ஸ்ரீ 1008 பகவான் மஹாவீர் திகம்பர் ஜெயின் கோயில் – வெம்பாக்கம்
ஜைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு
கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த மௌரியர், ஆசீவக நெறியை பின்பற்றிய தன் மகனான பிந்துசாரரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, ஜைன நெறியைத் தழுவினார். சந்திரகுப்த மோரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் ஜைன நெறி தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். பத்திரபாகு முனிவர், சந்திரகுப்த மோரியருடன் இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் ஜைன முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர், மைசூர் அருகேயிருக்கும் சமணவெள்ளைக்குளம் (எ) சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர், சோழ பாண்டிய நாடுகளில் ஜைனம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த ஜைன நெறி பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் ஜைனம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையானது.
ஜைன சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிசபதேவர். இறுதியானவர் மகாவீரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.
ஜைன நெறியில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும்[24], வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள்.
சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளது.
வெம்பாக்கம் மஹாவீர் கோயில்
இந்த ஊரில் மிக பழமையான சிவன் கோவிலும் , சமணர் கோவிலும் அமைந்துள்ளது . இப்போது நாம் காண்பது இந்த ஊரில் அமைந்துள்ள ஜெயின் கோயில் . மூன்று அடுக்கு ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் நேராக மஹாவீர் அமர்ந்துள்ள சன்னதியை காணலாம் . ஒரே கல்லில் மிக அழகாக வர்த்தமானரை வடிவமைத்துள்ளார்கள். அவரை தரிசித்து விட்டு கோயிலை வலம் வந்தால் நாம் பிரம்மதேவர் , தர்மதேவி மற்றும் பத்மாதேவி ஆகியோர்களின் சன்னதிகள் தனி தனியாக உள்ளது . அதுபோல் நவகிரஹ சன்னதியில் பல தீர்த்தக்காரர்கள் நவகிரகங்களாக காட்சி தருகிறார்கள் . மிக அழகாக இக்கோயில் உள்ளது , மிகவும் நன்றாக பராமரிக்கிறார்கள் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/08/sri-1008-bhagawan-mahaveer-digambar.html
செல்லும் வழி :
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சென்றால் கலவை கூட்டு ரோடு வரும் அதன் வலது புறம் திரும்பி சென்றால் முதலில் அய்யங்கார்குளம் பின்பு திருப்பனங்காடு அதை தாண்டி சென்றால் வலது புறம் சாலை பிரியும் சுமார் 2 km வெம்பாக்கம் வரும் . இந்த ஊரை தாண்டியே நாம் அழிவிடைதாங்கி பைரவர் கோயிலுக்கு செல்ல முடியும் .
Location: