Sri Kapaleeswarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர்

Sri Kapaleeswarar Temple- Mylapore (Chennai)

இறைவன்: கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஊர் : மயிலாப்பூர் ,சென்னை

மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர்

சென்னையில் உள்ள மிகவும் புகழ் பெற்ற பழமையான கோயில்களில் இவ் கபாலீஸ்வரர் கோயில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது . எந்நேரமும் பக்தர்களால் நிரம்பி இருக்கும் இடம் . கோயிலை சுற்றி நிறைய கடைகள் மற்றும் கோயில் குளத்தின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் என எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் .

தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 24 வது தலமாகும் ,மற்றும் தேவார பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274 இல் 257 வது தலமாகும் .அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் 10 பாடல்களை பாடியுள்ளார் .

இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோயில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

Sri Kapaleeswarar Temple- Mylapore (Chennai)
Punnaivanna nathar

தல பெருமை : சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு. மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.அவரது ஒரு கபாலத்தை கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார்.தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.

தல பெருமை : பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்.அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது,பங்குனிப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வருதல் மிக முக்கியமானதாகும் .இதையடுத்து அன்று மதியம் அறுபத்துமூவர் உலா நடக்கும்.

திறந்திருக்கும் நேரம் :
தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

செல்லும் வழி:
சென்னையின் நடு பகுதியில் உள்ளது . சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 6 km தொலைவில் உள்ளது . விமான நிலையத்தில் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ளது .

God Parvathi wanted to understand the full meaning of the five lettered mantra (na ma shiv va ya) and the significance of the sacered ash.Devi requested god shiva to explain it to her.while shiva teaching to devi ,she was attracted to the beauty of a peacock dancing thre. so her lack of attention ,god shiva crushed her to become a peacock. for relief from this curse,god parvathi come to earth and perform penance.she worshiped lord shiva under a ‘punnai’ tree in this place in the form of peacock.god shiva appeared before her,relieved her from the curce and named her “karpagambigai” and god shiva here is know as ‘sri punnaivana nathar’.

Devara hymns place and Arunagirinathar hymns about this temple murugan.panguni month urchavam very familier,that day all shrines and idols and 63 nayanmars can be seen in coridars.

Location:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kapaleeswarar-temple-mylapore.html

For More beautiful photos please click following link:

https://flic.kr/s/aHsmLk1By6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *