Sri Agneeswarar Temple_vanagaram

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் – வானகரம் (சென்னை )

இறைவன் : ஸ்ரீ அக்னீஸ்வரர்

அம்பாள் : ஒளஷாதாம்பிகை

ஊர் : வானகரம் ,சென்னை

பழமை : 1000 மேற்பட்ட கோயில் என்று கருதப்படுகிறது

Sri Agneeswarar Temple-Vanagaram

சென்னையில் உள்ள மிக பழமையான கோயில்கள் காலத்தின் மாற்றத்தினாலும் அந்நியரின் தாக்குதலாலும் பல இடங்களில் மறைந்து சிதைந்தும் போயிருந்தன . பல சிவனடியார்களாலும் பத்தர்களாலும் பல அன்பர்களாலும் நிறைய கோயில்களும் தெய்வ சிலைகள் மீட்டெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன .

அவ்வாறு சிதைந்து இருந்த கோயிலை திருப்பணி செய்து இக்கோயிலில் இரண்டு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றது . ரம்மியமான இயற்கை அழகோடு விவசாய நிலத்திற்கு நடுவே இக்கோயில் அழகாக காட்சிதருகிறது .

இறைவன் அக்னீஸ்வரர் பெரிய லிங்க திருமேனியுடன் காட்சி தருகிறார்
அவருக்கு இடது புறத்தில் அம்பாள் ஒளஷாதாம்பிகை காட்சிதருகிறார் .
சிந்தாமணி விநாயகர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார் அடுத்ததாக முருகன் மனைவியருடனும் அவர்களுக்கு முன்பாக பாம்பன் குமரகுரு ஸ்வாமியின் சன்னதி உள்ளது . அடுத்ததாக தியான மண்டபம் உள்ளது அதன் உள்ளே பஞ்ச பூத பானலிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்
முருகன் சன்னதியின் முன் நாகத்தை கழுத்தில் சுற்றியபடி லிங்க திருமேனி உள்ளது . பெரிய துர்கை அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்கள் .பின்பு நவகிரஹ சன்னதி தாமரை பீடத்தில் அமைத்துள்ளார்கள் .நடுவே சூரியன் தன்னுடைய வாகனத்தில் வருவதுபோல் அமைத்துள்ளார்கள் ,கால பைரவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது .

இக்கோயிலுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த எண்ணெய் மற்றும் பொருள் உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-agneeswarar-templevanagaram.html

அமைவிடம் :
மதுரவாயல் bypass சாலையின் (ஏரிக்கரை சிக்னல் தாண்டி) service சாலையில் சென்றால் நடுவில் ஒரு சாலை பாலத்தின் நடுவில் செல்லும் அதன் வலது புறத்தில் திரும்பியவுடன் இடது புறத்தில் பார்த்தால் இக்கோயில் தெரியும் .

முகவரி
ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில்
வானகரம் , சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *