Sri Madhava Perumal Temple – Mylapore

ஸ்ரீ மாதவப்பெருமாள்  கோயில் – மயிலாப்பூர்

இறைவன் : மாதவ பெருமாள்

தாயார் : அமிர்தவல்லி தாயார்

தல விருச்சம் : புன்னை

தல தீர்த்தம் : சந்தானபுஸ்கரிணி

ஊர் : மயிலாப்பூர் , சென்னை

மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு

சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் தனி சிறப்பையும் பழமையும் கொண்டது இந்த கோயில் . முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் அவதரித்த புண்ணிய தலம் .

சுமார் 800 வருடங்கள் மேல் பழமையான கோயில் . சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.

ஐந்து அடுக்கு ராஜகோபுரம் அதன் முன் நான்கு தூண்களை கொண்ட மண்டபம் அமைந்துள்ளது . ராஜகோபுரத்தின் உள் நுழைந்தால் பலிபீடம் ,துவாஜஸ்தம்பம், கருடன் சன்னதி உள்ளது . இடதுபுறத்தில் நன்கு கால் மண்டபம் அதன் அருகில் மஹாலக்ஷ்மி பிறந்த சந்தான புஷ்கரிணி அமைந்துள்ளது .

இங்கு மூலவர் மாதவப்பெருமாள் கல்யாண கோலத்தில் காட்சிகொடுக்கிறார் . இதனால் இவருக்கு கல்யாண மாதவன்  என்ற பெயரும் உண்டு . இவரின் வலது புறத்தில் தாயார் வேதவல்லி தனி சன்னதியில் உள்ளார் . இவர் பெருமானை திருமண செய்ய இங்குள்ள சந்தான புஷ்கரிணியில் ஒரு மாசி மாதத்தன்று குழந்தையாக அவதரித்தார் , இதை ஒவ்வொரு மாசி மாதமும் விழாவாக கொண்டாடுகிறார்கள் ,அன்று மட்டும் தாயாரோடு பெருமாளும் சேர்ந்து எழுந்தருளுகிறார் . அன்று பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி தாயாரை வணங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது .

பேயாழ்வார் அவதாரம்

முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இக்கோயிலுக்கு அருகில் உள்ள மணிக்கைரவம் என்ற கிணற்றில் செவ்வல்லி மலரில் அவதரித்தார் . இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உள்ளது .ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் ஒட்டி 10 நாள் உற்சவம் நடக்கிறது . பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பெருமாள் அருளினார் . இந்த நிகழ்ச்சியும் , பேயாழ்வார் கிணற்றில் அவதரித்த நிகழ்ச்சியும் , திருமிசையாழ்வார் பேயாழ்வாரிடம் சிஷியராக இருந்து உபதேசம் பெற்ற நிகழ்ச்சியும் உற்சவத்தின் போது நடக்கிறது.  

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 9  மணி  வரை

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-madhava-perumal-temple-mylapore.html

அமைவிடம் :
சென்னையின் முக்கியமான பகுதியான மைலாப்பூரில் இக்கோயில் அமைந்துள்ளது . முண்டக்கண்ணியம்மன் கோயில் அருகில் இத்தலம் அமைந்துள்ளது ,இக்கோயிலின் அருகிலேயே கபாலீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது .

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *