Sri Kailasanathar Temple- Vanagaram(Chennai)

ஸ்ரீ கைலாசநாதர் கோயில் -வானகரம் (சென்னை )

Sri Kailasanathar Temple-Vanagaram

இறைவன் : கைலாசநாதர்

தாயார் : கற்பாகாம்பாள்

தல விருச்சகம் : வில்வம்

ஊர் : வானகரம் ,சென்னை

மாவட்டம் : திருவள்ளூர்

பழம் காலத்தில் சிவலிங்கங்களை நிறுவி பூஜை தினமும் பூஜைகளை செய்து வந்தனர் , மன்னர்கள் தான் ஆண்டுவந்த பகுதிகளில் அவர்கள் தங்கும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகமாக வசித்த பகுதிகளில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர் . ஆனால் பலரின் படியெடுப்பிலும் காலத்தின் மாற்றத்தினாலும் அவ் கோயில்கள் அழிந்தொபோயின, மற்றும் மற்ற மதங்களை சேர்தவர்கள் தாக்கும் போது மூலவர்களை மறைத்து வைத்து காத்தனர்.

இவ் கோயில் பல சிவஅடியார்களால் கண்டெடுத்து இன்று இறைவன் நமக்கு அருள்பாவிக்கிறார் . மிக பழமையான கோயில் உயர்த்த கோபுரங்களோ ,கொடி மரமோ இங்கு இல்லை .

இறைவன் மிக அழகாக சற்று உயரமாக உள்ளார் ,அம்பாள் கற்பகாம்பாள் மிக மிக அழகாக பக்தர்களுக்கு தன் இன்முகத்துடன் கேட்கும் வரம் தருபவளாக காட்சி தருகிறார் .

கோயிலின் நுழைவு பகுதியில் வர சித்தி விநாயகர் ,நாகராஜர் மற்றும் கோடி லிங்கேஸ்வரர் ஆகியோர்கள் அருள் தருகின்றனர் .

இந்து அறநிலை துறை இக்கோயிலை நிர்வகிக்கிறது , இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது .

செல்லும் வழி:
சென்னை பூந்தமல்லி சாலையில் ஏரிக்கரை மேம்பாலம் கடந்தவுடன் வானகரம் முன்னதாக இடது புறத்தில் நம் பார்வை படும்படி இக்கோயில் அமைந்துள்ளது .

முடித்தால் இக்கோயிலுக்கு சென்று இறைவனின் அருளை பெற்று வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இன்புற்று வாழ்வீர்களாக . தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Location :

தென்னாடுடைய சிவனே போற்றி ! என் நாட்டவருக்கு இறைவா போற்றி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *