Arupadai Veedu Murugan Temple – Besant Nagar, Chennai

அறுபடை வீடு முருகன் கோயில் – பெசன்ட் நகர் , சென்னை

Arupadai veedu murugan temple,Besant nagar

சென்னையில் உள்ள சமீபத்திய காலத்தை சேர்ந்த புகழ்மிக்க கோயில்களில் இந்த அறுபடை வீடு முருகன் கோயிலும் ஒன்றாகவும் .அழகிய கடற்கரை ஒட்டிய பகுதியில் மிக விசாலமானான பரபரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது .

இவ்விடத்தில் நாம் அறுபடை முருகன் அதாவது திருத்தணி ,சாமிமலை ,திருப்பரங்குன்றம் ,பழனி , பழமுதிர்ச்சோலை மற்றும் திருசெந்தூர் முருகனை ஒரே இடத்தில் நாம் தரிசிக்கலாம் .

காஞ்சி மஹாபெரியவா ஒரு முறை குல்பர்கா சென்றபோது திரு அழகப்பா அழகப்பன் அவர்கள் பெரியாவைவிடம் தமக்கு அறுபடை முருகனை ஒரே இடத்தில் கிரானைட்டை கொண்டு கட்டவேண்டும் என்ற ஆசை உள்ளது உங்களது ஆசிர்வாதம் தேவை என்று கூறினார் , அதை கேட்ட பெரியவா தான் சென்னையில் இடம் பெற்று தருவதாக கூறினார் , மகா பெரியவா அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு  MGR விடம்  சொல்லி இந்த பெசன்ட் நகரில் இடம் வாங்கி தந்தார் .

திரு . அழகப்பன் அவர்கள் இந்த இடத்தில் முழுவதும் கிரானைட்டை கொண்டு கோயிலை காட்டினார் . காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அறிவுறுத்தலின் படி நடுவில் மஹாவல்லப கணபதி கோயிலும் அவரை சுற்றி அறுபடை முருகன் குடிகொண்டிருக்கும் திசைகளின் படி அறுபடை முருகனுக்கு தனி தனி சன்னதிகளில் கட்டப்பட்டன . இக்கோயிலானது 1995 முதல் 2002 வரை கட்டப்பட்டன .

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 5 .00 முதல் இரவு 8 .00 மணி வரை

செல்லும் வழி:
இக்கோயிலானது சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது . பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 km தொலைவிலும் , அஷ்டலக்ஷ்மி கோயிலில் இருந்து சுமார் 600 mtr தொலைவிலும் , கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் உள்ளது .

Location:

Leave a Reply