Water Butter Milk

நீர்மோர்

தேவையான பொருள்கள்:

தயிர் – ஒரு கப்தண்ணீர் – 3 கப்இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – 4,5 இலைகொத்தமல்லி – சிறிதுபச்சை மிளகாய் – 1/2உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1 சிட்டிகைவிரும்பினால்..வெள்ளரி – 1 துண்டுகேரட் – 1 துண்டுமாங்காய் – 1 துண்டு

செய்முறை

புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட்,மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து நன்கு டீ வடிகட்டியில் வடிகட்டவும்.
வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *