Sri Thiruvaleeswarar Temple – Nerkundram,Chennai

ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயில் – நெற்குன்றம்

இறைவன் : திருவாலீஸ்வரர்

இறைவி : திரிபுரசுந்தரி

ஊர் : நெற்குன்றம் , சென்னை

சென்னையில் உள்ள பழமையான மற்றும் அதிகம் அறியப்படாத சிவத்தலங்களில் இந்த தலமும் ஒன்று ஆகும் . பரபரப்பான கோயம்பேடு பகுதியில் மிக அமைதியாக இந்த கோயில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சம் . பிரதோஷம் ,சிவராத்திரி காலங்களில் பக்தர்கள் குறைவாக இங்கு வருவதால் நாம் அந்த காலங்களில் இறைவனை மிக அமைதியான முறையில் நெருடல்கள் இன்றி தரிசிக்கலாம் .

இக்கோயில் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஜயநகர நாயக்கர்  காலத்தை சேர்ந்ததாக இருக்க கூடும் என்று இக்கோயிலின் கட்டிடங்களை வைத்து நம்பப்படுகிறது .

கிழக்கு நோக்கிய கோயில் , பலிபீடம் மற்றும் நந்தி ஆகியோர் மண்டபத்தின் முன் கிழக்கு திசையில் உள்ளது . அர்த்தமண்டபத்தில் தெற்கு பகுதியில் நுழைவுவாயில் உள்ளது . உள்ளே நாம் சென்றால் கருவறையின் இருபுறங்களிலும் வரசித்தி விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியரும் அர்த்தமண்டபத்தில் உள்ளார்கள் . கிழக்கு நோக்கி வாலீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்தருகிறார் . வேண்டும் வரங்களை அள்ளித்தருபவராக , பக்தனின் குரலுக்கு செவிசாய்ப்பவனாக இவர் இங்கு நமக்கு அருளை வாரி வழங்குகிறார் . தாயார் திரிபுர சுந்தரி தென் திசையை நோக்கி அருள்புரிகிறார் .

இக்கோயிலில் தற்போதைய ஒரு கல்வெட்டில் டி. வி . நீலமேகம் பிள்ளை என்பவர் இக்கோயிலுக்கு 14 .9 .1950 அன்று மகாமண்டபத்தை புதுப்பித்து , கருவறையும் , அர்த்தமண்டபத்தையும் புதியதாய் கட்டி குடமுழுக்கு செய்துள்ளதையும் , தினமும் தவறாமல் பூஜை செய்ய ஏற்பாடு செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

இக்கோயில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது . காலை 7 .00 மணியிலிருந்து 9 .00 மணி வரை திறந்திருக்கும் . பிரதோஷம் ,சிவராத்திரி மற்றும் அஷ்டமி காலங்களில் மாலை நேரத்திலும் திறந்திருக்கும் .

contact Details : 99626 22647

செல்லும் வழி :

கோயம்பேடு பூந்தமல்லி சாலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் தாண்டி சிறிது தூரம் சென்றால் இடது புறத்தில் பெட்ரோல் பங்க் வரும் அதன் அருகில் திரும்பினால் இடது புறத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது .

Location :

– ஓம் நமசிவாய –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *