Sri Ramanatheeswarar Temple – Vembakkam

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில்  – வெம்பாக்கம்

இறைவன் : ராமநாதீஸ்வரர்

இறைவி : பர்வதவர்தினி

ஊர் : வெம்பாக்கம்

மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு

சுந்தரரிடம் இறைவன் , ‘நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன் ‘ என்று அருளியதாலும் , புறவார் பனங்காட்டூரிலிருந்து வேறுபாடு அறியவும் இத்தலத்தை ‘வன்பார்தான் பனங்காட்டூர் ‘ என்று சுந்தரர் பாடியுள்ளார் . இந்த பனங்காட்டுர் என்ற ஊர் ஒரு தேவார பாடல் பெற்ற தலமாகும் ..வன்பாக்கம் என்ற ஊர் இப்போது வெம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது . இந்த வெம்பாக்கத்தில் தான் இந்த ராமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . சுந்தரரிடம் இறைவன் இந்தக்கோயிலில் தான் வீற்றியிருக்கிறேன் என்று சொல்வதில் இருந்து இந்த கோயிலின் பழமையும் ,பெருமையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம் .

அழகிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் கோயிலுக்கு அருகில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது . சமீபமாகத்தான் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு செய்துள்ளார்கள் . சிறிய நுழைவுவாயிலை கடந்து உள்ளே சென்றால் கருவறை சன்னதி வருகிறது , அதன் வழியே உள்ளே சென்றால் இறைவன் தாயார்  பர்வதவர்தினி நமக்கு காட்சி கொடுக்கிறார் . இறைவன் ராமநாதீஸ்வரர் அம்பாளின் வலது புறத்தில் தனி சன்னதியில் காட்சி கொடுக்கிறார் . இறைவனின் கருவறையின் உள் ரெங்கநாதர் புடைப்பு சிற்பம் உள்ளது . இது ஒரு தனி சிறப்பாகும் .

மண்டபத்தின் உள் முருகர் , விநாயகர் ,பிரம்மா ஆகியோர்கள் உள்ளார்கள்.  இங்குள்ள முருகர் சிலையை காஞ்சி சங்கராச்சாரியார் தந்ததாக கூறுகிறார்கள் .

கோயிலின் கருவறை மண்டபத்தின் நுழைவு வாயின் முன் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. கோயிலை வலம் வந்தால் மிக அழகான அமைதியான சூழலில் இந்த கோயில் அமைந்துள்ளதை நாம் காணலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/07/sri-ramanatheeswarar-temple-vembakkam.html

செல்லும் வழி :

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சென்றால் கலவை கூட்டு ரோடு வரும் அதன் வலது புறம் திரும்பி சென்றால் முதலில் அய்யங்கார்குளம் பின்பு திருப்பனங்காடு அதை தாண்டி சென்றால் வலது புறம் சாலை பிரியும் சுமார் 2 km  வெம்பாக்கம் வரும் . இந்த ஊரை தாண்டியே நாம் அழிவிடைதாங்கி பைரவர் கோயிலுக்கு செல்ல முடியும் .

Location :

ஓம் நமசிவாய !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *