Sri Nageswarar Temple-Kumbakonam

ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயில் – கீழ் கோட்டம் ( கும்பகோணம் )

Sri Nageswarar Temple-Kumbakonam

இறைவன் : நாகேஸ்வரர்

இறைவி : பெரியநாயகி

தல விருச்சகம் : வில்வம்

தல தீர்த்தம் : சிங்கமுத்து தீர்த்தம்

புராண பெயர் : கீழ் கோட்டம்

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் இது 27 வது தலம். தேவார பாடல் 274 தலங்களில் 90 வது தலமாகும் .
Sri Nageswarar Temple-Kumbakonam
  • இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் .இக்கோயிலின் பிரஹனாயகி சன்னதி அருகில் உள்ள நடராஜர் மண்டபம் தேர் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இரு புறங்களிலும் உள்ள கல்லில் ஆன தேர்சக்கரம் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகிறது .இவ் சக்கரத்தில் உள்ள ஆரங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன .குதிரைகளும் யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது .இவ் மண்டபத்திற்கு “ஆனந்த தாண்டவ சபை ” என அழைக்கப்படுகிறது .நடராஜரின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையார் உள்ளது வேறு எங்கும் இல்லாத விசேஷமாகும் .
  • கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்றால் வெளி பிரகார சுற்றில் இடது புறம் சிங்க தீர்த்த கிணறு உள்ளது .படிகள் இறங்கி செல்லவேண்டும் .இரு புறங்களிலும் சிங்கங்கள் சுதையால் ஆனவை
  • இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.அமுத கலசத்தின் வில்வம் சிவலிங்கமாக மாறிய தலம் .உயரமான ஆவுடையாரின் மீது மிகவும் குட்டையான பானத்துடன் காட்சி தருகிறார் .இவ் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாகும் .
  • இக்கோயில் மகாகாளி சன்னதியும் ,எதிரே வீரபத்திரர் சன்னதியும் இருக்கிறது .இருவரும் போட்டி போட்டு நடனம் நடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது இது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது .
  • இக்கோயின் சிறப்பான அம்சம் பிரளயகால ருத்திரன் சன்னதி . மற்றும் தாயார் மண்டபத்தில் அழகான வண்ண சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன .
  • சித்திரை மாதம் 11 ,12 ,13 தேதிகளில் லிங்கத்தின் மெது சூரிய கதிர்கள் படும் .
  • நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆதலால் நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோயில் நாக தோஷ பரிகார பூஜைகள் செய்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-nageswarar-temple-kumbakonam.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 – 12 .00 ,மாலை 4 .30 – 8 .30 வரை

செல்லும் வழி :
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் கிழக்கு திசையில் நாகேஸ்வரர் சன்னதி உள்ளது .

Location:


தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *