Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் – கதித்தமலை, ஊத்துக்குளி

கொங்குமண்டலத்தில் ஒரு சிறப்பான விஷயத்தை நாம் பார்க்கலாம் , எங்கெல்லாம் மலைகளும் குன்றுகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள் மற்றும் பாத யாத்திரை செல்வது ,காவடி எடுப்பது என விழாக்கோலமாக காணப்படும். அப்பேற்பட்ட கொங்குமண்டலத்தில் இருக்கும் திருப்பூர் அருகிலே உள்ள ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலையில் வீற்றியிருக்கும் அழகன் முருகன் கோயிலை பற்றி இவ் பதிவில் பதிவிடுகிறேன் …

கோயில் அமைப்பு :

கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம் மலையின் மீது அமைந்துள்ளது . கோயில் கோபுரத்தை அடைய படிக்கட்டுகள் உள்ளன . ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார் . இங்கே வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனி சன்னதிகள் உள்ளன ,அதே போல் இடுப்பின் தனி சன்னதியில் உள்ளார் .

தலவரலாறு :

அகத்தியர் மாமுனிவர் முருகர் உள்ள இடங்களில் எல்லாம் சென்று வணங்கும் போது இத்தலத்திற்கு வந்ததாகவும் இவ்விடத்தில் அவர் நைவேத்தியம் செய்ய நீர் இல்லாததால் அவர் வருத்தமுற்று இறைவனை வேண்ட முருக பெருமான் தன வேலால் இவ் இடத்தில குத்த நீர் வந்ததாம் அதைக்கொண்டு அவர் பூஜை செய்தாராம் , அவ்வாறு  அவர் குத்திய இடத்தில இருந்து நீர் இன்றும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது . குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் ‘ஊத்துக்குளி ‘ என்று இவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது . இவ் இடத்தில கோயில் கட்டி முருகனை வணங்குகிறார்கள் .

அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-vetri-velayuthasamy-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 – மதியம் 2 .00 மணி வரை

மாலை 4 .00 – இரவு 7 .30 மணி வரை

செல்லும் வழி

திருப்பூரில் இருந்து சுமார் 15 km தொலைவில் உள்ளது . ஊத்துக்குளி அருகில் உள்ளது .

Location:

Leave a Reply