ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் ( சனீஸ்வரன் தலம்)- பொழச்சலூர்
இறைவன் : அகத்தீஸ்வரர்
தாயார் :ஆனந்தவல்லி
ஊர் : பொழிச்சலூர் , அனகாபுத்தூர்
மாவட்டம் : சென்னை
- சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் சனீஸ்வரன் பரிகார தலம் ஆகும் .
- இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் . 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயிலாகும் .கஜபிருஷ்ட விமானம் அமைப்புடன் கட்டப்பட்ட கோவிலாகும் .
- ஒரு காலத்தில் பல்லவர்கள் இவ்விடத்தில் யானைகள் பாதுகாத்து வந்தார்கள் . இங்குள்ள அடையார் ஆறும் மற்றும் அருகில் உள்ள மடுவும் யானைகள் பாதுகாக்க உகர்ந்ததாக இருந்தது . ஆணைகாபுத்தூர் என்பது மருவி அனகாபுத்தூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது .
- இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார் . அகத்தியர் பூஜித்த லிங்கம் என்பதால் இவரருக்கு அகதீஸ்வர் என்ற பெயர் ஏற்பட்டது .
- சித்திரை மாதம் 7 ,8 ,9 தேதிகளில் சூரிய ஒளி இறைவனின் மேல் விழும் .
- பாண்டவர்கள் தன வனவாசத்தின் போது இவ்விடத்தில் வந்து தங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-agatheeswarar-temple-sani-sthalm.html
சனீஸ்வரர் சன்னதி
- சனி பகவான் பிறருக்கு கண்டச்சனி ,ஏழரை சனி ,ஜென்ம சனி என்று பலருக்கு அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தண்டனைகளை கொடுத்து வந்ததால் அவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்க சிவபெருமானை கேட்க அவர் இந்த இடத்தில் வந்து தனக்கு பூஜை செய் என்று கூறினார் அதன்படி அவர் இங்கு வந்து குளத்தை உருவாக்கி இறைவனை வேண்டிவந்தார் அதனால் அவர் பாவங்கள் போயிற்று . இங்குள்ள குளத்திற்கு வடதிருநள்ளாறு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு திருநள்ளாறில் உள்ளது போல் தனியாக சின்முத்திரையுடன் காட்சிதருகிறார் . மங்கள சனீஸ்வரனாக காட்சி தருகிறார் .சனி தோஷங்களுக்கு பரிகார தலமாக இவ் கோயில் விளங்குகிறது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .45 -12 மணி வரை , மாலை 4 -8 .30 மணி வரை
சனி மற்றும் ஞாயிறு கிழமை
காலை 5 .30 -1 .00 , மாலை 3 -9 வரை
செல்லும் வழி:
பல்லாவரத்தில் இருந்து 3 km தொலைவில் இக்கோயில் உள்ளது .
Location: