Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

ஸ்ரீ லவபுரிஸ்வரர் கோயில் – கோயம்பேடு

Lavapureeswarar temple, Koyambedu

இன்றைக்கு நாம் தரிசிக்க போகும் கோயில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில், தென் இந்தியாவில் இருந்து தினமும் மக்கள் வந்து போகும் இடத்தில் யாரும் அறிந்திடாத சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட்  மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தின் மிக அருகில் வீற்றியிருக்கும் லவபுரீஸ்வரர் கோயிலை பற்றித்தான்இந்த பகுதியில் பார்க்கபோகிறோம் .

வால்மீகி முனிவர் கூறுவது போன்று, மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண  கதையும் நிலைத்திருக்கும். தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டிட மனிதனாக அவதாரம் எடுத்த திருமாலின்  ஏழாவது அவதாரமாக சிறந்த லட்சியவாதியாக,உத்தமசீலனாக காப்பியத்தில் படைக்கப்பட்ட இராமன் எளிதில் தெய்வத்தன்மையை பெற நேர்ந்தது. மேலும், இராமனை தங்கள் மனோபாவத்தால் புனைந்துபுனைந்து அத்தெய்வத்தன்மை புலப்படும் செய்திகளை பாரத நாட்டவர்கள் தங்கள் கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி கற்பிக்கலாயினர். அதுமட்டுமன்றி, ஆங்காங்கே வழக்காற்றிலிருந்த செய்திகளை இராம கதையுடன் இணைத்துப் பார்ப்பதில் இன்பூறு எய்தினர். இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன.

அவ்வாறு ஒரு இராமாயணத்தோடு தொடர்பு உடைய இந்த கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்ஸ்வரர் கோயில் மற்றும் வைகுண்ட வாச பெருமாள் கோயில் மற்றும் இந்த லவபுரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும் .

இந்த கோயம்பேட்டில் வால்மீகி மஹரிஷியுடன் சீதா பிராட்டி  மற்றும் இராமபிரான் , சீதா தேவி தம்பதியர்களின் தர்ம புத்ரர்களான லவா , குஸா தன் வனவாசத்தில் விளையாடிய இடமே இந்த கோயம்பேடு ஆகும் .

ராஜகோபுரம் இல்லாமல் ஆர்ச் போல் உள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் கருவரியுடன் கூடிய மஹா மண்டபத்தை அடையலாம் . கருவறையின் இடது புறம் விநாயகர் மற்றும் நால்வர் சன்னதி உள்ளது . இடது புறத்தில் முருகன் சன்னதி சிறிய வடிவில் உள்ளது .

ஈசன் லவபுரீஸ்வரர் சற்று பெரிய லிங்க திருமேனியுடன் காட்சி தருகிறார் , அப்படியே கோயிலை வலம் வந்தால் ஒரு பெரிய லிங்க திருமேனியுடன் ஈசன் வெட்ட வெளியில் உள்ளார் அவரை தரிசனம் செய்துவிட்டு நாம் துர்கா தேவி மற்றும் சண்டிகேஸ்வரரை தர்சனம்  செய்துவிட்டு  விட்டு அப்படியே தாயார் சௌந்தராம்பிகை  உள்ள சன்னதியை அடையலாம் . தாயார் தன் பெயருக்கு ஏற்றார் போல் மிக அழகாக  கருணை முகத்தோடு  போல் கருணையையை வாரி வழங்குகிறார் .

பின்பு நாம் வலம் வந்தால் பைரவர் சன்னதி காணலாம் , அவரின் அருகில் நாம் வேறு எங்கும் காண முடியாத மிக அற்புதமான திருமேனியுடன் ஈசனின் கருவறைக்கு நேராக “வனதுர்காதேவி ” தனி சன்னதியில் உள்ளார் . அவருக்கு ஞாயிறு ராகு காலத்தில் சிறப்பான அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன .

இக்கோயிலானது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/10/sri-lavapureeswarar-temple-koyambedu.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 மணி முதல் பகல் 11 .30 மணி வரை , மாலை 5 .30 முதல் இரவு 8 . 30 வரை .

செல்லும் வழி :

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிக்னல் அருகில் உள்ள அம்மன் கோயிலின் அருகில் இக்கோயில் உள்ளது. வைகுண்ட வாச பெருமாள் கோயில் அருகில் செல்லும் தெருவில் வந்தாலும் இக்கோயிலை அடையலாம் .

Location :

இதுபோல் சிறு கோயில்களுக்கு நாம் சென்று நம்மால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து நாம் அந்த ஈசனின் அருளை பெறுவோம் .

  நமச்சிவாயா!

Leave a Reply