Sri Karaneeswarar Temple – Saidapet

ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் – சைதாப்பேட்டை

இறைவன் : காரணீஸ்வரர்

இறைவி : சொர்ணாம்பிகை

தல தீர்த்தம் : கோபதிசரஸ் தீர்த்தம்

ஊர் : சைதாப்பேட்டை

மாவட்டம் : சென்னை

சென்னையில் உள்ள பழமையான மற்றும் பிரசித்திபெற்ற கோயில்களில் இந்த சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும் . சைவ வைஷ்ணவ எடுத்துக்காட்டாக உள்ள தளங்களில் இந்த சைதாபேட்டையும் ஒன்றாகும் . இக்கோயிலுக்கு அருகிலேயே பெருமாள் கோயிலும் உள்ளது .

தெற்கு நோக்கிய ஏழு நிலை இராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் விநாயகர் சன்னதியை அடையலாம் , அவரை தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தால் நாம் பஞ்ச சபைகளின் சுதை சிற்பங்களை காணலாம் . பின்பு நாம் முருகர் சன்னதி .சனீஸ்வரர் சன்னதி , பழனி ஆண்டவர் ,ஆஞ்சநேயர் ,வீரபத்திரர் மற்றும் நவகிரகங்கள்  சன்னதியை நாம் தரிசிக்கலாம் . முருகர் சன்னதிக்கு அருகில் வெளிச்சுற்றில் வேதபுரீஸ்வரர் தாயார் திரிபுரசுந்தரி சமேதராக காட்சிதருகிறார் .

கிழக்கு நோக்கியவாறு இறைவன் காட்சிதருகிறார் . கொடிக்கம்பம் ,பலிபீடம் மற்றும் நந்தி மண்டபத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் இறைவன் காருணீஸ்வரரை நாம் தரிசிக்கலாம் . அவருக்கு அருகிலேயே தாயார் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தன் கருணையே வடிவமாக நமக்கு காட்சி தருகிறார் .

 உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டீகேஸ்வரர் , துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.

தல வரலாறு :

 வசிஷ்டர் கேட்டதற்கு இணங்க இந்திரனின் தெய்வப்பசு காமதேனுவை இந்திரன் வசிஷ்ட முனிவருக்கு தொண்டு செய்ய கொடுத்தார் . தொண்டு செய்யும் சமையத்தில் அவரின் யாகத்திற்கு இடையூறு செய்தமையால் வசிஷ்டரின் கோபத்திற்கு ஆளாகி அவர் காமதேனுவை காட்டுப்பசுவாக மாறுமாறு சாபம் இட்டார்  . இதை அறிந்துகொண்ட இந்திரன் அவரிடம் இதற்கு பரிகாரம் கேட்க அவர் மயிலைக்கும் திருவான்மியூருக்கும் நடு மத்தியில் மேற்கே சோலை அமைத்து லிங்கத்தை பிரிதிஷ்டை செய்து அதற்க்கு மேற்புறத்தில் தடாகம் உண்டாகி பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார் . இந்திரனும் அவ்வாறே செய்தார் , சிவன் அவரின் பூஜையில் மகிழ்ந்து இந்திரனிடம் வேண்டும் வரங்களை கேட்குமாறு கூறினார் . இந்திரன் காமதேனுவை கேட்க அவரும் பசுவை மாற்றியோதோடு உன் கட்டளையால் கருமேகங்கள் சூழப்பட்டு , கார் மழை பொழிந்து குளிர்வித்ததால் இப்பகுதி “காரணி ” எனப் பெயர் பெற்று விளங்கும் என தெரிவித்தார் . அன்று முதல் சைதையின் அப்பகுதி காரணி எனவும் அங்கு உறையும் ஈஸ்வரன் காரணீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார் .

விழா சிறப்பு :

 ஆனியில் திருமஞ்சனம், சித்திரையில் கொடியேற்றம், ஐப்பசியில் கந்தசஷ்டி, மார்கழியில் ஆருத்ரா, தையில் தெப்பம் மற்றும் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 . 00 மணி முதல் 11 .00  மணி வரை , மாலை 4 . 00  முதல் இரவு 9 . 00 மணி வரை

Contact  Number : 044 – 23811668

செல்லும் வழி :

சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு  அருகில் இக்கோயில் உள்ளது . சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி ஜோன்ஸ் சாலை வழியாக சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .

Location Map :

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *