கோயில் திருப்பணி செய்யும்போது கண்டடுக்கப்பட்டது . இவைகள் காண கிடைக்காத அற்புதம் ஆகும் .
 • ராமர் சீதையை மீட்க செல்லும் வழியில் விபகண்ட மகரிஷி ஆசிரமத்தில் தங்கி ஓய்வு எடுத்து சென்றார் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சீதையை மீட்டு வரும் வழியில் கல்யாண கோலத்தில் மகரிஷிக்கு காட்சி தந்தார் . இதன் அடிப்படையிலே கோதண்டராமருக்கு புஷ்பக விமானத்துடன் கோயில் எழுப்பப்பட்டது .

கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம்

காலை 7 .30 முதல் 11 .30 வரை
மாலை 4 .30 முதல் 8 .00 மணி வரை

மதுராந்தகம் ஊரின் உள்ளேயே இக்கோயில் அமைந்துள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/eri-katha-ramar-temple-mathuranthagam.html

அருகில் உள்ள கோயில்

இங்கிருந்து 12 km தொலைவில் அச்சரப்பாக்கத்தில் பாடல் பெற்ற தலம்
ஸ்ரீ ஆட்சீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் உள்ளது . வரும் தை மாதத்தில் இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கிறது .

Location

2 Comments

 1. Vaidyanathan R

  In the small hills adjacent to the Maduranthakam lake and to the left of Karunguzhi on the NH road we have a temple for Sri Ranganathar established by Sri Ramar who visited the ashram of Vibhanda Maharishi.As Sri Rama was in a hurry to return to Ayodhya to meet Bharathan before the deadline initially he didnt visit the ashram as promised earlier.Sage got wild and raised this hill causing ibstruction to the path of Pushpaka Vimanam.Hence Vimanam landed at the temple behind the lake and Sri Rama visited the hills.It is called Gnana Malai and infact now there are three Ranganathars there.Aadhi Rangan, Azhagiya Rangan and Anugraha Rangan .Please find time to visit this as there is road access to the hill top too Details of bhattar can be tried and got at Maduranthakam temple itself.

  Reply
  • Ganesh

   Sir Thank you very much your valuable updated history. diffidently next time we will visit this place also. please keep touch with me so i will improve my knowledge

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *