Sri Ekambareswarar Temple – Aminjikarai

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் –  அமைந்தகரை

இறைவன் : ஏகாம்பரேஸ்வரர்

இறைவி : காமாட்சி

ஊர் : அமைந்தகரை , சென்னை

சென்னையில் சைவ , வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இரண்டு கோயில்கள் அருகருகே நிறைய இடங்களில் உள்ளது , உதாரணமாக கோயம்பேடு , சைதாப்பேட்டை ,தாம்பரம் ஆகிய இடங்களில் சிவன் விஷ்ணு கோயில்கள் அருகருகே அமைந்துருக்கும் அதுபோல் அமைந்தகரையில் சிவன் கோயிலான ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பெருமாள் கோயிலான பிரசன்ன வரதராஜ கோயிலும் அருகருகே உள்ளன . இவ் இடத்தை வடகாஞ்சி என்று சொல்லுவார்கள் .

கூவம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . கிழக்கு நோக்கிய  ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம் மற்றும் கொடிக்கம்பத்தை காணலாம் .

உள்ளே சென்றால் கிழக்கு நோக்கி இறைவன் சிறிய லிங்க திருமேனியுடன் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தருபவராக அருள்பாலிக்கிறார் . அருகில் தனி சன்னதியில் இறைவி காமாட்சி தாயார் தெற்கு நோக்கி நமக்கு அன்பையும் கருணையும் அள்ளி தருபவராக உள்ளார் .

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் ,தட்சணாமுர்த்தி ,விஷ்ணு ,பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் உள்ளார்கள் . உள் பிரகாரத்தில் சிவகாமி சமேத நடராஜர் உற்சவமூர்த்தி ,63 நாயன்மார்கள் ,பைரவர் ,சூரியன் ஆகியோர்கள் இருக்கிறார்கள் . வெளி பிரகாரத்தில் மகா கணபதி , வள்ளி தெய்வானை சமேத சண்முகர் , நவகிரக சன்னதி ஆகியோர் உள்ளார்கள்.

இக்கோயிலானது சுமார் 150 வருட பழமையானது . இக்கோயிலானது திரு . செங்கல்வராயன் முதலியார் என்பவரால் கட்டப்பட்டது ஆகும் . இப்போது இக்கோயிலானது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

இக்கோயிலுக்கு பின்புறம் ஒரு நுழைவு வாயில் உள்ளது அதன் வழியே சென்றால் கோயிலுக்கு நேர் எதிரே பெருமாள் கோயில் நுழைவுவாயிலை அடையலாம் . அமைந்தகரைக்கு சென்றால்  இரண்டு கோயில்களையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 . 00  மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 . 00 மணி முதல்

 9 .oo மணி வரை

Contact Number : 044 26640243

செல்லும் வழி :

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் பூந்தமல்லீ சாலையில் சுமார் 5 km தொலைவில் அமைந்தகரை உள்ளது . லட்சுமி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *