Navarathiri pooja methods

நவராத்திரி வணங்கும் முறைகள்

Navarathiri Nayagigal
Navarathiri Nayagigal (tks Dinamalar)

நவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்தி-ப்ராஹ்மரூபா) அவளே பரிபாலன் செய்பவள் (கோப்த்ரி-கோவிந்தரூபிணி ),அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணிருத்ரரூபா) என்று சொல்கிறது .லட்சுமி அஷ்டோகத்தில் “பிரம்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம” என்று வருகிறது ,சரஸ்வதி அஷ்டோகத்திலும் அதேதான் வருகிறது இவ்வாறாக காஞ்சி மஹான் சொல்லியுள்ளார் .

பத்து நாளும் அம்பாளை வணங்கும் முறை :

முதல் நாள்
அலங்காரம் : மஹேஸ்வரி (மது ,கைடபர் அசுரர்களை வதம்
                              செய்வது போல்)

கன்னி பூஜை : இரண்டு வயது சிறுமியை குமாரி என்னும்
                                அம்பிகையாய் வழிபடுதல்
கோலம் : அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்
பூக்கள் : மல்லிகை, செவ்வரளி ,வில்வம்
நைவேத்தியம் : வெண்பொங்கல் ,சுண்டல் ,பழம்,எலுமிச்சை சாதம் 
                            தயிர் சாதம் ,மொச்சை .
பலன் : செல்வ வளம் , தீர்க்க ஆயுள்

இரண்டாம் நாள்

அலங்காரம் : ராஜராஜவரி ( மஹிஷாசுரனை வதம் செய்வது போல்
கன்னி பூஜை : மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து
                              வழிபடுதல்
கோலம்            :  கோதுமை மாக்கோலம்
பூக்கள்              :          முல்லை ,துளசி ,சாமந்தி ,சம்பங்கி
நைவேத்தியம் : தயிர் வடை ,வேர்க்கடலை ,சுண்டல் ,எள் சாதம்
                                  புளியோதரை
பலன் : நோய் தீரும் ,ஆரோக்கியம் உண்டாகும்

மூன்றாம் நாள்

அலங்காரம் : வராகி (பன்றி முகம் )
கன்னி பூஜை : நான்கு வயது சிறுமியை அம்பிகையாய் பாவித்து
                               வணங்குதல்
கோலம் : பூ கோலம்
பூக்கள் : செண்பக மலர் ,மல்லிகை
நைவேத்தியம் : கோதுமை பொங்கல் ,சர்க்கரை பொங்கல்
                                    சுண்டல் ,காராமணி

பலன் : குறையில்லாவாழ்வு அமைதல்.

நான்காம் நாள்
அலங்காரம் : மஹாலக்ஷ்மி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்
பூஜை : ஐந்து வயது சிறுமியை ரோகினியாக பூஜித்தல்
              கோலம் : அட்சதை கோலம்
பூக்கள் : செந்தாமரை ,ரோஜா
                  நைவேத்யம் : அவல் கேசரி ,பட்டாணி சுண்டல் ,பால்                                       பாயசம்  
                    கல்கண்டு சாதம்
பலன் : கடன் தொல்லை தீரும்

ஐந்தாம் நாள்
அலங்காரம் : மோகினி வடிவம்
கன்னி பூஜை : ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்
கோலம் : கடலை மாவு கோலம்
பூக்கள் : கதம்பம் ,மரிக்கொழுந்து
                 நைவேத்யம்: பால் சாதம் ,பருப்பு சுண்டல் ,பாயசம் ,                                   
பலன் : விருப்பம் நிறைவேறுதல்

ஆறாம் நாள்
அலங்காரம் : சண்டிகா தேவி சர்ப்ப ஆசனத்தில் வீற்றியிருப்பது                                      போல்
கன்னி பூஜை : ஏழு வயது சிறுமியை காளிகாம்பாளாக பாவித்து
                              வழிபடுதல்
கோலம் :             கடலை மாவு கோலம்
பூக்கள் :              மரிக்கொழுந்து ,செம்பருத்தி ,சம்பங்கி
நைவேத்யம் : தேங்காய் சாதம் ,புளியோதரை ,பழம் ,பாசிப்பயறு
                               சுண்டல்
பலன் : கவலை தீரும் ,வழக்கில் வெற்றி கிடைத்தல்

ஏழாம் நாள்
அலங்காரம் :சாம்பவி துர்க்கை பீடத்தில் அமர்ந்திருப்பது போல்
கன்னி பூஜை :எட்டு வயது சிறுமியை பிராஹ்மியாக பாவித்து
                              வழிபடுதல்
கோலம் : மலர் கோலம்
பூக்கள் : மல்லிகை ,முல்லை மலர்
நைவேத்தியம் : எலுமிச்சை சாதம் ,வெண்பொங்கல்
                              கொண்டக்கடலை சுண்டல்

எட்டாம் நாள்
அலங்காரம் : நரசிம்ம தாரிணி சிங்க முகத்துடன் அலங்காரம்
                             செய்தல்
கன்னி பூஜை : ஒன்பது வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்
கோலம் :தாமரை கோலம்
பூக்கள் :வெண்தாமரை ,சம்பங்கி
நைவேத்தியம் :பால் சாதம் ,தேங்காய் சாதம் ,புளியோதரை                                                     மொச்சை
பலன் : பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்த்தல்

ஒன்பதாம் நாள்
அலங்காரம் :பரமேஸ்வரி திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்
கன்னி பூஜை :பத்து வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்
கோலம் :வாசனை பொடி கோலம்
பூக்கள் :துளசி ,மல்லிகை ,பிச்சி ,தாமரை ,மரிக்கொழுந்து
நைவேத்தியம் :உளுந்து வடை ,சர்க்கரை பொங்கல் ,எள் சேர்த்த
                                 பாயாசம்,கேசரி ,எள் உருண்டை
பலன் : குடும்பம் ,நாடு நலமுடன் வாழ

பத்தாம் நாள்
அலங்காரம் :விஜயா,பார்வதி ஸ்தூல வடிவம்
கோலம் :மலர் கோலம்
பூக்கள் :பல வித மலர்கள்
நைவேத்தியம் : பால் பாயசம் ,சித்ரான்னம்
பலன் : சகல சௌபாக்கியம்

நன்றி : தினமலர் மற்றும் பெரியோர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *