Sri Valeeswarar Temple- sevur

ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் – சேவூர்

Sri Valeeswarar Temple- Sevur
Main Gopuram

மூலவர் : வாலீஸ்வரர் , கபாலீஸ்வரர்

தாயார் : அறம்வளர்த்த நாயகி

தீர்த்தம் : தெப்பம்

புராணபெயர் : கபாலீஸ்வரம் ,ரிஷபகிரி ,மாட்டூர்

தல விருச்சகம் : வன்னி மரம்

தீர்த்தம் : வாலி தீர்த்தம்

ஊர் : சேவூர்

மாவட்டம் : கோயம்பத்தூர்

  • வாலி பூஜை செய்து வணங்கிய கோயில்கள் அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது
  • இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , சுந்தரர் இக்கோயிலை வைப்பு தலமாக பாடியுள்ளார் . சம்பந்தர் 2 திருமுறையில் ௩௯ பதிகத்திலும் மற்றும் சுந்தரர் 7 திருமுறையில் 47 பதிகத்தில் இத்தலத்தை பற்றி எழுதியுள்ளார்கள் .
  • இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையே முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார் . இது ஒரு சோமாஸ்கந்தர் அமைப்பாகும் .
  • இங்குள்ள முருகன் இடது கையில் சேவல் கொடிக்கு பதிலாக சேவலை வைத்திருக்கிறார் ,இவ் நிலை தனித்தன்மை பெற்றது
  • இங்குள்ள நடராஜர் மூர்த்திக்கு ஐந்து தலத்து நடராஜர்களை ஒன்று சேர்த்து ஒன்றாக அமைத்துள்ளனர். இக்கோயிலை நடு சிதம்பரம் என்று அழைக்கிறார்கள்.
  • வெளியில் உள்ள கல் தூணில் வாலி சிவனை பூஜிக்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது .
  • கொங்கு நாட்டில் அதிக கல்வெட்டுகள் , நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் .
  • இவூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும் , சேவூர் பழம்காலத்தில் பல போர்களை சந்தித்து உள்ளது அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இந்த தளத்தில் சென்று படிக்கவும் .
    http://sevurwar3.blogspot.com/?view=classic

அமைவிடம் மற்றும் செல்லும் வழி
அவிநாசியிலிருந்து 5 km தொலைவில் உள்ளது ,அவிநாசியிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-valeeswarar-temple-sevur.html

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *