ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (பேயாழ்வார் அவதார தலம் ) – மைலாப்பூர்

இறைவன் : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மயூரவல்லி
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
விருச்சகம் : அரசு
ஊர் : மைலாப்பூர்
மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு

- சென்னையில் கோவில்களுக்கு பெயர் போன திருமயிலை என்னும் மயிலாப்பூர் என்ற இந்தப்புண்ணிய பூமியில் இத்தலம் அமைந்துள்ளது .
- ஆழ்வார்களில் மூன்றாம் ஆனவர் பேயாழ்வார் அவதார திருத்தலம் இது . இக்கோயிலின் அருகில் உள்ள கைவிரணி கிணற்றில் இவர் அவதரித்தார் .
- திரேதாயுகத்தில் இக்கோயிலில் உள்ள கைவிரணி குளத்தின் கரையில் ரிஷிகள் யாகம் நடத்தினர் அப்போது மது என்ற அரக்கன் அவர்களை யாகம் நடத்த முடியாமல் தடுத்தான் ,ஆதலால் ரிஷிகள் மகாவிஷ்ணுவிடம் அரக்கனிடம் இருந்து தங்களை காக்குமாறு வேண்டினர் விஷ்ணுவும் அவர்களுக்கு அருள்தந்து யாகத்தை தொடர்ந்து நடத்தும்படியும் தான் காப்பதாகவும் வாக்களித்தார் . மகரிஷிகள் யாகத்தை தொடர்ந்தனர் ,அப்போது அரக்கன் அவ்விடத்தில் வந்து அவர்களுக்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்தான் ,அப்போது யாகத்திலிருந்து விஷ்ணு தோன்றி அவனை அழித்து அவர்களை காத்தான் . பின்பு ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி இத்தலத்திலேயே அவர் ஆதிகேசவ பெருமாளாக அருளுகிறார் .

- மணி பிராத்தனை இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாகும்.
இறைவனை மணம் முடிக்க தாயார் புஷ்கரணியில் உள்ள தாமரை மலர் மேல் குழந்தையாக அவதரித்தாள் . பிருகு மஹரிஷியின் மகளாக பிறந்ததால் ‘பார்கவி’ என்ற பெயர் இவருக்கு உண்டு . இவர் இக்கோயிலில் ஸ்வாமியின் வலது புறத்தில் தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார் . இவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் காலை விசேஷ ஹோமம் மற்றும் மாலை 6 .30 மணி அளவில் ‘ஸ்ரீ சூக்த வேத மந்திரம் ‘ சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்கிறார்கள் , அப்போது இரண்டு மணிகளை தாயாரின் கால்களில் வைத்து திருமண தடை ,கல்வி ,உடல் நலம் ஆகியவற்றிற்காக வேண்டி அவைகளை இக்கோயிலின் கதவில் கட்டிவிடுகிறார்கள் ,அவைகள் எப்போதும் ஒலித்து பக்த்தர்களுக்காக தாயாரிடம் பிராத்தனை செய்வதாக ஐதீகம்.
அவர்கள் குறைகள் தீர்ந்தவுடன் மேலும் இரண்டு மணிகளை கட்டிவிடுகிறார்கள் . இவ் பிராத்தனையில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு ஆகும் .

- சந்திரன் தனுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட இக்கோயிலில் உள்ள ‘சர்வ தீர்த்தத்தில்‘ நீராடி சாப விமோசனம் பெற்றான் ஆதலால் இவ் தீர்த்தத்துக்கு ‘சந்திர புஷ்கரணி ‘என்ற பெயரும் உண்டு . இப்போது ‘சித்திர குளம்’ என்று அழைக்கப்படுகிறது .
- ஆதி கேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் அவர் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி இல்லை . வீர ஆஞ்சேநேயர் சன்னதி மற்றும் பேயாழ்வார் சன்னதியும் உள்ளது .
செல்லும் வழி
கபாலீஸ்வர் கோயிலின் அருகிலேயே உள்ளது . அருகில் மாதவ பெருமாள் கோயில் ,முண்டக்கண்ணி அம்மன் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளன .
For about in this temple in English please click following link
http://drlsravi.blogspot.com/2010/08/adikesavaperumal-temple-mylapore.html