Sri Subramaiya Swamy Temple – Vallimalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – வள்ளிமலை

Subramaniya swamy temple- vallimalai

வள்ளிமலை பார்ப்பதற்கே மிக அழகாக பரந்து விரிந்து மரங்கள் நிறைந்த ,கரடு முரடான பாறைகள் நிறைந்த ஒரு புது தோற்றத்துடன் காணப்படுகிறது . வள்ளி என்றாலே இச்சா சக்தி ,அதாவது ஆசை எண்ணங்களுக்கு வடிவம் வள்ளி .தேவையானை கிரியா சக்தி ,ஆசை எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருபவள் . இந்த ஆசை மற்றும் ஆற்றல்களை கட்டுப்படுத்தும்  ஞானசக்தியே முருக பெருமான் .

முதலில் கிழே ஆறுமுகநாத ஸ்வாமியின் கோயில் ,கோயில் பின்புறம் அழகான சரவண பொய்கை. அதை தாண்டி நாம் சென்றால் மலையடிவாரத்தில் வள்ளி பிராட்டியின் கோயில் உள்ளது .வள்ளி கைலயில் பறவையை விரட்ட பயன்படும் உண்டி வில் ,கவண் கல் வைத்திருக்கிறாள் .

பின்பு நாம் சுமார் 300 படிக்கட்டுகள் கொண்ட மலை பாதை மெது நாம் ஏறி சென்றால் முருக பெருமானின் கோயிலை அடையலாம் .இக்கோயிலானது ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயிலாகும் . இக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற கோயிலாகும் .

முன் மண்டபத்தில் நவ வீரர்கள் ,வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன் இருக்கிறார் . நுழைவு வாயிலில் உள்ள சன்னதியில் வள்ளி அம்மன் பாறையில் புடைப்பு சிற்பமாக உள்ளார் . கடந்து இன்னும் உள்ளே சென்றால் பாறையை குடைந்து அமைக்கப்பட்ட அந்த பகுதியில் முருகன் தனி சன்னதியில் வீற்றியுளார் .

நாம் அந்த பாறை கோயிலை வலம் வந்து சிறிது இடது புறமாக நடக்க ஆரம்பித்தால்  சுமார் 2 km தொலைவில் சச்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமம் அமைந்துள்ளது . இங்கு பொங்கு அம்மன் ,யானை போல் அமைந்துள்ள பாறையை நாம் காணலாம். கொஞ்சம் மேற்கு திசையை நோக்கி நடந்தால் ஒரு சுனை வருகிறது இதை சூரிய ஒளி படாத சுனை என்று சொல்கிறார்கள் . முருகன் வேங்கை மரமாக மாறி அதன் பின் உருவாகிய சுனை ,வள்ளி பறவைகளை விரட்டிய மண்டபம் ,மஞ்சள் தேய்த்த இடம் ஆகியவைகள் உள்ளன . மலை உச்சியில் ஈசனுக்கு கோயில் அமைந்துள்ளது .

இவைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கிழே இறங்கினால் சமணர்கள் குடவரை கோயிலை நாம் காணலாம் . சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர் ,இவர் முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் ,நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார் .முக்குடைக்கு கீழ் ஏழு தலைகள் கொண்ட நாகம் இவருக்கு அரணாக உள்ளது . எனவே இவரை  பார்சுவநாதர் என்று கூறுகிறார்கள் . இவரது பாதுகாவலராக ,அவர்களின் சாசன தெய்வமாகவும்  விளங்கினார்கள் . பத்மாவதி இய்யாகியம்மனும் , இயக்கியன் தர்ணேந்திரனும் ஆவார் .

இதில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது .தனது வலது கையை அபயமுத்திரையுடன் தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது .இது 9 ஆம் நூற்றாண்டை சார்ந்தது . தொல்லியல் கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-subramaiya-swamy-temple-vallimalai.html

செல்லும் வழி:


சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவில் ராணிப்பேட்டை, திருவலம் கடந்து அங்கிருந்து சுமார் 16 km தொலைவில் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :


இதன் அருகில்
1 . வில்வநாதீஸ்வரர் கோயில் – திருவலம்
2 . அரிஞ்சய சோழன் பள்ளிப்படை – மேல்பாடி
3 .சோமநாதீஸ்வரர் கோயில் -மேல்பாடி 

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *