Sri Sugavaneshwarar Temple – Salem

ஸ்ரீ சுவர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் கோயில் –  சேலம்

Sugavaeswarar temple,salem

இறைவன் : சுகவனேஸ்வரர் , கிளிவண்ணமுடையார்

இறைவி : சுவர்ணாம்பிகை , மரகதவல்லி

தல விருச்சம் : பாதிரி மரம்

ஊர் : சேலம்

மாவட்டம் : சேலம் . தமிழ்நாடு

சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். ஈசன் இங்கு ஒரு பக்கம் சாய்வாக காணப்படுகிறார் , மற்றும் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு காணப்படுகிறது .ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பாகமாகவும் , விஷ்யூ  பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பட்டுள்ளது .  இது வேறு எங்கும் காண இயலாத ஒரு அமைப்பாகும் .

இக்கோயிலில் கணபதிக்கு ஸ்ரீ மதவடி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சுகவன கணபதி, ஸ்ரீக்ஷிப்த கணபதி,ஸ்ரீ ந்ருத கணபதி, ஸ்ரீ விகடசக்ர கணபதி என பல கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணபதிக்கும் தனிச் சிறப்பு. இக்கோயிலில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு தேங்காய் ,பழம் ,சக்கரை ,மாலை வைத்து வழிபட்டால் குழந்தைகளுக்கு  ஏற்படும் உபாதைகள் நீங்கும் .

இக்கோயில், 13–ஆம் நூற்றாண்டில், மாமன்னன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் . இக்கோயிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன .

நவகிரகங்களில் ராகு மற்றும் செவ்வாய் இடம் மாறி உள்ளார்கள் , ஆதலால் இவ் கிரக தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது . நவகிரக தளத்தின் மேல் பகுதியில் பல்லி , உடும்பு உருவகங்கள் வடிக்கப்பட்டுள்ளது .

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் , கல்யாண பாக்கியம் , உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர் .

திறந்திருக்கும் நேரம் :

 காலை 6 .00 மணி முதல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 முதல் இரவு

 9 .00 மணி வரை

செல்லும் வழி :

சேலம் நகரத்திலேயே உள்ளது , பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது .

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *