Sri Vedha Narayana Perumal Temple-Anoor

வேத நாராயண பெருமாள் கோயில் -அன்னூர்

Sri Vedha Narayana Perumal-Anoor

இறைவன் : வேத நாராயணர்

தாயார் : ஸ்ரீ தேவி ,பூதேவி

ஊர் : அன்னூர்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

  • பல்லவர்கள் காலத்தை சேர்ந்த கோயில் ,10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோயிலாகும் .
  • வேத நாராயண பெருமாள் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து காட்சி தருகிறார் .ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் .
  • பாலாற்றின் கரையில் ராமர் கோயில் இருந்தது வெள்ளத்தில் பாதிப்புள்ளான அக்கோயில் இருந்து ராமர் மற்றும் சீதா சிலைகளை இக்கோயிலில் நிறுவியுள்ளனர்.
  • சோழர்காலத்தில் இவ்வூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது ,குருகுலம் அமைத்து வேதங்கள் மற்றும் எல்லா விதமான பயிற்சிகளும் இவ் இடத்தில நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .
  • இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகவும் சிதலம் அடைந்துள்ளது,கோபுரங்கள் ,சுற்றுசுவர்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது .1933 ஆண்டுக்கு பிறகு இக்கோயிலில் எந்த ஒரு பராமரிப்பு பணிகளும் அதிகமாக நடைபெறவில்லை ,மற்றும் கோயிலுக்கு மின்சார வசதியும் இல்லை ,சிற்பங்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது . ஒரு வயதான அய்யங்கார் இக்கோயிலில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூஜைகள் செய்கிறார் .
  • இக்கோயிலுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த தீப எண்ணெய்,அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-vedha-narayana-perumal-temple-anoor.html

அமைவிடம் :
செங்கல்பட்டில் இருந்து 10 km தொலைவில் உள்ளது. முன்னரே தெரிவித்து சென்றால் திறந்து வைத்திருப்பார்கள் .
காலை 7 -10 .00 மாலை 5 .00 -6 .00

தொலைபேசி எண்: 9976221182 திரு. ரெங்கா

Location :

visited 13.04.19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *