ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில் – திருப்புட்குழி
மூலவர் : விஜயராகவ பெருமாள்
தாயார் : மரகதவல்லி ,கோமளவல்லி
உற்சவர் : ஸ்ரீ ராமபிரான்
கோலம் : வீற்றியிருந்த கோலம்
விமானம் : விஜயவீரகோடி விமானம்
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
தல விருச்சகம் : பாதிரி
ஊர் : திருப்புட்குழி
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
- 108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமாகும் .தொண்டைமண்டல திவ்யதேசம் .
- ஸ்ரீ ராமபிரான் காலத்தில் தோன்றிய திவ்ய தேசம் ,அவர் பாதம் பட்ட புண்ணிய தலம்.
- இராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசரான ஜடாயு என்னும் பறவை ராவணனிடம் போரிட்டு சீதாபிராட்டியை கைப்பற்ற முனைந்து போரில் சிறகொடிந்து ஜடாயு கிழே விழுந்து மரணத்தின் தருவாயில் இருந்தது .சீதையை தேடி அவ்வழியே வந்த ராமர் லக்ஷ்மணரிடம் சீதையை இராவணன் சிறைபிடித்து சென்ற விவரத்தை தெரிவித்து மரணத்தின் தருவாயில் இருக்கும் தனக்கு ஸ்ரீ ராமபிரானே ஈமக்கிரியை செய்யவேண்டும் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடன் தனக்கு காட்சி தந்து அருளவேண்டும் என்று கூறி உயிரை விட்டார் . அவரின் வேண்டுதலை ஏற்று ஜடாயுவை தனது வலது பக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியை செய்தார் .தீ ஜுவாலையா பொறுக்க முடியாமல் ராமபிரானின் வலது புறத்தில் இருந்த ஸ்ரீதேவி தாயர் இடது புறம் வந்து காட்சி அளிக்கவும் ,இடது புறத்தில் இருந்த பூதேவி தாயார் வலது புறத்தில் வந்து காட்சி அருளவும் மாறியதாக வாமனபுராணத்தில் கிரித்ரா க்ஷேத்ரம் எனப்படும் இத்தலத்தில் பற்றி விரிவாக கூறப்பெற்றுள்ளது .
- இதனாலேயே இவ் கோயிலின் கர்ப்பகிரகத்தில் இருவரும் மாறி காட்சிதருகின்றனர் ,தாயார் ஜுவாலை தாங்காமல் சிறிது தலை சாய்ந்து காணப்படுகிறார் . மற்றும் இக்கோயின் தாயார் சன்னதி இடது புறத்திலும் ,ஆண்டாள் சன்னதி வலது புறத்திலும் காணப்படுகிறது .
- வறுத்த பயிர் முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என்ற அதிசயம் இங்கு நிகழ்கிறது .குழந்தை வரம் வேண்டுவர் இங்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் குளித்து மடப்பள்ளியில் வறுத்து நனைத்த பயிரை தன்புடவையில் மடித்து வைத்து இரவு உறங்கி மறுநாள் எழுந்திருக்கும் போது முளைத்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டு .
- ஸ்ரீ ராமர் தன் அன்பினால் நீர் உண்டாகும்படி செய்து அந்நீரை கொண்டு ஜடாயுவுக்கு சடங்குகளை செய்து முடித்தார் ,இன்றும் அக் குளம் உள்ளது. அம்மாவாசை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்கின்றனர் . ராமரே இங்கு செய்ததால் இந்த இடத்தில தர்ப்பணம் செய்தால் அது பல மடங்கு பலனை தரும் என்று நம்பப்படுகிறது .
- இங்கு ஜடாயுக்கு அதிக மரியாதையை தரப்படுகிறது ,அவருக்கு ஈமக்காரியங்கள் செய்த தலம் ஆதலால் அதற்கு மரியாதையை செய்யும் விதமாக கொடிமரமும் ,பலி பீடமும் கோவிலுக்கு வெளியே உள்ளது .
- இங்கு இருக்கும் சுந்தர பாண்டிய காலத்து கல்வெட்டுகளை காணும்போது இக்கோயில் 14 நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என்று அறியமுடிகிறது . மற்றும் ராமானுஜர் தன் குருவான ஸ்ரீயாதவப்ரகாசரிடம் இளமை காலத்தில் கல்வி கற்றார் என்று ஆண்டாள் சன்னதியின் தெற்கு மதில் சுவரில் குறிப்பு உள்ளது .
- இக்கோயில் குதிரை வாகனம் சிறப்பு வாய்ந்ததாகும் ,இந்த கல்குதிரை உறுப்புக்கள் அசையும் படி செதுக்கி உள்ளார்கள் ,இது ஒரு அதிசயம் ஆகும் . இது போல் வேறு எங்கும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து அது போல் இருந்த இறந்தாராம் சிற்பி . அவரை சிறப்பிக்கும் வகையில் 8 ஆம் திருநாளில் அவர் பெயர் சூட்டியுள்ள தெருவுக்கு சுவாமி சென்று வருவார் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/vijayaraghava-perumal-temple-tiruputkuzi.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 -12 மணி வரை , மாலை 4 -7 மணி வரை
கோயில் செல்லும் வழி:
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் அருகில் இவ் ஊர் அமைந்துள்ளது . இங்கிருந்து கூரம் (கூரத்தாழ்வான் ) கோயிலுக்கும் செல்லலாம் .
Location: