Sri Pachaivarna(Harita) Perumal-Nazarethpetttai (Chennai)

ஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை )

Sri Pachaivarna perumal, nazarethpettai
Main Tower 

பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி வழியில் கேட்டு தெரிந்து எனது பயணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்தேன் . ஒரு சிவன் கோயிலையும் ஒரு பெருமாள் கோயிலையும் கண்டவுடன் என் மனம் மிக பரவசமடைந்தது. இந்த சிறிய ஊரில் இவ்வளவு பழமையான கோயில்களா என்று ஆச்சரியமுற்றேன் ,மீன் சின்னம் வரையப்பட்டுள்ளதால் இது பாண்டிய மன்னர்களால் எழுப்பப்படியிருக்குமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது . பேட்டை என்றும் அகரமேல் கிராமம் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் நசரத்பேட்டை என்ற பெயரோடு மட்டும் இன்று அறியப்படுகிறது . இதனாலேயே இந்த கோயில்களை பற்றி அவ்வளவாக அறியமுடியவில்லை என்பதை வருத்ததோடு பதிவுசெய்கிறேன் . இப்போது பெருமாள் கோயிலை பற்றி பதிவிடுகிறேன் எனது அடுத்த பதிவில் சிவன் கோயிலை பற்றி பதிவு செய்கிறேன் .

மூலவர் : பச்சைவர்ண பெருமாள் ,ஹரித வர்ண பெருமாள்
அம்பாள் : அமிர்தவல்லி தாயார்
ஊர் : அகர மேல் கிராமம் , நசரத்பேட்டை
மாவட்டம் :திருவள்ளூர்

  • 1000 வருடங்கள் பழமையான கோயில்
  • முதலியாண்டான் அவதார தலம்
  • மஹாபாரததோடு தொடர்புடைய தலம்
  • பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிக பெரிய உருவமாக ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார் .
  • அம்பாள் அமிர்தவல்லி தாயார் சன்னதி தனியாக உள்ளது . மற்றொரு புறத்தில் ஆண்டாள் அம்மையாரின் தனி சன்னதி உள்ளது.
  • கொடிக்கம்பத்தில் முன்னே விளக்கு கம்பம் உள்ளது அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோயிலின் சிறப்பை சொல்கிறது .
  • எல்லா தூண்களிலும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . கிருஷ்ணர் ,நரஸிம்மர்,ராமானுஜர் ஆகியவர்களின் சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன .

முதலியாண்டான் சன்னதி

  • பெருமாள் சன்னதியின் வலது புறத்தில் முதலியாண்டான் சன்னதி உள்ளது . இது இவருடைய அவதார தலமாகும் . சுவாமி ராமானுஜருக்கு இரண்டு முக்கியமான சீடர்கள் ஒருவர் கூரத்தாழ்வார் மற்றொருவர் முதலியாண்டான் ஆவார்கள். இவர் கி.பி 1027 அன்று பிறந்தார் .105 வருடம் வரை வாழ்ந்தார் . கி பி 1132 வருடம் உயிர் பிரிந்தார் .

தல வரலாறு :
மஹாபாரத போரின் போது அஷ்வர்த்தாமா என்ற யானை இறந்ததை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துரோணாச்சாரியாரிடம் உன் மகன் அஸ்வர்த்தாம இறந்துவிட்டதாக கூறினார் அதை நம்ப மறுத்த துரோணாச்சாரியர் தன் சிஷ்யன் யுதிஷ்டரிடம் (தர்மர் ) திருப்பி கேட்டார் அவரும் கிருஷ்ணர் கூறியிருந்த அஸ்வர்த்தாம என்ற யானை இறந்ததை தன் குருநாதரிடம் மெல்லிய குரலில் அஸ்வர்த்தாம இறந்துவிட்டதாக கூறினார் இதைகேட்ட துரோணாச்சாரியார் மிகவும் மனவேதனையும் ,துன்பமும் உற்றார் . இந்த சமயத்தை பயன்படுத்தி கிருஷ்ணரின் ஆணை படி அர்ஜுனனால் துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார் . இந்த போருக்காக அஸ்வத்தமா என்ற யானை இறந்ததற்கும் , தன் குரு இறந்ததற்கும் யுதிஷ்டர் மிக வேதனை பட்டார். இந்த பாவத்திலிருந்து விடுபட நாரத மஹரிஷியின் அறிவுரைப்படி அந்த இடத்தில யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்திலிருந்து பகவான் கிருஷ்னர் பச்சை வண்ண யானையாக காட்சிதந்தார் . இந்த அவதாரத்தை நினைவு படுத்தவே இத்தலத்தில் பச்சை வர்ண பெருமாளாக (சமஸ்கிருதத்தில் ஹரித வர்ண பெருமாள் ) என்று அருள் பாவிக்கிறார்.

திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி
காலை 7 .00 -11 .30
மாலை 4 .30 -8 .30

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு சாலையில் 1 km தொலைவில் நசரத்பேட்டை சிக்னல் வரும் அதன் இடதுபுறத்தில் ஊருக்குள் சென்றால் கடைசியாக சென்று வலதுபுறத்தில் திரும்பினால் கோயில் வரும் . வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையிலும் வரலாம் ,பெங்களூரு தேசிய நெடுஞசாலையிலும் வரலாம் .

அருகில் உள்ள கோயில்கள்
1 . காசி விஸ்வநாதர் கோயில் -நசரத்பேட்டை
2 . வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ) -பூந்தமல்லி
3 . திருக்கச்சி நம்பிகள் ,வரதராஜர் கோயில் -பூந்தமல்லி
4 .ஒத்தாண்டீஸ்வரர் கோயில் -திருமழிசை
5 . ஜெகநாதர் பெருமாள் கோயில் -திருமழிசை
மற்றும் மாங்காடு ,குன்றத்தூர் ,திருவேற்காடு ஆகிய இடங்களில் மிக புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன .

Location Map :

Leave a Reply