Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர்

Sri Abirameswarar Temple- Thiruvamathur

இறைவன் : அபிராமேஸ்வரர்

இறைவி : முத்தாம்பிகை

தல விருச்சம் : வன்னி ,கொன்றை

தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம்

ஊர் : திருவாமத்தூர்

மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர், சுந்தரர் ,சம்பந்தர் ,அருணகிரிநாதர்

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் இது 21 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் 232 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

கோபுர வாயிலை கடந்தால் உள்ளே சுதையால் ஆன பெரிய நந்தியும், பாதாள நந்தியும் உள்ளன . இங்கு கோயில் மண்டபத்தில் நிறையே கல்வெட்டுகளும் ,அக்கல்வெட்டுகளில் கோபுரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜன் ,முதலாம் ராஜேந்திர சோழன் ,வீர ராஜேந்திர சோழன் ,முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர்களை பற்றி உள்ளது .

இந்த ஆலயம் தவம் ,தீர்த்தம் ,மூர்த்தி என மூன்றிலும் சிறப்புகளை கொண்டது .இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார் .இறைவன் லிங்கத்தின் மீது சந்திர பிறை போல,பசுவின் கால் குளம்பின் சுவடு காணப்படுகிறது .இறைவன் சற்று இடது புறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறார் .

இவ் ஆலயத்தில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன .கருவரையில் சுயம்பு மூர்த்தியாக அபிராமேஸ்வரர் ,ராமபிரானின் வேண்டுகோளின் படி அனுமன் கொண்டுவந்த அனுமதீஸ்வரர் ,சகஸ்ர லிங்கம் ,குபேரலிங்கம் ,அண்ணாமலையார் ,காசி விஸ்வநாதர் ,வாயு திசையில் உள்ள வாயுலிங்கம் ,ஈசான மூர்த்தி ஆகிய லிங்கங்கள் பக்தர்களுக்கு அருள் புரிகிறார் .

அபிராமேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கியும் ,கோயிலின் எதிர் திசையில் சற்று வடபுறம் தள்ளி நேராக மேற்கு நோக்கி முத்தாம்பிகை கோயிலும் அமைந்துள்ளது .இவர்கள் இருவரையும் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .

திருவட்டப்பாறை

Sri Abirameswarar Temple- Thiruvamathur

இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஓன்று உள்ளது .இந்த பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள் ,தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீறாத துன்பத்தில் வீழ்வார்கள் என்பது ஐதீகம் .இதற்க்கு ஒரு புராண கதையையும் சொல்கிறார்கள் . சொத்து தகராறில் அண்ணன் தம்பியை ஏமாற்ற ,தம்பி இவ் வட்டப்பாறையின் முன்பு அண்ணனை சத்தியம் செய்ய சொன்னான் ,அவன் பொய் சத்தியம் செய்தான்.அவன் பொய் சத்தியம் செய்துவிட்டு இவ் தலத்தில் இருந்து சுமார் 9 km தொலைவில் உள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனை கடித்து சாகடித்தது.அவ்வாறு கடித்து சாகடித்த இடத்தில இன்றும் பெரிய நாகசிலை உள்ளது .இவ்நிகழ்வை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் இவ்தல இறைவி முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் வால் சிற்பம் உள்ளது .எனவே பொய் சாட்சியால் சிக்கலில் இருக்கும் பல வழக்குகள் பலவும் ,இங்கு வந்து தீர்க்கப்படுவது கண்கூடாக நடக்கும் செயலாகும் .இந்த வட்டப்பாறையில் இப்போது சிவலிங்கம் உள்ளது .

இத்தல இறைவனை அகத்தியர் ,வசிஷ்டர் ,துர்வாசர் ,பிருகு ,பராசரர் ,விசுவாமித்திரர் ,வியாசர்  ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டுள்ளனர்.அம்பிகை ,விநாயகர் ,பிருங்கி முனிவர் ,மதங்க முனிவர் ,அஷ்டவசுக்கள் ,மகாகாளன் ,ராமபிரான் ,இரட்டை புலவர்கள் ஆகியோர்கள் வழிபட்டுளார்கள்.

Sri Abirameswarar Temple- Thiruvamathur

தல வரலாறு :

பசுக்கள் ஆகிய உயிர்களுக்கு தாயாக இறைவன் அருளும் தலம். இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி இங்கு சாபம் நீங்க பெற்ற தலம் . ராமன் வழிபட்ட தலம் . ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டன . தெய்வ பசுவாகிய காமதேனு தன்னை அழிக்கவரும் மற்ற மிருகங்களிடம் தன்னை காத்துக்கொள்ள கொம்பு வேண்டும் என்று நந்தி தேவரிடம் முறையிட்டது அவரும் அவர்கள் கேட்பது சரியே என்று எண்ணி பம்பை நதிக்கரையில் உள்ள உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் நோக்கி இத்தலத்தில் தவம் இருக்குமாறு கூறினார் .அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம்  செய்து கொம்புகளை பெற்றன .பசுக்கள் பூஜித்த தளம் என்பதால் திருமாத்தூர் என்று பெயர் பெற்றது .இத்தலத்தை பற்றி யார் புகழ்ந்து பேசினாலும் ,கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது .மிகவும் பழமையான தலமாகும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-abirameswarar-temple-thiruvamattur.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .30  முதல் 12 .00 மணி வரை ,மாலை 5 .00 முதல் 8 .30 மணி வரை

அமைவிடம் :

வில்லுபுரத்தில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது .விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகள் உள்ளன .காரில் செல்ல வேண்டும் எனில் விழுப்புரம் புற வழி சாலையில் உள்ள பொன்னுசாமி ஹோட்டல் எதிர்புறம் உள்ள சாலையில் சுமார் 3 km சென்றால் இவ் பதியை அடையலாம் .மிகவும் அழகான கிராமத்திற்கு நடுவில் இவ் பதி அமைந்துள்ளது .

This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 21st Shiva Sthalam in Nadu Naadu.Lord Shiva’s idol has the impression of a hoof at the top. There are multiple rivulet markings which signify that this lord was worshiped with milk that flowed from udders of cows.Inscribed on the chest of Goddess Muthambikai’s idol here is a small piece of what looks like a snake’s tail.In this temple, there are stone inscriptions that document the histories of 26 kings from 955 to 1584 AD. The important kings among them are Rajaraja Cholan-I, Rajendra Cholan-I, Rajathi Rajan-I, Kulothungan-I, Vikramathithan, Sadaya Verman, Vikrama Pandian and Krishnadeva Rayar.

Location :

ஓம் நமசிவாய !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *