Sri Kari Krishna Perumal Temple – Thiru Ayarpadi (Chennai)

ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் – திரு ஆயர்பாடி (சென்னை )

Sri Kari Krishna Perumal Temple - Thiru Ayarapadi

இறைவன் : கரி கிருஷ்ணர்

தாயார் : சௌந்தரவல்லி

ஊர் : திரு ஆயர்பாடி (பொன்னேரி )

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

கரிகால சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும் ,இதனாலேயே இவ் தல இறைவனுக்கு தன் நாமத்திற்கு முன் கரி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது .

இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக மனித உருவில் அருள்தருகிறார் . அவர் வலது கால் பள்ளத்தில் இடது கால் மேட்டிலும் வைத்துள்ளார் . வலது கையில் சாட்டை வைத்துள்ளார் ,இடது கையை இடுப்பில் வைத்து ஒருபுறம் சாய்ந்தவாறு காட்சி தருகிறார் . இரண்டு கைகளுடன் கிருஷ்ணர் காட்சி தருகிறார் . சங்கு சக்ரம் இல்லமால் மனித உருவில் தரிசனம் தருகிறார் . தலையில் அமிர்த கலசம் என்கிற சின்ன பானையை கவிழ்த்து வைத்துள்ளார் .

இத்தலத்தின் உள்ளே ஒரு புற்று உள்ளது . இது விஷ்ணு கோயிலில் பார்ப்பது அரிது . நாம் வளம் வந்தால் தாயார் சௌந்தரவல்லி சன்னதியை அடையலாம் . இவர் கிருஷ்ணரின் இடது புறத்தில் காட்சிதருகிறார் .

ஹரி ஹரன் சந்திப்பு :
சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்திற்கு நான்கு நாட்கள் முன்பு இங்கு பெருமாள் கருட வாகனத்தில் சென்று சிவனை தரிசிக்க செல்வார் . ஏன்னென்றால் பரத்வாஜ மகரிஷி மற்றும் அகத்தியர் மகரிஷி இருவரும் ஒரே நேரத்தில் இருவரையும் தரிசிக்க எண்ணினார் , அதன் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது . இந்த நிகழ்வானது சித்திரை மாதத்தில் பௌர்ணமி அடுத்து மூன்று நாட்களுக்கு முன் பொன்னேரியில் உள்ள பழைய கடைவீதியான ஹரிஹரன் பஜாரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பாக இந்த அறிய மற்றும் மகத்துவமான சரித்திர நிகழ்ச்சி மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது .

இங்குள்ள 16 கால் மண்டபம் கிருஷ்ணர் எவ்வாறு சாய்ந்து உள்ளாரோ அவ்வாறே எல்லா தூண்களிலும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது .

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து பிராத்தனை செய்கிறார்கள் . குறிப்பாக கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரமான ரோகிணி அன்று வேண்டிக்கொள்கிறார்கள் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .30 – 10 .30 , மாலை 5 .30 – 8 .30 வரை

செல்லும் வழி

சென்னைக்கு அருகில் பொன்னேரிக்கு அருகில் சுமார் 3 KM தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திவ்ய தலம்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/04/sri-kari-krishna-perumal-temple-thiru.html

Map :

அருகில் உள்ள தலங்கள்:

1 . பாலசுப்ரமணியன் கோயில்  – ஆண்டார்குப்பம்

2 . அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி

3 . அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி

4 . ரங்கநாதர் கோயில் – தேவதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *