Sri Varadharaja Perumal Temple-Kanchipuram

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்- காஞ்சிபுரம் (திருக்கச்சி)

Sri Varadaraja Perumal Temple-Kanchipuram

மூலவர் : பேரருளாளன், வரதராஜர், தேவாதிராஜன், அத்தியூரான்.

தாயார் : பெருந்தேவி தாயார், மஹாதேவி

கோலம் : நின்ற திருக்கோலம்

விமானம் : புண்யக்கோடி விமானம்

தீர்த்தம் : அனந்தசரஸ், பொற்றாமரைக்குளம், ஸ்ரீ பாஸ்கர தீர்த்தம், ஸ்ரீ வராக தீர்த்தம், ஸ்ரீ பிரம்ம தீர்த்தம்

மங்களாசாசனம் : பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

ஊர் : காஞ்சிபுரம்,திருக்கச்சி

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

  • பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 44 வது திவ்யதேசமாகும் .
  • 2000 வருடங்கள் முற்பட்ட பழமையான கோயில் ,இந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5-ம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில் உள்ள ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும்,கல்லால் செய்யப்பட்ட சங்கிலி ஆகியவைகள் கொண்ட 100 கால் மண்டபம் மிகவும் பிரபலம் ஆகும்.
  • ஒருமுறை பிரம்மா காஞ்சியில் தன்னையே படைத்த திருமாலை வணங்கி மிகப்பெரிய அளவில் யாகம் நடத்தினார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய கலைவாணியை விடுத்து யாகம் செய்யத் தொடங்கினார்.இதனை அறிந்த கலைவாணி மிகவும் கோபம் கொண்டு யாகத்தைத் தடுக்க பல வகைகளில் முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி, திருமால் யாகம் தொடர அருள் புரிந்தார்.அச்சமயத்தில் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் அங்கு வந்து கோபம் கொள்ளாது, உலகத்தின் நன்மைக்காக கலைவாணியும் இணைந்துயாகத்தை நன்முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்பு கலைவாணியும் யாகத்தில் கலந்து கொள்ள யாகம் பூர்த்தியானது. உடனே, யாக குண்டத்திலிருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அத்திகிரி என்னும் மலை மீது காட்சி தந்து அருளினார். பிரம்மாவிற்காக வரம் தர வந்த பேரின்பக் பெருங்கடல் என்பதால் இத்தல இறைவனுக்கு “வரதராஜ பெருமாள்” என்பது திருநாமம். பெருமாளுக்கு உகந்த தேவி என்பதால் “பெருந்தேவி தாயார்” என்பது அன்னையின் திருநாமம்.
  • அத்திவரதர்– கோவிலின் முகப்பு இராஜகோபுரத்தை கடந்ததும், வடக்கு புறமாக உள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள ஆனந்த புட்கரணி திருக்குளத்தில் இரண்டுநீராழி மண்டபங்கள் உள்ளன.தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன அத்திவரதராஜ பெருமாள் சயனத் (கிடந்த) திருக்கோலத்தில் குடி கொண்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியில் எடுத்து வந்து ஒரு மண்டலம் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பிறகு, மீண்டும் பெருமாள் நீருக்கடியில் உள்ள மண்டபத்திற்கு திரும்பிவிடுவார். இதற்கு முன் 1979 ஆம் ஆண்டு காட்சி தந்து அருளினார். அடுத்ததாக இந்த ஆண்டு 2019 ஆம்ஆண்டு ஜீலை 1 முதல் அவரின் தரிசனம் தருவதற்காக வெளியே வந்துள்ளார் .
Sri Varadaraja Perumal Temple-Kanchipuram
Athi Varathar
  • பல்லி தரிசனம்சிருங்கி பேரர் என்னும் முனிவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் கௌதம முனிவரிடம் சீடர்களாக மிகவும் அலட்சியமாக இருந்தனர். ஒருநாள் வழிபாட்டிற்காக தீர்த்தம் கொண்டு வந்த போது அதில் பல்லிகள் இறந்து கிடப்பதைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் சாப விமோசனம் பெற்றனர். உங்களை தரிசிக்க வருபவர்கள் எங்களைத் தரிசித்தால் சகல தோசம் நீக்கி அருளும்படி வரம் பெற்றனர்.அவ்வாறே கோவிலில் உள்ள மூலவர் சன்னிதியின் பின்புறம் உள்ள தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி ஆகியவற்றை தரிசிப்பவர்கள் சகல தோசங்களிலும் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.
  • கிணற்றுக்குள் வரதர்சித்ரா பௌர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜைகள் நடைபெறும். பிறகு வரதர் , அருகிலுள்ள நடவாவி கிணற்றுக்குள் எழுந்தருள்வார். மண்டபம் போன்ற உள் கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான அக்கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார். இந்நாளில் மட்டும் கிணற்று நீர் வெளியேற்றப்படும். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.
  • யோக நரசிம்மர் அத்திகிரி மலையின் கீழ் முகப்பில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி காட்சி தந்து அருளுகிறார். அதுவும் குடைவரை மூர்த்தியாக காட்சி தருகிறார்.இவர் சிறிய மலையில் காட்சி தருவதால் இவரை மலையாளன் என்ற மற்றுமொரு பெயரும் உண்டு .
  • இங்குள்ள சக்கரத்தாழ்வார் வேறு எங்கும் காண கிடைக்காத மிக உயரமான திருமேனியுடன் 16 கைகளுடன் சங்கு சக்கரங்களை தாங்கி நிற்கிறார் .
  • இக்கோயிலுக்கு ஆங்கிலேயர்கள் ராபர்ட் க்ளவ், பிலேஸ் துரை ஆகியோர்கள் ஆபரணங்களை கொடுத்துள்ளார்கள்.
  • இக்கோயிலில் விநியோகிக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரபலமானது , வல்லபாச்சாரியார் என்ற பக்தர் தினமும் மூங்கில் குழாயில் இட்லி சமைத்து இறைவனுக்கு படைத்தார். இவ் இட்லி அரிசி ,உளுந்து ,சீரகம் ,சுக்கு ,உப்பு மற்றும் நெய் சேர்த்து செய்து காலை 6 மணி பூஜையின் போது இறைவனுக்கு படைக்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-varadharaja-perumal-temple.html

கோயிலுக்கு செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :

காலை 6 -12 .30 , மாலை 3 .30 – 8 .30 வரை

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 km தொலைவில் சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தின் மத்தியில் உள்ளது.

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *