Sri Chottanikkara Bhagavathy Temple – Chottanikkara

சோட்டாணிக்கரை பகவதி கோயில் – சோட்டாணிக்கரை

Chottanikkara Bhagavathy temple

கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் நிறைய கோயில்கள் மிகவும் புகழ் பெற்றது . குருவாயூரப்பன் , திரிசூர் வடக்குநாதர் , சபரிமலை அய்யப்பன் ,திருவனந்தபுரம் பத்மநாபா கோயில் ஆகிய கோயில்களை போல் இந்த சோட்டாணிக்கரை பகவதி கோயிலும் மிகவும் பிரசித்திபெற்றது .

அம்மே நாராயணா ! தேவி நாராயணா !! என்று இத்தாயை அன்புடன் அழைப்பார்கள் . இதற்கு பொருள் நாராயணனின் இதயத்தில் என்றும் இருப்பவள் ! என்று பொருளாகும் . இக்கோயிலானது மன நோய் உள்ளவர்கள் ,பில்லி சூனியம் ஆகியவற்றைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து பூஜை செய்கிறார்கள் .

கோயில் அமைப்பு :

இக்கோயிலின் கிழக்கு வாசலே பிரதானமான வாசல் ஆகும் , ஆனால் பெரும்பாலும் எல்லோரும் மேற்கு வாசல் வழியாக தான் கோயிலுக்குள் செல்கிறார்கள் . கிழக்கு நோக்கியே அம்மா காட்சி தருகிறார் ,சன்னதியின் முன் உள்ள மகாமண்டபத்தில் பெரிய தீப கம்பம் உள்ளது அதன்  வழியாக பார்த்தால் பகவதி தாயாரை நாம் தரிசனம் செய்யலாம் .

இதன் நேர் எதிரே 200 அடி தூரத்தில் திருக்குளம் உள்ளது.குளத்தின் மறுகரையில் உக்கிரகாளியின் சன்னிதி.இதையே கீழ்க்காவு அம்மை என்கின்றனர்.இந்த அம்பாள்,சோட்டாணிக்கரை தேவியின் தங்கை.கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வ மங்கலம் சுவாமிகள்.

இந்த கோவிலின் விசேஷமே “தீய ஆவிகள், ஏவல், செய்வினை” போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலின் பகவதி அம்மன் துர்கையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் போது தரிசித்து பின்பு சன்னிதியின் இடது பக்கம் பழமையான  மரம் ஒன்று இருக்கிறது.இந்த மரத்தின் மேல் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. துர்தேவதைகளாலும் மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர்.

காலையில் வெள்ளை புடவை அணிவித்து சரஸ்வதியாகவும், மாலை சிவப்பு புடவை அணிவித்து லட்சுமியாகவும், இரவு நீலப்புடவை அணிவித்து துர்க்கையாகவும் பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சிதருகிறார் .

கோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் இருப்பவர், சிவபெருமான். அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குப் பக்கமாக இருப்பது நாகராஜா சந்நிதி உள்ளது .

பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி, வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி  அம்மன், எல்லாவித பாவத்திலிருந்து காப்பவள் என்பதால் வலது கையை பாதத்தில் காட்டி இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.

குருதி பூஜை :

பெரும்பாலும் கேரளாவில் உள்ள பகவதி கோயில்களில் குருதி பூஜை நடப்பது வழக்கம் அவ்வாறு இந்த கோயிலிலும் குருதி பூஜை மிகவும் பிரசித்திபெற்றது.தினமும் இரவு 8.45 மணிக்கு நடக்கும் ‘குருதி பூஜை’செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும்.நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை.இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீகம்.ஒரு காலத்தில் இங்கு உயிர்ப் பலியும் ரத்த பூஜையும் நடந்துள்ளன.காலம் மாறிவிட்டாலும் பழைய பழக்க வழக்கங்களின் நினைவாகவே இன்றும் குருதி பூஜை நடக்கிறது.குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருவார்கள்.

கீழ்க்காவு அம்மையைப் பார்க்கப் போகையில் வழியில் குளத்தின் வடக்கே பிரம்ம ராட்சசன் சன்னிதியைக் காணலாம்.ஆனால் சுவர்கள் கூரை ஏதும் இல்லாமல் திறந்தவெளியில் நான்கு கற்களை நட்டு அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் பூசி வழிபடுகிறார்கள் . அந்த நான்கு கற்கள் வனதுர்க்கை ,சாஸ்தா ,காளி மற்றும் பிரம்ம ராட்சசன் என்று வணங்குகிறார்கள் .

இங்கு கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் மிக கடுமையாக இருக்கும் , இதனாலேயே நமக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும் .

மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம்.

பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, “அம்மே நாராயணா.. தேவி நாராயணா.. லக்‌ஷ்மி நாராயாணா. பத்ரி நாராயணா.”  என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.

சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன் பக்தர்களின் அம்மே நாராயணா என்ற கோஷமும் ஒலிக்கும் .

பரிகாரங்கள் :

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைவதை அன்றாடம் கண்கூடாகப் பார்க்கலாம். நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்பவர்களும் உண்டு. திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

திறந்திருக்கும் நேரம் :

காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 3:30 மணி முதல் 12:00 மணி வரை திறந்திருக்கும்.

செல்லும் வழி

 கொச்சின் அதாவது எர்ணாகுளத்தில் இருந்து 16 km தொலைவில் உள்ளது . நிறைய பேருந்து வசதிகள் உள்ளது .

The Divine Mother known as Rajarajeswari is worshipped here in three forms Saraswathy in the morning, Lakshmi at noon and Durga in the evening. There is an Idol of Mahavishnu on the same pedestal and so the Deity is called Ammenarayana, Devinarayana, Lakshminarayana and Bhadrenarayana also. Along with Lakshmi & Narayana there are idols of Brahma, Siva, Ganapathi ,Subramanya and Sastha on the same pedestal. the temple complex consists of Kizhukkavu Bhagavathy temple, temples for Sastha, Siva, Ganapathi, Nagas and other Upa-Devas. The pleasant atmosphere in the temple give mental peace and harmony to devotees.

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *