Sri Thiruvappudaiyar Temple – Madurai

திரு ஆப்புடையார் கோயில் – திருஆப்பனூர் ,செல்லூர்

Sri Thiruvappudaiyar Temple - Madurai

இறைவன் : ஆப்புடையார் ,அன்னவிநோதர்

இறைவி : குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம் : கொன்றை மரம்

தல தீர்த்தம் : இடபதீர்த்தம், வைகை நதி

ஊர் : செல்லூர் , மதுரை

மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இத்தலம் 2 வது தலமாகும் . இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை தரிசித்து விட்டு வீட்டிற்கு சென்றால் நமது ஒவ்வொரு அடியும் வறுமையை போக்கி செல்வதை வாரி தரும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது .

நாம் மதுரை என்றவுடன் மீனாக்ஷி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயிலை நம் நினைவுக்கு வரும் அக்கோயில்களுக்கு மட்டுமே நாம் சென்றுவருவோம் , ஆனால் இக்கோயிலுக்கு இணையாக பழமையான பல பெருமைகளை கொண்ட பல கோயில்கள் இவ் மதுரை நகரில் உள்ளது , அந்த வகையில் நான் இந்த பகுதியில் தேவார பாடல் பெற்ற பழமையான கோயிலான இந்த ஆப்புடையார் கோயிலை பற்றி இங்கு எழுதுகிறேன் .

கோயில் அமைப்பு :

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை அதற்கு பதில் ஒரு முகப்பு வாயில் உள்ளது , அந்த முகப்பு வாயிலில் சுதை வடிவமாக சிவன் ரிஷபாரூடராக பார்வதி ,முருகர் மற்றும் விநாயகர் ஆகியோர் உள்ளார்கள். உள் நுழைந்தால் நாம் கொடிமரம் மற்றும் பலிபீடத்தை காணலாம் . இறைவன் சன்னதிக்கு முன் உள்ள மண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது , இறைவன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . கோயிலை வலம் வந்தால் விநாயகர் ,காசி விஸ்வநாதர் கோயில் ,பஞ்ச லிங்கம் ,சோழர் காலத்து சண்டீகேஸ்வரர் ஆகியவர்களை தரிசனம் செய்யலாம் . மற்றும் முருகர் சன்னதி அதற்கு முன் தலவிருச்சம்  வன்னி மரம் உள்ளது , வன்னி மரத்தின் அருகில் தாயார் சன்னதி உள்ளது . தயார் சன்னதிக்கும் இறைவன் சன்னதிக்கும் இடையில் முருகர் சன்னதி உள்ளதால் இவ்வமைப்பை சோமஸ்கந்தர் அமைப்பு என்பர் .

இங்கு தனி மண்டபத்தில் கல் சிற்பமாக நடராஜர் ,சிவகாமி அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் காட்சியளிக்கிறார் . இவ் சிலைகள் மிக அற்புதமான சிற்பவேலைப்பாடுகளுடன் உள்ளது இங்குள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளது .

பின்பு நவகிரக சன்னதி ,கைலாசநாதர் மற்றும் பைரவர் ,பழனி முருகர் ஆகியோர் சிறிய சன்னதிகளில் காட்சிதருகிறார்கள்.

தல புராணம் :

 சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவ பக்தன்.சிவ பூஜை செய்துவிட்டுதான் சாப்பிடுவார். ஒரு சமயம் இவர் காட்டிற்கு வேட்டையாட சென்றார். காட்டில் ஒரு மானைப் பார்த்து அதன் அழகில் மயங்கி  அதனை துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் சென்று விட்டார். களைப்பில் மயங்கி விழுந்துவிட்டார். மன்னனை தேடி வந்த அமைச்சர் மன்னர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் , மன்னரின் மயக்கம் தெளிய சிறிது உணவு அருந்துமாறு கூறினர். சிவபூஜை செய்து விட்டு தான் உணவு அருந்துவேன் என்று மறுத்துவிட்டார். சமயோசித புத்தி கொண்ட அமைச்சர் அங்கு அருகில் கிடந்த ஒரு மரத்துண்டைஅந்த இடத்தில் ஒரு ஆப்பு அடித்துவிட்டு மன்னரிடம் “மன்னா இங்கு ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதை வணங்கி விட்டு சாப்பிடலாமே” என்றார். பசி மயக்கத்திலிருந்த மன்னன் அந்த ஆப்பையே சிவன் என்று நம்பி பூஜை செய்துவிட்டு உணவு உட்கொண்டார். உணவு அருந்திய பின் மயக்கம் நீங்கிய மன்னன் தான் வணங்கியது சிவனை அல்ல அது ஒரு ஆப்பு என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார். தன் தவறை மன்னிக்குமாறும் இந்த ஆப்பிலேயே இறைவன் காட்சி கொடுக்குமாறும் மனம் உருகி வேண்டி தன் உயிரியே மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தான் , இறைவன் அவனுடைய இறைபக்தியை எண்ணி மகிழ்வுற்று இவ் ஆப்பிலேயே மண்ணாக்கு காட்சிகொடுத்தார் . இதனாலேயே சிவன் ஆப்புடையார் ஆனார் .

செல்வத்தை வாரி தரும் குபேரன் :

பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவர் ஒரு சிவபக்தர். இவர் உலகில் உள்ள எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ச்சியடைந்த ஆப்புடையார் தாயார் சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

உலக செல்வங்களுக்கு அதிபதியாகிவிட்டதால் கர்வம் கொண்டு செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை மனம் உருகி வேண்டிக்கொண்டதால்  இறைவனின் கருணையால் மீண்டும் பார்வையை பெற்றார். ஆப்புடையார் இவரை குபேரன் என்று அழைத்து மீண்டும் நல் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்க நிதி பதும நிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வருகிறார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.

இந்த ஆலயத்தில் சிவ பெருமானை வணங்கிவிட்டு இல்லத்திற்கு செல்லும் ஒவ்வொரு அடிக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிறப்புகள் :

மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாகும் .குபேரன் தோன்றிய தலம். இந்திரன் வழிபட்ட தலம்.தாயாருக்கு சாத்தப்படும் வாசனைமலர்கள் பிறகு எடுத்து பார்த்தால் வாசனை இருக்காது. அம்பாள் மலர்களின் வாசனையை எடுத்துக் கொள்வதாக ஐதீகம்.

இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார்.

மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.

 இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களுள் விசேஷமானவர். இவரை வணங்கினாலே மற்ற மூர்த்திகளை அர்ச்சித்த பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/07/sri-thiruvappudaiyar-temple-madurai.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 . 30  முதல் 11 .00  மணி வரை , மாலை 5 .00  மணி முதல் 9 . ௦௦ மணி வரை

contact Number : 0452 – 2349868 ,250173

செல்லும் வழி :

மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில இக்கோயில் உள்ளது .பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து  நகர பேருந்து 17 ,17A ,17C ஆகியவைகள் செல்கின்றன. திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.

This Thiruvappudaiyar temple is situated in the city of Madurai. This is one of the 274 Thevara padal sthalam dedicated to god siva. The temple was constructed by pandiyas perod and further developed by Nayakars. This shiva lingam is suyambumurthy and small size. Punniyasenam became a kuberar by the grace of this temple god.

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *