ஸ்ரீ இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர்
மூலவர் : இருதயாலீஸ்வரர்
தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை
விருச்சம் : வில்வம்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்
சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் மற்ற அனைத்து சிவாலயங்களிலும் காணப்படுவது போல கருவறையில் சிவலிங்கம் தனியாக இல்லாமல் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பூசலார் நாயனாரின் திருஉருவ சிலை அமைந்திருப்பது சிறப்பு .
இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திங்கள் கிழமைகளில் வழிபட்டு வந்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
பூசலார் வரலாறு :
திருநின்றவூரில் பூசலார் என்ற ஒரு சிவனடியார் இருந்தார் அவர் தினமும் ஒரு சிவலிங்கத்தை பூஜித்து வந்தார் .அந்த சிவலிங்கம் வெயில் ,மழை இவைகளால் பாதிக்கப்படுவதை கண்டு மனம் வெந்து தன் இதயத்தில் சிவனுக்கு கோயில் கட்டினார் மனதில் கட்டுவதை கூட அவர் ஒரு கோயில் கட்ட எவ்வளவு காலங்கள் தேவைப்படுமோ அவ்வளவு காலங்கள் தன மனதிலேயே அழகிய மதில் சுவர்கள் ,கருவறை மற்றும் பெரிய பொருட்செலவில் கட்டினார் . இதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ராஜசிம்மன் மன்னன் ஒரு மிக பெரிய கோயிலை கட்டி வந்தான் .இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷகத்திற்கு நாள் குறித்தனர் .
சிவபெருமான் மன்னனின் கனவில் வந்து என்னுடைய பக்தன் ஒருவன் திருநின்றவூரில் இதே நாளில் கும்பாபிஷகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் ஆகவே நான் அங்கு செல்லவிருக்கிறேன் நீ வேற ஒரு நாளில் நடத்திமாறு கேட்டுக்கொண்டார் .
மன்னன் கண்விழித்து பார்த்து இது கனவு என்று உணர்ந்தான் தன் கனவில் சொன்ன இடத்தை தேடி வந்து அங்குள்ளவர்களிடம் பூசலார் கோயிலை பற்றி விசாரித்தார் ஆனால் அதை பற்றி யாருக்கும் தெரியவில்லை ,பின்பு பூசலாரை கண்டு அவர் தன் கனவில் கண்டதை கூறினார் அதை கேட்டு ஆச்சரியப்பட்டு பூசலார் தன் கோயிலை தன் இதயத்தில் கட்டியதாகவும் அதை அறிந்து சிவனே உங்களிடம் கூறியதை கண்டு தன் பேரானந்தம் கொண்டதாகவும் கூறினார் .
ஆச்சரிய பட்ட மன்னன் எவ்வளவு செலவு செய்து கோவில் கட்டுவதை விட தூய்மையான மனதில் கட்டும் கோவிலே சிறந்தது என்று எண்ணி அந்தநாளில் அவரின் இதயத்தில் கட்டிய கோயிலின் கும்பாபிஷகத்தை காண வினவினார் .பூசலாரும் அவரின் எண்ணத்தை நிறைவேற்ற தன் மனதில் கட்டிய கோவிலை காட்டினார் இருவரும் அதை கண்டுகளித்தனர் . சிவபெருமான் பூசலாரை தன் நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார் . மன்னனும் அதே இடத்தில் கோவிலை கட்டிக்கொடுத்தார் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-hridayaleeswarar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .30 -12 .30 , மாலை 5 .00 -8 .30
செல்லும் வழி :
சென்னை -திருவள்ளூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவும் . மற்றும் பூந்தமல்லி ,கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன .
Location map:
Om Namasivaya