Sri Thillai Natarajar Temple- Chidambaram

ஸ்ரீ தில்லை நடராஜர் கோயில் – சிதம்பரம்

Thillai Natarajar Temple-Chidambaram
West Gopuram

இறைவன் : நடராஜர் ,அம்பலக்கூத்தர் ,கனகசபாபதி
,திருச்சிற்றம்பலமுடையர் ,கூத்தபிரான்

அம்பாள் : சிவகாமசுந்தரி

தல விருச்சகம் : தில்லை மரம்

தீர்த்தம் : வியாக்ரபாத தீர்த்தம் ,சிவகங்கை

ஊர் : தில்லை , சிதம்பரம்

மாவட்டம் : கடலூர்

Thillai Natarajar Temple-Chidambaram

தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி
என்பதிற்கு பொருத்தமான தலம் இது . சைவத்தையும் ,சைவநெறிகளையும் பின்பற்றுபவர்கள் தன் வாழ் நாளில் கண்டிப்பாக தரிக்க வேண்டிய கோயில் . வரும் திருவாதிரை நாளில் இக்கோயிலை பற்றி நான் எழுத்துவதிற்கு அந்த எல்லாம் வல்ல ஈசனே காரணம். இக்கோயிலை பற்றி எனக்கு தெரிந்த மற்றும் பல வழிகளில் தெரிந்துகொண்டதை வைத்து தொகுத்துள்ளேன் ,எதாவது சிறப்புகள் விடுபட்டு இருப்பின் தயவுகூர்ந்து நீங்கள் தெரிவியுங்கள் .

 • தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலமே முதல் (1 ) தலம் மற்றும் காவேரி வடகரை தேவார தலங்களில் முதன்மையான தலமாகும் .
 • அப்பர், சுந்தரர்,சம்பந்தர் ,மாணிக்கவாசகர் ஆகியவர்களால் பாடப்பெற்ற தலம் .
 • மூவர் பாடிய தேவார திரு பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம்
 • இங்கு மூலவர் திருமூல நாதர் சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . ஆனால் இங்கு நடராஜரே பிரதான மூர்த்தியாகும் .
 • பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலமாகும் .ஆகாயம் -ஆரம்பம் எங்கே முடிவு எங்கே என்று தெரியாதபடி பரந்து விரிந்து தொடமுடியாதபடி விளங்குகிறது . சிவபெருமானும் அப்படித்தான் ! அவர் எங்கும் நிறைந்தவர் , நிர்மலமானவர்.
 • சித்- ஞானம், அம்பரம் -பெருவெளி =ஞானபெருவொளியே சிதம்பரம் ஆகும் .அம்பலத்தானின் வலது புறத்தில் திரையிடப்பட்டிருக்கும் ,தீபாராதனையின் போது திரை விலகும் சமயம் நாம் தரிசிப்பது தங்க வில்வ மாலையை !! இதுவே சிதம்பர ரகசியம் !!!
 • இக்கோயில் உலகின் பூமத்திரேகையின் சரியான மய்ய பகுதியில் அமைந்துள்ளது .
 • ஞானக்கூத்தன் நடனமாடும் இடமே “சிற்றம்பலம் ” என்று அழைக்கப்படுகிறது . தங்கத்தால் வேய்ந்த கூரையில் ஒன்பது கலசங்களால் ஆனது .ஐந்து தூண்கள் ஐம்பொறிகளையும் குறிக்கிறது . சிற்றம்பலத்தில் முன்னே உள்ள பொன்னம்பலம் 64 மரத்தூண்களின் மீது நிற்கும் கனக சபை ,64 கலைகளை குறிக்கும் இவ் பொன்னம்பலமும் தங்கத்தால் மேய்ப்பட்டுள்ளது .நமசிவாய என்ற பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்ட 21600 பொன்தகடுகளால் வேயப்பட்டுள்ளது .இதில் உள்ள 72000 அணிகளும் ,மனித உடலில் உள்ள 72000 நாடிகளை குறிக்கிறது மற்றும் மனிதனால் விடப்படும் சராசரியான மூச்சுக்காற்றின் அளவாகும் இது .
 • ஆணி திருமஞ்சனம் , ஆருத்ரா திருவிழாவிலும் அம்மையும் அப்பனும் தேரில் உலா வருவர். அன்றிரவு அவர்கள் ஓய்வு எடுக்கும் இடமே அரசம்பலம் ஆகும் .மறுநாள் நடுப்பகலில் புறப்பட்டு சிவகாமவல்லி மகிழும்படி நடராஜர் நடனம் ஆடி சிற்றம்பலத்தில் காட்சிதருவதே “திருக்கூத்து தரிசனம் “ என்று அழைக்கப்படுகிறது .
 • திருமூலட்டானத்தில் வீற்றியிருக்கும் திருமூலநாதர் அர்த்தஜாம பூஜை மிக விசேஷமானது ஏனெனில் அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு எல்லா ஆலயங்களிலும் உள்ள சிவகலைகளெல்லாம் இந்த சிவலிங்கத்தில் ஒடுங்குவதால் இங்கு அர்த்தஜாம பூஜை சிறப்புவாய்ந்தது .
 • நடராஜர் சன்னதியின் முன்னே உள்ள மண்டபத்தில் இருந்து சிவன், விஷ்ணு ,பிரம்மா ஆகிய மூவரையும் தரிசிக்கலாம் .
 • 108 திவ்யதேசத்தில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் உள்ளேயே இருப்பது விசேஷமானது . சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ள தலம்.
 • இறைவன் இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும் , ஆகாயம் என்ற அருவமாகவும் ,ஸ்படிகலிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள் செய்கிறார் .
 • வியாக்ரபாதர் பூஜித்ததால் பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரும் உண்டு .மாணிக்கவாசகர் ,பதாஞ்சலி,உபமன்யு வ்யாசர்,
  நீலகண்டர் ,சுகர் ,திருநாளை போவார்,கூற்றுவநாயனார்,கணம்புல்லநாயனர்,ஆகியவ்ர்கள் முக்தி பெற்ற தலம்.
 • திருமூலரின் நான்காவது தந்திரம் இடம்பெற்ற தலம் .
 • மூலவர் நடராஜர் திருவீதி வரும் ஒரே இடம் இவ் வீதி உலாவை காண உலகெங்கிலும் பக்த்தர்கள் வந்து நடராஜரை தரிசனம் செய்வார்கள் .
 • இவ் தலம் தரிசித்தால் முக்தி கிடைக்கும் தலம் ஆகையால் வாழ்நாளில் ஒரு முறையேனும் சிதம்பரம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் .
 • ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் அம்மன் சன்னதியில் உள்ளது .
 • இக்கோயிலை தரிசித்தவர்கள் அருகில் உள்ள தில்லை காளியையும் தரிசிக்க வேண்டும் .
 • 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு கோயில் , இக்கோயிலுக்கு சோழர்கள் திருப்பணி செய்துவந்துள்ளனர் என்று இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன , அதென்பிறகு பாண்டியவர்களும் ,கிருஷ்ண தேவராயரும் வழிபாடு திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகளில் உள்ளது.

அபிஷேகம் :
வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுகிறது மனிதக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும் .
1 . சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் கனகசபையில் மாலையில் அபிஷேகம் .
2 .ஆணி மாதம் உத்திர நட்சத்திரம் ராஜசபையில் அதிகாலையில் அபிஷேகம்
3 . ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
4 . புரட்டாசி மாதம் பூர்வ பட்சத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
5 . மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜசபையில் அதிகாலையில் அபிஷேகம்
6 . மாசி மாதத்தில் பூர்வ பட்சத்தில் கனகசபையில் மாலை நேரத்தில் அபிஷேகம்

ஸ்படிக லிங்கம் பூஜை நேரம் :

காலை 10 .00 – 11 .00
காலை 11 .30 – 12 .00
மாலை 05 .15 – 06 .00
இரவு 07 .00 – 08 .00
இரவு 09 .00 – 10 .00

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/05/sri-thillai-natarajar-temple-chidambaram.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 . 00 முதல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 முதல் இரவு 10 .00 மணி வரை

செல்லும் வழி :
சென்னையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் செல்லவேண்டும் . சென்னையில் இருந்து ரயில் வசதியும் உள்ளது . நகரத்தின் நடுப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது

Location:

          திருச்சிற்றம்பலம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *