Sri Prasana Venkatesa Perumal Temple- Thirumalai Vaiyavour

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் பெருமாள் கோயில் -திருமலைவையாவூர்

Sri Prasana Venkatesa perumal temple-Tirumalai vayavour

இறைவன் : பிரசன்ன வெங்கடேஸ்வரர்

தாயார் : அலமேலு மங்கை தாயார்

தீர்த்தம் : வராக தீர்த்தம்

ஊர் : திருமலைவையாவூர்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

Sri Prasana Venkatesa perumal temple-Tirumalai vayavour
  • தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருத்தலம் ,திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் கொண்ட கோயிலாகும் .
  • திருவோண தீபம் : திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோயிலாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓண தீபம் ஏற்றுகிறார்கள் ,அன்று காலை பெருமாள் யாக மண்டபத்தில் எழுந்தருள்கிறார் ,அப்போது ஸ்ரீனிவாசருக்கு யாகம் ,திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் .அப்போது பெருமாள் சன்னதியில் அகன்ற தீபத்தில் நெய் ஊற்றி பெருமாளின் காலடியில் வைத்து ஆராதனை செய்கிறார்கள் . திருவோண நட்சத்திரக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திருமணம் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உடையவர்கள் நெய் கொடுத்து தீப தரிசனம் காணுகிறார்கள் .
  • வராஹ ஸ்வாமி : திருப்பதியில் வராஹ பெருமாளை தரிசித்த பிறகே ஸ்ரீனிவாசரை தரிசிக்க வேண்டும் .அதேபோல் இங்கேயும் வராகரை தரிசித்த பிறகே பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் , வராஹ அவதாரத்தை கருட ஆழ்வார் காணமுடியாமல் போகவே அவரின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் பெருமாள் கருடனுக்கு வராஹ அவதாரத்தை காட்டினார். இங்கு வராஹர் தனது வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும் இடது காலை ஆதிசேஷனின் தலையின் மீது வைத்து லட்சுமி தேவியை மடியில் அணைத்தபடி தரிசனம் தருகிறார் .இவர் சன்னதி தனியாக கொடிமரத்துடன் உள்ளது. இவருக்கே இங்கு முதலில் விசேஷ காலங்களில் கொடியேற்றமும் முதலில் தீபாராதனையும் நடைபெறுகிறது .
  • பிரசன்ன வெங்கடேசர் : பெருமாள் செங்கோலுடன் ராஜ கோலத்தில் காட்சி தருகிறார் . தன் இரு மார்பிலும் இரண்டு மஹாலக்ஷ்மியை ஏந்தியுள்ளார், திருவாச்சியில் ஆதிசேஷன் இருக்கிறார் .பெருமாள் அஷ்டலக்ஷ்மி ,தசாவதார ஒட்டியாணம் ,சகஸ்ரநாம மாலைகள் அணிந்து மிகவும் அம்சமாக இருக்கிறார் . வியாழன் தோறும் இவைகள் எதுவும் அணியாமல் திருப்பதியில் உள்ளது போல் நேத்திர தரிசனம் தருகிறார் .
  • பெருமாளின் காவலாளியான ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர்கள் ஒருவர் தன் காதில் சிம்ம குண்டலமும் மற்றொருவர் காதில் கஜ குண்டலமும் அணிந்துள்ளனர்.இது வித்தியாசமான அமைப்பாகும் .
  • வரலாறு : தொண்டைமான் மன்னன் ஒருவர் தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி பெருமாளை தன் மனதில் நினைத்தார் அவரும் அவ்வாறு பெருமாளும் அருளினார். தனக்கு வெற்றி தேடித்தந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார் அப்போது இவூரில் உள்ள இவ் மலையில் பெருமாள் கையில் செங்கோலுடன் மன்னரின் மனதில் காட்சி கொடுத்தார் ,அவ்வாறு தன் மனதில் வந்து காட்சி கொடுத்ததால் அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வைத்து இதே இடத்தில் வெங்கடாஜலபதிக்கு கோயிலையும் எழுப்பினார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/prasana-venkatesa-perumal-temple.html

கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .00 -12 .00 வரை மாலை 4 .00 -7 .00 வரை
தொலைபேசி எண்: தேவராஜன் பட்டர் : 9443239005

செல்லும் வழி:
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை தாண்டி படாளம் கூட்டு ரோடு வரும் அங்கே இறங்கி வேடந்தாங்கல் செல்லும் சாலையில் சென்றால் சுமார் 4 km தொலைவில் இந்த ஊர் வரும் . மலை வரை காரில் செல்லலாம் . செங்கல்பட்டில் இருந்து பேருந்துகள் உள்ளன . விழுப்புரம் செல்லும் பேருந்தில் படாளம் கூட்டுரோடில் இறங்கி ஆட்டோவில் இக்கோயிலுக்கு செல்லலாம் .

Location:

visited 13.04.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *