Sri Krupapureeswarar Temple- Tiruvennainallur

ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் கோயில் – திருவெண்ணைநல்லூர்

Sri Krupapureeswarar Temple- Tiruvennainallur
Main gopuram

இறைவன் : கிருபாபுரீஸ்வரர்

தாயார் : மங்களாம்பிகை

தல விருச்சகம் : மூங்கில்

தல தீர்த்தம் : பெண்ணை ,வைகுண்டம் ,வேதம் ,சிவகங்கை பாண்டவ தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள்

ஊர் : திருவெண்ணெய் நல்லூர் , திருவருள்துறை

மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் 225 தலமாகும் . நடுநாட்டு தலங்களில் 14 வது தலமாகும் . சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் இத்தலத்தை பாடியுள்ளனர்.
  • இறைவன் சுயம்புவாக காட்சி தரும் தலம். முனிவர்களின் தலக்கணத்தை அழித்து அவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து கிருபை தந்ததால் கிருபாபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார் .
  • மகிஷன் என்ற அரக்கனை அழித்து அந்த கோபத்தை இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி கோபத்தை தொலைத்து மங்களம் பெற்றதால் மங்களாம்பிகை என்ற பெயர் பெற்றார் .
  • சுந்தரர் திருமணத்தின் போது இறைவன் முதியவர் கோலம் பூண்டு சுந்தரர் தனக்கு அடிமை என்று அவரின் முன்னோர்கள் எழுதி கையப்பம்மிட்ட ஓலை சுவடியை காண்பித்தார் . தனக்கு திருமணம் நின்று விட்டதே என்ற கோபத்தில் இறைவனை பித்தா என்று திட்டினார் ஆனாலும் சுந்தரை அழைத்து கொண்டு திருவெண்ணைநல்லூர் வந்து அவரை வாசலில் நிறுத்திவிட்டு இறைவன் தன்பாதுகைகளை வெளியேவே கழற்றி விட்டுவிட்டு மூலஸ்தானம் சென்று மறைந்தார் . வந்தது சிவன் என்று அறிந்து சுந்தரர் பரவசப்பட்டார் . இவர்களுக்கு இடையே வாக்கு வாதம் நடந்தை குறிக்கு விதமாக வெளிப்பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது . இதில் இன்றும் பல வழக்குகள் இறைவன் முன்பு தீர்க்கப்படுகின்றன .
  • இறைவன் அசரீரி மூலம் சுந்தரரை பாட சொன்னார் என்ன பாடுவது அவர் கேட்க தன்னை தன்னை பித்தா என்று திட்டியதை வைத்து பாட சொன்னார் ,சுந்தரர் ‘பித்தா பிறைசூடி பெருமானே ‘ என்ற பாடலை முதன் முதலில் இத்தலத்தில் பாடினார் .
  • சுந்தரரை நண்பராக சிவன் ஏற்றுக்கொண்ட தலம் இது .

Photos

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-krupapureeswarar-temple.html

செல்லும் வழி
விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாக திருக்கோயிலூர் போகும் வழி .

Location:

                 திருச்சிற்றம்பலம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *