Sri Parimala Ranganathar Temple- Thiruindalur

ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயில் – திருஇந்தளூர்

Sri Parimala Ranganathar Temple- Thiruindalur

இறைவன் : பரிமள ரெங்கநாதர் ,சுகந்தவன நாதர்

தாயார் : பரிமள நாயகி

தல தீர்த்தம் : சந்திர புஷிகர்ணி

ஊர் : திருஇந்தளூர்

மாவட்டம் : மயிலாடுதுறை

மங்களாசனம் : திருமங்கையாழ்வார்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் .

சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் . அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில் .

 காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.அவைகள் யாதனில் திருவரங்க பட்டணம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும் .

தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய நோய் தோன்றவே அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப்பெற்றான்.அதனால்தான் அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருத்தலத்தை சந்திர புஷ்கரணி என்ற பெயர் பெற்றது .

பெருமாளின் திவ்ய தரிசனம் :

இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம் வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு.

மூலவர்  பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை தாயாரும் வணங்குகிறார்கள் . இமயனும், அம்பரிஷனும் எம்பெருமான் திருவடிகளை வணங்குகிறார்கள் .

தல வரலாறு :

தல புராணங்களின் படி இப்பகுதியை ஆண்ட அம்பரீசன் மன்னன் 100 முறையாக பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து அந்த விரதத்தை முடித்து மிகுந்த பலன்கள் கிடைக்கப்பெறும் நிலையிலிருந்தான். இதையறிந்த தேவர்கள் தங்களுக்கு இணையான ஆற்றலை 100 ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு கிடைத்துவிடும் என்று பயந்து, துர்வாச முனிவரிடம் தங்களுக்காக அம்பரீசனின் ஏகாதசி விரதத்தின் பலன் அவனுக்கு, கிடைக்காமல் செய்யுமாறு வேண்டினர்.

இதையேற்ற துர்வாச முனிவர் அம்பரீசன் ஏகாதசி விரதத்தை முடித்து உணவருந்தும் சமயத்தில் அம்பரீசனின் அரண்மனைக்கு வந்தார். அவரை உபசரித்த மன்னன் அம்பரீசனிடம், தான் ஆற்றில் சென்று நீராடி விட்டு திரும்பியவுடன் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் என கூறி சென்றார் துர்வாச முனிவர். குறிப்பிட்ட காலத்திற்குள் உணவருந்தி ஏகாதசி விரதத்தை முடித்து, விரத பலன்களை பெற விரும்பிய அம்பரீசன், தனது நாட்டு வேதியர்களின் அறிவுரை படி உள்ளங்கை அளவு தீர்த்தத்தை குடித்தால் கூட ஏகாதசி பலன்கள் கிடைக்கும் என்று கூற அதன் படியே செய்து ஏகாதசி விரத பலனை பெற்றான். தான் வருவதற்குள் தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிந்ததால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், அம்பரீசனை கொல்ல ஒரு பூதத்தை உருவாக்கி அவன் மீது ஏவினார்.

தன்னை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடிய அம்பரீசன் இந்த திருஇந்தளூர் கோவில் பரிமள ரங்கநாதர் காலில் விழுந்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். அம்பரீசனுக்காக நேரில் தோன்றிய பெருமாள் துர்வாசர் அனுப்பிய பூதத்தை அடக்கி, துர்வாசரின் கர்வத்தை அடக்கினார். அம்பீரீசனிடம் என்ன வரம் வேண்டும் என பெருமாள் கேட்ட போது தன்னை போன்றே இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரின் குறைகளையும் பெருமாள் தீர்க்க வேண்டும் என கேட்க, அதன்படியே நடக்கும் என அருள் புரிந்தார் பெருமாள்.

பரிகாரம் :

சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் திருப்தி அடையவில்லை. தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது. என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை போக்கியதாகச் சொல்கிறார்கள்.இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசனவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் குறை விலகிவிடும். மற்ற தலத்திற்குச் சென்றும்  பாபம் தீரவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாபம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாபம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/06/sri-parimala-ranganathar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6.30 மணி முதல் 11.30 வரையிலும். மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை .

செல்லும் வழி:

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 km தொலைவில் உள்ளது .நகர பேருந்துகள் நிறைய உள்ளன . சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை செல்லும் மற்றும் சென்னையில் இருந்து ரயில் வசதிகள் உள்ளன

English :

The Parimala Ranganathar Perumal Temple, or the Tiruindaloor temple, is located in Tamil Nadu, India. It is one of the 108 Divyadesams in the country, dedicated to Lord Vishnu. As the perumal of this place, converted the position of river Cauvery and Lord Chandra into a pious state, Thirumangaialwar calls him as a Brahmin. The vedas were created to instruct rules for human beings to lead a happy life. The Surya and Chandra revolve around the world to give prisperity (like wheels ie Chakra). Hence the vimaana of this place is called as Veda Chakra Vimaanam. Sri Rangam is known as Aadhi Arangam (first) while Thirukudanthai is Madhiya Arangam (Middle) and Thiru Indhaloor is known as Andiya Arangam (Last).

Belonging to the 108 Divyadesa temples, this is one with a five-tier tower measuring 350 feet long and 230 feet wide. The Chandra Pushkarani spring is in front of the temple. Planet Moon had a dip in the spring and got relieved of his curse. Chandra the moon worships the face of the Lord; Sun the feet and the naval Brahma. Cauvery worships the head; Ganga, King Ambarisha and Yama the lord of death worship the feet of the Lord here. Cauvery is considered more holy in this place than Ganga.

Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *