Sri Prasanna Varadharaja Perumal Temple – Aminjikarai

ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில்  – அமைந்தகரை

சென்னையில் சைவ , வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இரண்டு கோயில்கள் அருகருகே நிறைய இடங்களில் உள்ளது , உதாரணமாக கோயம்பேடு , சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் சிவன் விஷ்ணு கோயில்கள் அருகருகே அமைந்துருக்கும் அதுபோல் அமைந்தகரையில் சிவன் கோயிலான ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பெருமாள் கோயிலான பிரசன்ன வரதராஜ கோயிலும் அருகருகே உள்ளன . இவ் இடத்தை வடகாஞ்சி என்று சொல்லுவார்கள் .

கூவம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . கிழக்கு நோக்கிய ஐந்து நிலை  ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிக்கம்பத்தை காணலாம் . கொடிமரத்தின் வலது புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது . அவரை கடந்து நாம் சென்றால் கிருஷ்ணர் சன்னதியை அடையலாம் .

பிறகு நாம் மூலவர் உள்ள கருவறை பகுதியை அடையலாம் . மூலவர் பிரசன்ன வரதர் கிழக்கு நோக்கி  நின்ற கோலத்தில் நமக்கு அருள்பாலிக்கிறார் .  பிரகாரத்தின் ஓரத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் உள்ளார்கள் . மற்றும் ராமானுஜர் ,மணவாள முனிவர் ,முதலியாண்டவர் ,நாதமுனி ,கூரத்தாழ்வார்  மற்றும் ஆளவந்தார் ஆகியோர் உள்ளார்கள் .

பெருந்தேவி தாயார் வடமேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் நமக்கு சேவையாற்றுகிறார் . அவரை கடந்து நாம் சென்றால் ஆண்டாள் அம்மையார் , ஸ்ரீனிவாச பெருமாள் ,ரங்கநாதர் பெருமாள் மற்றும் சீதா சமேத கோதண்டராமர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன .

இக்கோயிலானது சுமார் 400 வருடங்கள் மேல் பழமையானது . இக்கோயிலானது திரு . செங்கல்வராயன் முதலியார் என்பவரால் கட்டப்பட்டது ஆகும் .

இக்கோயிலுக்கு முன் ஒரு வாசல் உள்ளது அதன் வழியே நாம் சென்றால் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு செல்லலாம் .அமைந்தகரைக்கு சென்றால்  இரண்டு கோயில்களையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 . 00  மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 . 00 மணி முதல்

 9 .oo மணி வரை

செல்லும் வழி :

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் பூந்தமல்லீ சாலையில் சுமார் 5 km தொலைவில் அமைந்தகரை உள்ளது . லட்சுமி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

Location Map :

திருச்சிற்றம்பலம்

Leave a Reply