Sri Anjaneyar Temple-Namakkal

ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயில் -நாமக்கல்

Sri Anjaneyar Temple-Namakkal

இறைவன் : ஆஞ்சநேயர்

ஊர் : நாமக்கல்

மாவட்டம் : நாமக்கல் ,தமிழ்நாடு

Sri Anjaneyar Temple-Namakkal
  • தமிழ்நாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும் .
  • பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இவர் எதிரே உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பிய நிலையில் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறார் .
  • பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் .
  • கையில் ஜெபமாலையுடன் இடுப்பில் கத்தியுடன் காட்சியளிக்கிறார்
  • நாமகிரி என்ற பெயர்தான் நாமக்கல் என்று தற்போது அழைக்கப்படுகிறது ,இந்த நாமகிரி மலை விஷ்ணு அம்சம் பொருந்திய சாளிக்ராம மலை ,ஒரே கல்லால் ஆனது .
  • நாமக்குன்றன்மீதமர்ந்த நரசிங்கமே‘ என்று அனுமனை நாமக்கல் மலையாகவும் ,ராமரை நரசிம்மராக உருவகப்படுத்தி கம்பர் பாடியுள்ளார் .
  • நரசிம்மர் மலை வடிவில் கோபுரம் இல்லாமல் இருப்பதால் தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று பக்தர்கள் கனவில் வந்து ஆஞ்சநேயர் மறுத்துவிட்டார் .
  • தங்கக்கவசம் உள்ள ஒரே ஆஞ்சநேயர் இவர் மட்டுமே .
  • இக்கோயில் எதிரில் உள்ள நரசிம்மர் கோயில் ஒரு குடவரை கோயிலாகும் ,இக்கோயில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
  • முதலில் நாமகிரி தாயாரை வணங்கி ,பின் நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு பின் அனுமனை தரிசனம் செய்வது வழக்கம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 – 1 .30 , மாலை 4 .30 -8 .30 மணி வரை

செல்லும் வழி:
தமிழ்நாட்டின் எல்லா திசைகளிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன ,மற்றும் ரயில்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம் ,திருச்சி விமானத்தில் இருந்து நாமக்கல் செல்ல பேருந்துகள் மற்றும் காரில் செல்வது நல்லது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *