Sri Vaithamanidhi Perumal Temple – Thirukolur

ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோயில் – திருக்கோளூர் 

Srivaithamanidhi Perumal Temple- Thirukolur

மூலவர் : வைத்தமாநிதிப் பெருமாள் 

தாயார் : குமுதவல்லி நாச்சியார் , கோளூர்வல்லி நாச்சியார் 

உற்சவர் : நிஷேபவித்தன்

விமானம் : ஸ்ரீகர விமானம் 

தீர்த்தம் : ஸ்ரீநிதி தீர்த்தம் , தாமிரபரணி , குபேர தீர்த்தம் 

ஊர் : திருக்கோளூர் 

மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டம் , தமிழ்நாடு 

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றியும் நவ திருப்பதி தளங்கள் என்று அழைக்கப்படும் பெருமாள் கோயில்கள் உள்ளன , அவைகள் அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் சேர்ந்ததாகும் மற்றும் இத்தலங்கள் நவகிரகங்களின் பரிகார தளங்களாகவும் விளங்குகின்றன . 

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தலங்களில் ஒன்றாகும் . இது நவதிருப்பதி தலங்களில் 8வது தலமாகவும் , நவகிரகதலங்களில் செவ்வாய் கிரகத்தின் பரிகார தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் அவதார தலமாகவும் , குபேரன் தான் இழந்த நவநிதிகளை திரும்பப்பெற்ற தலமாகவும் இத்தலம் விளங்குகிறது . 

கோயில் அமைப்பு : 

மிகவும் அமைதியான அழகான ஒரு சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், மொட்டை கோபுரத்தை கொண்டது.அந்த  கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது.முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநயமாக கருவறை அமையப்பெற்றுள்ளது.வெளித்திருச்சுற்றில் தென்புறம் கோளூர்வல்லி தாயார் சன்னதியும், மேற்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் சன்னதியும், தொடர்ந்து வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.

முன்பக்கம் மதுரகவியாழ்வாருக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதி உள்ளது . 

கோயில் வரலாறு : 

பிரமாண்ட புராணம் மற்றும் தாமிரபரணி தீர்த்த மாண்மியம் முதலியவற்றில் இவ் திருப்பதியின் வரலாறு உள்ளது . ஒருமுறை குபேரன் பார்வதி தேவியின் சாபத்திற்கு ஆளாகி குபேரன் தன்னுடன் இருந்த சங்க நிதி , பத்மநிதி போன்ற நவநிதிகளையும் இழந்தார் , குபேரனை விட்டு பிரிந்த நவநிதியங்கள் பூலோகம் வந்து தாமிரபரணி நதியில் புனித நீராடி தவமிருந்து ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளிடம் அடைக்கலமாயின . 

எம்பெருமான் நவநிதியங்கள் மீது பள்ளிகொண்டு அவற்றை காத்து அருளினார் . பார்வதி தேவியும் குபேரனுக்கு சாபவிமோசனமாக உனது நிதியங்கள் பூவுலகில் திருக்கோளூரில் ஸ்ரீவைத்தமாநிதியிடம் அடைக்கலமாக உள்ளன , நீ அப்புனித தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி எம்பெருமானை வழிபட்டால் இழந்த நிதியங்களை அடையலாம் என்றார் . குபேரனும் அவ்வாறே சென்று செய்ய சபா நீக்கம் பெற்று பெரு செல்வம் பெற்றான் . மாபெரும் நிதியை தன்னகத்தே வைத்திருந்ததால் பெருமாள் ஸ்ரீவைத்தமாநிதியானார் . திருவை குபேரன் பெற்று கொண்டஊர் ஆனதால் திருக்கோளூர் ஆனது . 

ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் : 

ஸ்ரீ கரவிமானம் கீழ் கிழக்கே திருமுக மண்டலத்துடன்  மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர் வள்ளிதாயாரும் அமைந்திருக் கிறார்கள். இங்கு பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு உச்சவராக நிக்சோப வித்தான் உள்ளார். பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும்,கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள். அவரின் இடது உள்ளங்கை விண்னை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.

ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

யோக நரசிம்மர் சன்னதி : 

மூலவரான வைத்தமாநிதியின் கோவிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வழக்கமாக நம்பி கோவிலில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். ஆனால் எங்குமில்லாத வகையில் இந்த கோவிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ விழா நடைபெறும். மேலும் மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மதுரகவியாழ்வார் சன்னதி : 

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்பவர் மதுரகவியாழ்வார் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈசுவர ஆண்டு, சித்திரை திங்கள் வளர்பிறையுடன் கூடிய சதுர்த்தி திதியில் அந்தணர் குலத்தில் இத்திருக்கோளூர் தலத்திலே அவதரித்தார்.

இவர் பெரியதிருவடி என்று சிறப்பித்து கூறப்படும் கருடனின் அம்சமாக பிறந்தவராவார். இவர் வேத சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இனிமையான சொற்களால் கவிகளை இயற்றியதால் மதுரகவி என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

இவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து, குருபக்தி ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை அறியலாம். 80 வயதான மதுரகவி, தமது வடதேச பயணத்தின்போது தனக்கு ஒரு குருநாதர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி தெற்கு நோக்கி பயணித்து, 16 வயது நிரம்பிய நம்மாழ்வாரை குருவாக ஏற்றார், தனது ஆச்சாரியரின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடினார் மதுரகவியாழ்வார். பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூட பாடவில்லை. குருவின் மூலமாகவே ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது.

குபேரனுக்கே நிதி கிடைத்த தலம் இதுவென்பதால், இங்கே வந்து வழிபடுவோருக்கு பொருளாதார மேன்மை ஏற்படும் என்பது ஐதீகம். மற்றும் செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள் : 

ஸ்ரீவைத்தமாநிதி பெருமாளுக்கு ஆவணி புனர்பூசம் அவதார நாள் . அவனியில் பிரம்மோற்சவமும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்க்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிரபந்த சேவை திருவிழாவும் நடைபெறுவதுண்டு . 

Photos :

https://alayamtrails.blogspot.com/2023/09/sri-vaithamanidhi-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் : 

காலை 7 .30 முதல் நண்பகல் 12 .00 மணி வரை , நண்பகல் 1 .00 மணி முதல் இரவு 8 .30 வரை . 

செல்லும் வழி

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆழ்வார்திருநகரி தாண்டி சுமார் 3 km தொலைவில் இவ்வூர் வரும் . ஊருக்குள் செல்ல மெயின் சாலையில் இருந்து சுமார் 2 km உள்ளே செல்ல வேண்டும் . ஆழ்வார்திருநகரியில் இருந்து கோயில் வாசல் வரை செல்ல பேருந்துகள் உள்ளன . 

History:

Sri Vaithamanidhi Perumal Temple – Thirukolur

Around Tirunelveli and Tuticorin there are Perumal temples known as Nava Tirupati Thalas, all of which belong to the 108 Divya Desams which are worshiped by the Alvars and these Thalams are also the parikara sites of the Navagrahas.

Mangalasanam is one of the 108 Divya Thalas performed by the Alwars. It is the 8th place among Navathirupathi Thalams, the healing place of Mars among Navagraha Thalams, the incarnation of Madhurakavi Alvar within the twelve Azhwars, and the place where Kuberan got back his lost Navanidhi.

Temple Structure:

This temple is located in a very peaceful and beautiful small village. This temple is situated on the south bank of the river Tamiraparani. It has a moat gopuram. If we go inside beyond the gopuram, the hall welcomes us. There is a flagpole and an altar in the hall. Beyond that, there is Garudan shrine directly opposite to the sanctum sanctorum. If you worship him and enter through the next gate, the sanctum sanctorum is located in the middle. In the outer circle, Kolurvalli mother shrine is situated on the south side, Yoga Narasimha shrine is on the west circle, and Kumudavalli mother shrine is on the northern circle. There is also a well inside.

In the front there is a separate sanniti facing south to Madurakhaviyazwar.

Temple History:

There is a history of Tirupati in Pramanda Purana and Tamiraparani Tirtha Manmiyam etc. Once Kubera was cursed by Goddess Parvati and Kubera lost the Sangha Nidhi and Padmanidhi that he had with him, the Navanidhis that separated from Kubera came to earth and took a holy dip in the river Tamirabarani and took refuge with Sri Vaithamanidi Perumal.

Emperuman protected the Navanithiyams and blessed them. Goddess Parvati also cursed Kuberan and said that your finances are sheltered in the earth with Sri Vaitamanidi in Thirukolur, if you take a bath in the holy Tamiraparani Theertha and worship the Lord, you can recover your lost finances. Kubera also went to do the same and got rid of the Sabha and got a lot of wealth. Perumal became Srivaithamanidhi because he kept a huge amount of money in himself. Thirukkolaur became Thirukolaur as Kondoor was acquired by Lord Kuberan.

Srivaithamanidi Perumal:

Vaithamanithi Perumal is the Moolah with Thirumukha Mandal below Sri Karavimanam, Kumudavalli is on his right and Kollur Vallidayar is on his left. Here Perumal is seated in Sayana Golam. Nixopa Vithan is the Supreme Lord here. With a flute under Perumal’s head, an anjanam in his hand, and ink smeared in his hand, Vaitamanidi Perumal achieves service in the kolam of keeping track of where and how much money is. His left palm is facing the sky and his right hand is facing the earth.

After Adanur, it is only in this Thiruthalam that Perumal is lying on the adhisana with a wooden measuring stick (a wooden vessel used for measuring paddy) on the head.

Yoga Narasimha Shrine :

Yoga Narasimha sits behind the temple of Moolavara Vaitamanidi and gives grace. Pradosha is usually held only in Nampi temple. But unlike anywhere else in this temple, the Pradosha ceremony will be held by lighting the Niranchana lamp for Yoga Narasimha. There will also be a Thirumanjanam program for the Moolah.

Madhurakhaviyalwar Shrine :

One of the twelve Azhwars, Madhurakhaviyalwar incarnated in the Antanar clan in the year of Ishvara in the late ninth century in the year of Ishvara, on the waxing moon of Chitra Monday.

He was born as an aspect of Garuda, known as Periyathiruvadi. He was well versed in Vedic scriptures and had the ability to recite poetry. She was popularly known as Madhurakavi because she composed poems with sweet words.

From his biography, we can know how much devotion to Guru takes one in life. The 80-year-old Madhurakavi wanted to find a Gurunathar during his northern journey.

Accordingly, traveling southward, Madhurakaviyalvar accepted the 16-year-old Nammalvar as his Guru, became a vessel for his Acharya’s grace, and sang only to him. Not a single pashram was sung about Perumal. It was through Guru that he got the great blessing of salvation.

As this is the place where Kubera himself got funds, it is believed that those who visit here will get economic prosperity. And Mars related problems, doshas are believed to be removed.

Festivals:

Avani Punarbhusam Avatara day for Srivaithamanidi Perumal. Brahmotsavam is held in Avani and Prabandha Seva Festival is held in Chitrai Nakshatra in the month of Chitrai for Shri Madhurakavi Alvar.

Opening Hours:

7.30 am to 12.00 noon and 1.00 pm to 8.30 pm.

Directions:

On the road from Tirunelveli to Tiruchendur, this town comes at a distance of about 3 km beyond Alwar Thirunagari. To go inside the town, you have to go about 2 km from the main road. There are buses from Alwarthinagari to the temple gate.

Location:

ஓம் நமோ நாராயணா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *