Sri Makara nendunkuzhaikathar Temple – Thenthiruperai

ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோயில் – தென்திருப்பேரை 

Makara nedunkuzhaikathar  temple, thenthiruperai

மூலவர் : மகரநெடுங்குழைக்காதர்

தாயார் : குழைக்காது வல்லி  நாச்சியார் 

தல தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம் 

விமானம்  :  பத்ர விமானம் 

ஊர் : தென்திருப்பேரை 

மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டம் , தமிழ்நாடு 

மங்களாசனம் : நம்மாழ்வார் 

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 88 வது தலமாகும் , நவ திருப்பதி தளங்களில் 6 வது  தலமாகும் . இத்தலமானது சுக்ரன் தலமாகும் . 

கோயில் அமைப்பு : 

தென்திருப்பேரை ஊரானது கிராமத்தின் பழமை மாறாமல் மரங்களும் , திண்ணைகள் அமைந்த அழகான வீடுகளும் நம்மை இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதை நம்மால் தவிர்க்கமுடியாது . கோயிலுக்கு முன் உள்ள சன்னதி தெருவானது ஒரே சீராக திண்ணைகளுடன் பழமை மாறாமல் பார்பதெற்கே வியப்பாக உள்ளது. 

தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்கரையில் ஊரின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை இராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சிதருகிறது .  இந்த ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் நம்மை வரவேற்கிறது. அங்கு கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் அர்த்தமண்டபம் அமையப்பெற்றுள்ளது. அதன் நடுவே தனி மண்டபத்தில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தாயார்களுடன் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் துவாரபாலகர்கள் காவல்புரியும் கருவறையில் மகரநெடுங்குழைக்காதர் காட்சித்தருகிறார்.

திருக்கோவில் உள் பிரகாரத்தில் தெற்கு திருச்சுற்றில் குழைக்காதவல்லி சன்னதியும், வடக்கு திருச்சுற்றில் திருப்பேரை நாச்சியார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.இதுதவிர வைணவ திருக்கோவில் பரிவார மூர்த்திகளான பன்னிரு ஆழ்வார்கள், இராமானுஜர், கிருஷ்ணன், நரசிம்மர் மற்றும் பிற சன்னதிகளும் உள்ளன.வெளித்திருச்சுற்றில் நந்தவனமும், வடக்கு பக்கம் பரமபத வாசலும் அமையப்பெற்றுள்ளன. 

இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் சன்னதி மற்ற கோவில்களை போல பெருமாளுக்கு நேரெதிராக இல்லாமல், சற்றே விலகியிருக்கிறது. இங்கு கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடுவதையும், அவர்கள் ஓதும் வேத மந்திர ஒலியை கேட்டு மகிழவும் விரும்பி, பெருமாளே கருடனை விலகியிருக்க சொன்னதாக ஐதீகம். இதனை நம்மாழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலவர் மகரநெடுங்குழைக்காதர்:
கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில்  ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார் . இவர் நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும், தன் காதுகளில் மீன் போன்ற அமைப்பை உடைய மகரகுண்டலங்கள் அணிந்து புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார். இவர் அணிந்திருக்கும் மகரகுண்டலகள் மிகவும்  பிரசித்தி பெற்றதாகும். 

கோயில் வரலாறு : 

திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர்.ஒரு சமயம் மகாவிஷ்ணு பூதேவியின் அன்பில் மூழ்கியிருந்ததைக் கண்ட லக்ஷ்மி, பகவான் தன்மீது இவ்வளவு அன்பு செலுத்தவில்லையே என்று வருத்தப்பட்டார். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க, அவரும் பூதேவியை சந்திக்கச் சென்றார். இவர் வருவதை அறியாத பூதேவி, எழுந்து வரவேற்காததால் சினம் கொண்ட துர்வாசர், நீ லக்ஷ்மியின் உருவத்தைப் பெறுவாய்என்று சாபமிட்டார். பூதேவி சாபவிமோசனம் கேட்க, தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள இந்த மகர நெடுங்குழைக்காதர் க்ஷேத்திரத்தில் தவம் செய்யுமாறு கூறினார்.அதன்படி தவம் செய்தபோது, ஒரு பங்குனி மாதம் பௌர்ணமி அன்று நதியில் நீராடும் போது மீன் வடிவில் இரண்டு குண்டலங்கள் கிடைத்தன. அவற்றைக் கையில் எடுத்தவுடன் அதை இத்தல பெருமாளுக்கு அந்த மகரக் குண்டலங்களை பூதேவி அளித்தார். அதனால் பகவானுக்கு ‘மகர நெடுங்குழைக்காதன் என்ற திருநாமம் ஏற்ட்டது. லக்ஷ்மியின் வடிவில் (ஸ்ரீபேரை) பூதேவி இங்கே தவம் செய்ததால், இந்த ஸ்தலத்திற்கு ‘திருப்பேரைஎன்ற பெயர் ஏற்பட்டது.

வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக, பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகவும்; பகவானை பூஜித்து அது நீங்கி மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது.

வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.

திருவிழாக்கள் 

பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழாவும், பத்தாம் நாள் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் நிகரில்முகில்வண்ணன் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.

ஆவணி மாதம் பவித்ரோற்சவமும், ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவமும் விமரிசையாக நடைபெறும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/09/sri-makara-nendunkuzhaikathar-temple.html

திறந்திருக்கும் நேரம் : 

காலை 7 . 00  மணி முதல் நண்பகல் 12 .00  மணி வரை   மாலை  5 . 00  மணி முதல் இரவு 8 . 00 மணி வரை 

செல்லும் வழி  : 

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 36-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது தென்திருப்பேரை. சாலையில் இருந்து சுமார் 1 km நடந்து உள்ளே செல்லவேண்டும் . 

அருகில் உள்ள கோயில்கள் : 

இவ்வூரில் நவ கைலாயத்தளமான கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது .  இவ்வூருக்கு அருகிலேயே நவ திருப்பதி தளங்கள் மற்றும் நவ கைலாய தளங்கள் உள்ளன  . 

English:

This place is the 88th place among the 108 Divya Desams of Perumal and the 6th place among Nava Tirupati places. This place is Shukran place.

Temple Structure:

We can’t help but feel that South Thiruperai village is old enough to have trees and beautiful houses with paddy fields that we can stay here. The sanctum street in front of the temple is amazing to see with its uniform pavements and unchanged from the old times.

The temple is situated in the middle of the town on the south bank of the Tamiraparani river. The three-tiered Rajagopuram overlooks the east. Entering beyond this Rajagopuram, the front hall welcomes us. There is a flagpole and an altar. If you go inside beyond that, there is Garudan Sannati directly opposite to the sanctum sanctorum.

Obeisance to him and enter through the next gate, Arthamandapam is established. In the middle of it, in a separate hall, Utsawar Nigarilmugilvannan is seen with his mothers. Behind him in the sanctum sanctorum guarded by Dwarapalakas, Makaranedungukhugatha is displayed.

In the inner prakaram of the temple, there is the shrine of Kukkadhavalli in the southern part of the temple and the shrine of Tiruperai Nachiyar in the northern part of the temple. Apart from this, the Vaishnava temple has the Parivar Murthys of twelve Azhwars, Ramanuja, Krishna, Narasimha and other shrines. In the outer part of the temple there is Nandavan and Paramapatha Vasa on the north side.

Here the Garudan sanctum opposite the sanctum sanctorum is not opposite Perumal like other temples but is slightly away. It is believed that Perumal asked Garuda to stay away because he wanted children to play in the place opposite the temple and enjoy listening to the sound of Vedic mantras recited by them. Nammalwar mentioned this in his Tiruvaimozhi Pasuram.

Location :

ஓம் நமோ நாராயாணா ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *