Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

ஸ்ரீ  கோதண்டராமர் கோயில் – மேற்கு மாம்பலம் , சென்னை

Sri Kothandaramar Temple - West Mambalam,Chennai

மூலவர் : ஸ்ரீ   கோதண்டராமர்

தாயார்  :  அரங்கநாயகி தாயார்

ஊர் : மேற்கு மாம்பழம் , சென்னை

இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது .

 மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் இலக்குவன் குடை பிடிக்க சிறிய திருவடியாக ஹனுமான் ஸ்ரீராமரின் பாதங்களை தாங்கி பிடிக்க இப்படியொரு பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார் .

கோவில் உள்ளே ரெங்கநாதருக்கு தனி சன்னதி உள்ளது . மஹாசம்ப்ரோக்ஷனை சமயத்தில் திருநீர்மலை ஸ்ரீ ரெங்கநாதர் இங்கு எழுந்தருளி மங்களாசனம் செய்தார் .

இங்கு  உள்ள ஹனுமானுக்கு சஞ்சீவி பர்வத ஆஞ்சிநேயர் என்று பெயர் . அவர் பர்வத மலையை சுமந்தபடி இங்கு காட்சியளிக்கிறார் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 – 10 .30 , மாலை 5 .30 -8 .30

செல்லும் வழி :

சென்னை மாம்பழம் ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் அருகிலும் உள்ளது .

Location Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *