Sri Balasubramaniyar Temple – Andarkuppam

ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் – ஆண்டார்குப்பம்

Sri Balasubramaniyar Temple - Andarkuppam

இறைவன் : பாலசுப்பிரமணியர்

தாயார் : விசாலாக்ஷி

தீர்த்தம் : வேலாயுத ஸ்வாமி தீர்த்தம்

ஊர் : ஆண்டார்குப்பம்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் படைப்பு தொழிலையும் தானே எடுத்து கொண்டார் .

முருகன் இங்கு வேல் ,வஜ்ரம் , சக்தி என எவ்வித ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார் . சுவாமிக்கு அருகில் 2 யானை வாகனம் இருக்கிறது. காலையில் இவர் குழந்தையாகவும் , உச்சி வேளையில் இளைஞராகவும் , மாலையில் முதியவராகவும் தோற்றமளிக்கிறார் . இது ஒரு வித்தியாசமான தரிசனம் ஆகும் .

ஆளும் கோலத்தில் முருகன் இங்கு இருப்பதால் “ஆண்டார்குப்பம் ” என அழைக்கப்படுகிறது .

பிரம்மா இங்கு முருகனுக்கு எதிரில் நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார் . இதில் பிரம்மாவிற்கு உருவம் இல்லை .அவருக்குரிய தாமரை , கமண்டலம் ,அட்சரமாலை மட்டும் இருக்கிறது . இங்கு முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார் . இத்தலத்தை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் . மற்றும் வாரியார் ஸ்வாமி , பாம்பன் ஸ்வாமி இத்தலத்திற்கு வந்து இறைவனை போற்றி வழிபட்டுள்ளார்கள்.

இத்தலத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி அம்மையாருக்கு தனி சன்னதிகள் உள்ளன .

இப்படி மிக அற்புதமான மகிமைகளை கொண்ட இந்த அழகன் முருகன்  அருள்தரும் இந்த புண்ணிய ஷேத்ரதிற்கு நாம் வந்து வணங்கினால் பொறுப்பான பதவி ,அதிகார பதவிகள் மற்றும் புத்திசாலியான குழந்தைகள் ஆகியவை கிடைக்கும் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 – 12 .30 மணி, மாலை 4 .00 – 8 .30 மணி வரை
ph – 044 – 27974193

செல்லும் வழி:

சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு சாலையில் வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது . 

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *