Sri Marundeesar Temple-T.Idayar

ஸ்ரீ மருந்தீசர் கோயில் – திரு இடையாறு

Sri Marundeesar Temple- T Edayar

இறைவன் : மருந்தீசர்

தாயார் : ஞானாம்பிகை ,சிற்றிடை நாயகி

தல விருச்சகம் : மருதமரம்

தல தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம் அம்மன் சன்னதியில் கிணறாக
உள்ளது
ஊர் : திரு இடையாறு

மாவட்டம் : விழுப்புரம்

  • தேவார பாடல் பெட்ரா தலங்கள் 274 இல் இத்தலம் 224 வது தலமாகும் . நாடு நாட்டு தேவார சிவத்தலங்களில் 13 வது தலமாகும் .
  • எட்டாம் நூற்றாண்டில் ஒரிசா மன்னர்களால் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து சாளுவ நரசிம்ம மன்னர்களால் திரும்பவும் கட்டப்பட்ட கோயிலாகும் . இங்குள்ள கல்வெட்டுகளில் இக்குறிப்பு உள்ளது.
  • மாசி மாதம் 15 , 16 தேதிகளில் மாலை 5 .00 இருந்து 5 .15 வரை சூரிய கதிர் இறைவனின் மேல் விழுகிறது .
  • மேற்கு திசையை நோக்கிய சுயம்பு லிங்கம் ஆகும் .
  • சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் முருகனே நடுவில் இருப்பார் ஆனால் இங்கே பாலகணபதி குழந்தை வடிவில் குழந்தைகளுக்கு புடித்த லட்டு மற்றும் பலா சுளையுடன் காணப்படுகிறார் இவருக்கு ‘பலாச்சுளை’ கணபதி என்ற பெயர் உண்டு.
  • மருத மறை ஞானசம்பந்தர் அவதார தலம்.
  • சிவா பெருமான் பார்வதி தேவியருக்கு சிவ ரகசியத்தை சொல்லும்போது சுகப்பிரம்ம மகரிஷி கிளி வடிவில் அதை ஒட்டு கேட்டார் அதை கண்ட இறைவன் அந்த முகத்துடனே பூலோகத்தில் பிறப்பாய்என்று சாபம் இட்டார் ,அவர் இந்த இடத்தில வேதவியாஸருக்கு மகனாக பிறந்து இங்குள்ள மருதமரத்தில் தவம் இருந்து சாப விமோசனம் பெற்றார் .
  • மேற்கு நோக்கிய இறைவன் கிழக்கு நோக்கிய அம்பாள் சன்னதி உள்ள தலங்களை ‘கல்யாணக்கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு’ என்பார்கள் ஆதலால் இத்தலத்தில் திருமண நாள் தள்ளி போகிறவர்கள் மாலை எடுத்துவந்து இறைவன் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் சாய்த்து வேண்டிக்கொண்டால் திருமணம் நிச்சயம் நடக்கும் .
  • இக்கோயிலில் அகத்தியர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் அகத்தீஸ்வரர் என்ற பெயரோடு தனி மண்டபத்தில் உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-marundeesar-temple-tidayar.html

செல்லும் வழி
திருக்கோயிலூர் இருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் T . இடையாறு என்ற இந்த ஊர் உள்ளது .மிக அருகிலேயே கோயில் அமைந்துள்ளது .

Location:

அருகில் உள்ள கோயில்கள் :
இவூரின் அருகிலேயே பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .

1 . கிருபபுரீஸ்வரர்- திருவெண்ணெய் நல்லூர்

2 . சிவலோகநாதர்- திருமுண்டீஸ்வரம்

திவ்ய தேசம்
1 .திருவிக்ரம ஸ்வாமி – திருக்கோயிலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *