Essential guide to Sri Dharbaranyeswarar Temple, Thirunallar

Dharbaranyeswarar Temple Overview

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் – திருநள்ளார்

Sri Dharbaraneyeswarar Temple-Thirunallar

இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர் , திருநள்ளாற்றீஸ்வரர்

இறைவி : பிராணேஸ்வரி , பிராணாம்பிகை

தல விருட்சம்  : தர்ப்பை

தல தீர்த்தம் : நளதீர்த்தம் ,பிரம்மதீர்த்தம் ,வாணிதீர்த்தம்

ஊர் : திருநள்ளார்

மாவட்டம் : காரைக்கால் , பாண்டிச்சேரி பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தர்

போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகமார்த்த பைங் கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்

நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

…… திருஞானசம்பந்தர்

தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை தளங்களில் இது 52 வது தலம். தேவாரம் பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 115 வது தலம் இது. நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்கு உரிய முக்கிய பரிகார தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. இக்கோயிலானது சப்த விடங்க தலங்களில் ஒன்று.

கோயில் அமைப்பு :

கோயிலானது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உயர்ந்து இருக்கிறது . கோயிலுக்கு முன் நுழைவு வாயில் உள்ளது  நுழைவு வாயில் முன் பிரம்மதீர்த்தம் உள்ளது .

கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் முன் முத்திரம் மண்டபமாக மாற்றப்பட்டு அங்கு அலுவலகம் உள்ளது . அப்படியே உள்ளே சென்றால்  வலது புறத்தில் சனீஸ்வர பகவான் சன்னதி மற்றும் தாயார் சன்னதி உள்ளது . அப்படியே வாயிலை கடந்து உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் நந்தியை தரிசிக்கலாம் .

நேரே சென்றால் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் . இவர் தர்ப்பை வழியாக வந்ததால் இப்பெயர் பெற்றார் . மேலும் அவரது தலையில் ஒரு வடு உள்ளது .

கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி ,விநாயகர் , பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர்கள் உள்ளார்கள் .கருவறை பக்கத்தில் உள்ள வெளி சுற்றில் உன்மத்த நாடான தியாகசேகர தேவி நீலோத்லாம்பாளுடன் இருக்கிறார் . தியாகராஜர் நாக விடங்க தியாகர் – ஸ்ரீ செண்பக தியாகராஜர் என்றும் , நடனம் – உன்மத்த நடனம் என்றும் அழைக்கப்படுகிறது . இங்கு மகரந்த லிங்கத்திற்கு அபிஷேகம் தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது .

உள் பிரகாரத்தில் சுந்தரர் , 63 நாயன்மார்கள் , நாளேஸ்வரர் ,தல விநாயகர் ,ஸ்வர்ண கணபதி ,சப்த விடங்க தல சிவலிங்கங்கள் ,சுப்ரமய்யர் ,ஆதிசேஷன் , நள நாராயண பெருமாள் ,மஹாலக்ஷ்மி ,பைரவர் ,நடராஜர் சபை மற்றும் உற்சவர்கள் , தல விருட்சமான தர்ப்பை , வலது பக்கம் இடையன் மற்றும் அவன் மனைவி மற்றும் கணக்கர் அகியோர்களுக்கான கோயில் மற்றும் மண்டப தூண்களில் 10 வகையான நடன படங்கள் உள்ளன .

அப்படியே நாம் முன் வந்தால் சனி பகவான் சன்னதியை அடையலாம் . இவரின் வலது மற்றும் இடது புறங்களில் கும்பம் மற்றும் மகர ராசி புடைப்பு சிற்பங்கள் பித்தளை தகடுகளால் மூடப்பட்டிருக்கும் . அவரை வணங்கிவிட்டு நாம் தாயார் பிராணாம்பிகை சன்னதியை அடையலாம் .

தல வரலாறு :

நிடத நாட்டு மன்னன் நளனை காதலித்து கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. தமயந்தி மீது கோபம் கொண்ட தேவர்கள் நளன் மீதும் பொறமை கொண்டனர். நளனுக்கு ஏழரை சனி பிடித்தது. இதனால் எல்லா செல்வத்தையும் இழந்தான். நாடு இழந்து வனத்தில் தன்னுடன் வந்த தமயந்தியையும் பிரிந்து சேவகனாக,சமையல் செய்பவராக மாறினான் நளன்.

ஏழரை சனி விடும் காலம் வந்தது. ஈசன் அருளால் திருநள்ளாறு தலம் வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான். நளன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

நளமகாராஜனை, சனிபகவானின் பிடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.

சனீஸ்வரர் வணங்கும் முறை :

வீட்டில் இருந்து அணிந்து சென்ற உடையுடன் நள தீர்த்தத்தில் குளிக்க வேண்டும். பின்பு நல்லெண்ணெய் தேய்த்து, சீயாக்காய்ப் பொடி தேய்த்து குளிப்பது ஐதீகம். நீராடிய பின், காய்ந்த உடை உடுத்தி, ஈரத் துணியை குளக்கரையில் ஓரமாகப் போட்டுவிட வேண்டும்.

குளித்து விட்டு ஆடை மாற்றிய பின்னர் குளக்கரையில் நள விநாயகருக்குச் சிதறுகாய் உடைக்க வேண்டும். அப்போது பரிகாரம் நல்ல முறையில் நிறைவேற பிரார்த்தனை கொள்ள வேண்டும். கோயிலுக்குச் சென்று மூலவர் தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் பிராணாம்பிகையை தரிசிக்க வேண்டும். தியாகவிடங்கர், மரகத லிங்கம் ஆகியவற்றை வணங்கிய பின் சனி பகவானை வணங்க வேண்டும்.

பிரார்த்தனை :

சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

இக்கோவில் 9 ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள் இக்கோவிலை விரிவுபடுத்தினார்கள்.

இக்கோயிலானது சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாகும் . மற்ற ஆறு கோயில்கள் திருவாரூர் ,நாகப்பட்டினம் ,திருமறைக்காடு ,திருக்காரையில்,திருவாய்மூர் ,திருக்கோழி ,திருக்குவளை ஆகிய ஊர்கள் ஆகும் .

Temple Images:

https://alayamtrails.blogspot.com/2026/08/sri-dharbaranyeswarar-temple-thirunallar.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

Contact Number : 04368 – 236530 , 236504

செல்லும் வழி :

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு எனும் ஊரில் அமைந்துள்ளது.  காரைக்காலுக்கு சென்னையிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது . கரையிலிருந்து சுமார் 5 KM தொலைவில் திருநள்ளார் உள்ளது .

This dharbaranyeswarar temple is situated in the village of Thirunallar in Karaikal district.

Additionally, this temple is one of the thevaram padal petra thalam.

This temple is one of saptha vidanga thalam.

This temple is one of the Navagraha parihara thalam.

People believe he resided in the temple to lift the curses of Shani, the planet Saturn.

Location:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply